This gallery contains 1 photo.
பாரதி மணியை முன்வைத்து….
நாஞ்சில் நாடன் நான் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருந்தபோது, நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. திடீரென ஒரு நாள் மாலை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தனர் ஐந்து மூத்த ஆண்கள். எனக்கப் போது இருபத்தோரு வயது. இன்னும் படிப்பு முடித்திருக்கவில்லை . வேலை கிடைத்திருக்கவில்லை. அஃதென்றும் பிரச்னை இல்லை என்றும், வேலை … Continue reading
திரு நாஞ்சில் நாடன் அவர்களின் செம்மொழி பாதுகம் கதைக்கு வாட்ஸாப்பில் வந்த அங்கத விமர்சனம் .நன்றி திரு மகரபூஷணம். பத்ம விருது,செம்மொழி விருது வாங்கினால் பாத்ரூம் கட்டண விலக்கு கிடைக்குமா ? விருது உருவான நாளிலிருந்து இன்று வரை யாரும் கேட்காத கேள்வி; யாருக்குமே கேட்க வேண்டும் என்று தோன்றாத கேள்வியும் கூட.மக்கள்&மாநில அவை 2-உம் … Continue reading
This gallery contains 1 photo.
எம் மூத்த எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களின் ‘புத்தம் வீடு’ நாவல் வாசித்துக்கொண்டிருந்த என் பாண்டிச்சேரி நண்பர் அமரநாதன் திடீரென அலைபேசியில் கேட்டார்- ஓர்மை எனும் சொல்லுக்கு என்ன பொருள் என்று. அவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். கணிதம் பயிற்றியவர். எல்லா அர்த்தத்திலும் பாண்டிச்சேரியில் எமக்கொரு சரணாலயம். செம்மூதாய் கி.ரா., ஃபிரெஞ்சுப் பேராசிரியர் மொழிபெயர்ப்பாளர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயக்கர், நாகரத்தினம் கிருஷ்ணா, இதழாளர் பி.என்.எஸ்.பாண்டியன், … Continue reading
This gallery contains 1 photo.
இசை நாஞ்சில் நாடனின் “பாடுக பாட்டே” சமீபகாலமாக என்னிடம் கொஞ்சம் நாஞ்சில் நாடன் வாசம் அடிப்பதாகச் சொன்னார் ஒரு நண்பர். இருவருக்கும் பொதுவான பழந்தமிழ் இலக்கிய ஈடுபாட்டைக் கருதி அவர் இப்படிச் சொல்லியிருக்கக் கூடும். இதில் நாஞ்சிலுடையதைப் புலமை என்றும், என்னுடையதை ஆர்வம் என்றும் வரையறுக்கலாம். சமீபத்தில் வெளியான என் கட்டுரைத்தொகுப்பின் தலைப்பு “தேனொடு மீன்”. … Continue reading
This gallery contains 1 photo.
எப்போதுமே,,,நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தில் ஒரு அங்கதம் இருக்கும்,,, !அது,,சமயத்தில் குத்தாலத்துச் சாரல் மழை போல,,பெய்யும்,,,!ஏன்யா,,,திப்பரப்புன்னு சொல்ல மாட்டியளோ ? என்னு கேட்டிராதிய,,, சில சமயத்துல,,,,இப்ப,,கன்னியாரி மாவட்டத்துல பெய்த,,கோடை மழையாட்டம்,,,அடிச்சுப் பொழிக்கும்,,,அடிச்சிப் பொழிக்கிற ஆட்டத்துல,,,,அங்கதத்துக்கே அங்கதம்,,,,வந்து,,சன்னதம் வந்துரும்,,,,சாமீ கொண்டாடியாட்டு ஆராசனை வந்து ஆடுக ஆட்டத்தைப் பார்த்தா ? என்னய்யா? மனுசன்,,இந்த கிழிகிழிக்கானே ?எவனும்,, எந்த அரசியல் … Continue reading
நாஞ்சில் நாடன் ‘கண்ணீரும் கம்பலையும்’ எனும் சொற்றொடரின் கம்பலை எனும் சொல் தேடிப் புறப்பட்ட போது, அது என்னைத் தொல்காப்பியம் வரை நடத்திச் சென்றது. கம்பலை எனும் தலைப்பில் முழுநீளக் கட்டுரை எழுதவும் தூண்டியது. அதுவே பிறகெனது கட்டுரைத் தொகுப்பு ஒன்றின் தலைப்புமாயிற்று. அஃதே போன்று கருதித்தான் கால் பெயர்த்தேன் ‘கத்தி கப்படா’ எனும் சொற்றொடர் … Continue reading
This gallery contains 1 photo.
நமக்கென்ன அதைப்பற்றி? “மயிரே மாத்திரம் என்று போய்விடலாம் நாம். சோலி மயிரைப் பாருவே! என்றிருக்கலாம். ‘மயிருக்கு சமானம்’ என்று நினைக்கலாம். “மயிராச்சு” என்று அலட்சியப் படுத்தலாம். “மயிரு மண்ணாங்கட்டீண்ணுட்டு. வேற பொழப்பு மயிரு இல்ல பாரு என்று புறக்கணிக்கலாம். “மயிரைச் சுட்டுக் கரியாக்க முடியுமா டே? எனலாம். இது வெறுமன முட்டைக்கு மயிரு புடுங்கப்பட்ட வேலை … Continue reading
This gallery contains 1 photo.
விடாக்காய்ச்சலுக்கு மருந்து கண்டாயிற்று! விலை, வினியோகம், இருப்பு, தரகு, யாவும் தீர்மானித்தாயிற்று! அரச குலங்களின் பங்கு உரைத்தாயிற்று! அறுவடை நடக்கும் கம்பலை இன்றி! இனி நோய் பரப்புதல்… நாயோ, காகமோ, பகல் கொசுவோ காற்றோ, நீரோ, மாசுத் தூசோ உத்தேச மார்க்கம் உறுதிபடல் வேண்டும்! ………………………………………………………..நாஞ்சில் நாடன்..2019
This gallery contains 1 photo.
சாம்ராஜ் · நாஞ்சில் நாடனின் மிதவை நாவலை முன்வைத்து நாஞ்சில்நாடனின் நான்காவது நாவலான மிதவை 1986இல் வெளிவருகிறது. என் தனித்த வாசிப்பில் ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரைகள்’ மூன்றையும் அடுத்தடுத்து வாசிக்கலாம் என அந்தரங்கமாய்க் கருதுவேன். மூன்றுக்கும் ஒருவித தொடர்ச்சியும் உள்ளார்ந்த ஒரு சரடும் இருக்கின்றன, இன்னும் நுணுக்கமாகப் போனால் மிதவையின் நீட்சியே ‘சதுரங்கக் … Continue reading
This gallery contains 2 photos.
தன் தனிப் பேச்சில் சொல்பவற்றை பகிரங்கமாக எழுதுகிறவர், தான் உலகில் எதிர்பார்க்கும் அறங்களைக் கெடுக்காத வகையில் பெரிதும் வாழ்பவர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். தன்னிடம் கூட தன்னுடைய இதுநாள் வரையிலான வாழ்க்கையின் சுவடுகளால் பாரபட்சம் இருக்கக் கூடும் என்கிற தெளிவு உள்ளவர். நமக்கும் காழ்ப்புகள் உள்ளன, கட்டுப்படுத்தும் மனச் சாய்வுகள் உள்ளன என்பதை அறிந்தவர். … Continue reading
This gallery contains 1 photo.
“மாரி வாய்க்க!” நாஞ்சில் நாடன் பதிற்றுப் பத்து என்னும் நூலின் எட்டாம் பத்துப் பாடிய புலவர் அரிசில் கிழார் மட்டுமே பாட்டும் தொகையும் எனும் பதினெட்டு சங்க இலக்கிய நூல்களில் தகடூர் எனும் சொல்லை ஆண்டிருக்கிறார். அன்றைய தகடூர்தான் இன்றைய தர்மபுரி என்பதை நான் அறிந்துகொண்டேன். அதை அறிந்துகொள்ளக் காரணமாக இருந்தவர் கால் நூற்றாண்டுக்கு முன்பெனக்கு … Continue reading
This gallery contains 1 photo.
சுனில் கிருஷ்ணன் நாஞ்சில் நாடனின் நாவல்களை முன்வைத்து 1, நாஞ்சில் நாடன் 150 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சொல்லாய்வுகள் சார்ந்து தொடர்ந்து முக்கியமான பல கட்டுரைகளை அண்மைய ஆண்டுகளில் எழுதி வருகிறார். தோராயமாக நாநூறு கட்டுரைகளுக்கு மேல் இருக்கலாம் என உரையாடலின்போது கூறினார். முறையே ‘கறங்கு’ … Continue reading
This gallery contains 2 photos.
கோவையிலிருந்து செயல்பட்டுவரும் “சிறுவாணி வாசகர் மையம்”2018 முதல் ஆண்டுதோறும் சமகாலத்தில் வாழும் படைப்பாளுமையான திரு.நாஞ்சில்நாடன் பெயரில் விருதுவழங்கி வருகிறது. 2021 க்கான “நாஞ்சில்நாடன் விருது” “மணல்வீடு”திரு. ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.விழா பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். விருதாளர் பற்றி… சேலம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்த தவசி கருப்புசாமி என்கிற மு.ஹரிகிருஷ்ணன் (44)ஆவணப்பட இயக்குநர்.ஓர் நிகழ்த்து … Continue reading
This gallery contains 1 photo.
நாஞ்சில் நாடன் இடுக்கண் எனும் சொல்லுக்குத் துன்பம் என்று பொருள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்பார் திருவள்ளுவர். ‘இடுக்கண் களைவதாம் நட்பு’ என்கிறார். இடுக்கண் எனும் சொல்லுக்கு Distress, Woe, Affliction என்று பொருள். ‘இடுக்கண் வந்துள்ள காலை, எரிகின்ற விளக்கு’ காற்றில் நடுங்குவது போல, மனம் நடுக்குறும் என்பார் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணி … Continue reading
This gallery contains 1 photo.
ஜெயமோகன் நாஞ்சில்நாடனின் கதைகளில் மிகநம்பகமான ஒரு புறச்சூழல் இருப்பதை நீங்கள் காணலாம். அது நாஞ்சில்நாடாக இருந்தாலும் சரி, மும்பையாக இருந்தாலும் சரி, கூர்மையான தகவல்களுடன்கூடிய சித்தரிப்பு நம்மை அந்தச்சூழலை மிகத்தெளிவாக கண்முன் என பார்க்கவைக்கிறது. ‘அம்பாரிமேல் ஓர் ஆடு’ என்ற ஆரம்பகால கதையையே எடுத்துக்கொள்ளுங்கள். மும்பையின் ஓர் உயர்தர சபாவின் மிதப்பான சூழலை எந்த முயற்சியுமில்லாமல் … Continue reading