Monthly Archives: மார்ச் 2020

பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி’ என்ற சொலவம் என்  அம்மை சரசுவதியால் அடிக்கடி சொல்லப்படுவது. பூவிதழ் ஒன்று பட்டால்கூட, பொன் போன்ற திருமேனி நொந்து போகுமாம் சிலருக்கு. மலையாளத்திலும் இந்த சொலவம் உண்டு. அஃதென்ன, பொன்மேனி என்றால் பூவினும் மென்மையான மேனி  என்பது? பொன் மென்மையான உலோகமா? இங்கு பொன் என்றால் நிறத்துக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

படுவேன், படுவது எல்லாம்!

This gallery contains 1 photo.

“சரி, போய்ப் படு”, “கொஞ்சம் படுத்து எந்திரிச்சா சரியாகும் வே!”, “வந்து படுட்டீ மூதி”, “காய்ச்சல் வந்து படுத்துக் கெடக்கான்”, “எப்பவும் படுத்த படுக்கைதானா?”, “படுத்தவன் எந்திரிக்கல்லே, அப்பிடியே போய்ச் சேந்துட்டான் பாவி மட்டை” என்று எத்தனையோ ‘படு’ கேட்கிறோம் தினமும். அந்தப் ‘படு’ என்பது கிடத்தல். படுக்கை என்பதை மலையாளம் கிடக்கை என்கிறது. படுத்தாச்சா … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

புலரி, மலரி, அலரி

This gallery contains 3 photos.

காலையில் கண் விழித்ததும், கைபேசியில் முப்பதுக்கும் குறையாத ‘Good Morning’ செய்திகள் காத்திருக்கின்றன. வெறுமனே சொற்றொடர்களாக, அற்புதமான மலர்ச்சிரிப்புகளுடன், இயற்கைக் காட்சிகளுடன், ஒப்பற்ற கடவுளர் சிலைகளுடன், ஓவியங்களுடன், சான்றோர் வாக்குகளுடன், அறவுரைகளுடன், கவி வரிகளுடன் எனப் பற்பல வகைகளாக. பண்பு கருதி நாமும் மறுமொழி இடுகிறோம். அனுதினமும், பத்துத் திசைகளிலும் இருந்து, உலகம் முழுக்க எத்தனை … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

புன்கவி சொன்னேன்!

This gallery contains 1 photo.

இது எனது பதினாறாவது கட்டுரைத் தொகுப்பு. தேர்ந்தெடுத்த கட்டுரைத் தொகுப்புக்கள் ஐந்தும் நீங்கலாக. 2001-க்குப் பிறகே நான் கட்டுரை எழுதவந்தேன். திரும்பிப் பார்க்கும்போது அறுவடை பற்றிய மனக்குறை இல்லை. உத்தேசமாக முந்நூறுக்கும் அதிகமான கட்டுரைகள் நவீன தமிழுக்கு எம் பங்களிப்பு. ‘கருத்த வாவு’ என்று தலைப்பிடப்பட்ட இந்தத் தொகுப்பின் கட்டுரைகள் அனைத்துமே 2019-ம் ஆண்டில் வெளியானவை. … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

காலை அந்தியும் மாலை அந்தியும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் சென்ற கிழமை, புலர் காலைப்பொழுதில் பாண்டிச்சேரி நண்பர் அமரநாதனிடம் இருந்து அழைப்பு வந்தது. வழக்கமாக அந்த நேரத்தில் அழைப்பவர் வேலூர் லிங்கம். இலக்கியம், அரசியல், சமூக நிகழ்வுகள் பேசுவார். ஆனால், முன்னவர் காரியம் இருந்தால் மட்டுமே அழைப்பார். அவர் புதுச்சேரியில் எமக்கொரு வேடந்தாங்கல். நீங்கள் அனுமானிக்கிற காரணமும் அடங்கலாகத்தான். அவர் அதிகாலை எழுந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்