Monthly Archives: செப்ரெம்பர் 2020

தக்காரும் தகவிலரும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பதாகை – ஆகஸ்ட் 2020 எனக்கின்று ஓர்மையில் இருக்கும் திருக்குறளில் பாதிக்கு மேல் ஆறாம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் பயின்றவை. தமிழ்நாட்டு அரசியல் அறிவுச் சூழலுக்கு இயைந்து எனக்குமோர் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ பட்டம் தரலாம். ஆறாவது முதல் எட்டாவது வரை ஒழுகினசேரி எங்கோடிச் செட்டியார் தமிழாசிரியர். ஒன்பது முதல் பதினொன்று வரை தாழக்குடி மாதேவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓடும் செம்பொன்னும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, ஊதியூதி, நான்கு அகப்பை அதிகமாகவே குடித்த களைப்பில் இருந்தார். தோய்ந்த கலவி முடிந்த களிப்பும் சோர்வும் தெரிந்தது முகத்தில். ‘கலவியாம், முயக்கமாம், புணர்ச்சியாம், உவப்பாம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பொலியோ பொலி!

This gallery contains 2 photos.

பழைய சினிமாக்களில், கதைகளில், பெற்ற தாய் அடம்பிடிக்கிற, சேட்டை செய்கிற மகனைப் பார்த்துப் “பொலி போட்டிருவேன்” எனச் சினந்து உரைப்பதைக் கேட்டிருப்போம். அந்தச் சொற்றொடர் எம்மண்ணின் பிறப்பு அல்ல. மாறாக, “வெட்டிக் கூறு போட்டிருவேன்” அல்லது “கொண்ணே போட்டுருவேன்” என்பார்கள். முரண்டு பிடிக்கும் சொந்தப் பிள்ளைகளை வெருட்டும்போது இந்தப் பொலி போடுதல், வெட்டிக் கூறு போடுதல், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

This gallery contains 2 photos.

ச.தமிழ்ச்செல்வன் திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட சைவ வெள்ளாளர் குடும்பத்தில் பிறந்த இவருடைய தந்தையார் பிழைப்புத்தேடி நாஞ்சில் வட்டாரத்திற்குச் சென்று அங்கேயே மணம் செய்துகொண்டு குடியிருக்கலானதால் நாஞ்சில்நாடன் குமரி மாவட்டத்துக்காரராகிறார். ஓர் ஏழை உழைப்பாளிக் குடும்பத்தில் பிறந்து, வறுமையான பொருளாதாரப்பின்னணியுடன் போராடிக் கல்லூரிக்கல்வி முடித்து 1972இல் பிழைப்புக்காக பம்பாய் நகரத்தில் குடியேறுகிறார். சுமார் இருபதாண்டுகாலம் மும்பை நகரில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’

This gallery contains 1 photo.

“வட்டார வழக்கு என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது  யாரென தேடிக்கொண்டிருக்கிறேன். வட்டார வழக்கு என்ற சொல்லை கெட்டவார்த்தைத் தனமான பிரயோகமென நினைக்கிறேன்” என்று கி.ரா விருது வழங்கும் நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கூறினார். விஜயா வாசகர் வட்டம் முன்னெடுப்பில் கி.ரா விருது- 2020 நிகழ்ச்சி எழுத்தாளர் கி.ரா.வின் 98-வது பிறந்தநாளான நேற்று (16.09.2020) நடைபெற்றது. இதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பெற்ற தாய்த்திருநாட்டில் தாத்தா, மாமா, தாதா, தந்தை, அண்ணா, அம்மா என்றழைக்கப்பட்ட தலைவர் உண்டு. ஒவ்வொன்றும் ஓரோர் குணச்சித்திரம். தீவிரமாகத் தொல்லிலக்கியம் வாசிக்கத் தொடங்கிய பிறகு அம்மை என்ற சொல் எனக்கு நினைவுறுத்துவது காரைக்கால் அம்மையாரை. சர்வ நிச்சயமாக என்னைப் பெற்ற அம்மை சரசுவதிக்கு அடுத்தபடியாக. அம்மா என்பதுவே அம்மே, அம்ம, அம்மை, மா, மாம், மாயி, மையா. நாம் அம்மை என்றெழுதினால் அரைவேக்காட்டுத் திறனாய்வாளர்கள் அது மலையாளம், வட்டார வழக்கு என்பார். அம்மா, அம்மே, அம்ம என்பன அசைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உண்டால் அம்ம!

This gallery contains 10 photos.

உண்டால் அம்ம! நாஞ்சில் நாடன் வெறுங்காலுடன் நடப்பது கூசியது. வாழ்க்கையில் முதல் முறை செருப்புப் போட்டதே கல்லூரிக்குப் புறப்பட்ட முதல் நாளில்தான். புதுச்செருப்பு கடிக்கவும் செய்தது. அதுவரை செருப்பு இல்லாமலேதான் ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை வாசித்தது. ஆற்றங்கரை,  குளத்தங்கரை,  வயல் வரப்புகள்,  திரடுகள்,  பொத்தைகள்,  குன்றுகள் என அலைந்தது. நான்காண்டுகள் பம்பாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சிலின் நறும்புனல்

This gallery contains 1 photo.

சுனில் கிருஷ்ணன் நன்றி: பதாகை நாஞ்சிலின் நறும்புனல் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு முன், முதன்முறையாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய ஊட்டி முகாமில்தான் திரு நாஞ்சில் நாடன் அவர்களைச் சந்தித்தேன். தமிழினி ‘வெளியிட்ட நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ எனும் ஒரேயொரு கட்டுரை தொகுப்பு மட்டுமே அப்போது வாசித்திருந்தேன். பள்ளியில் தமிழ் பயிலாதவன். ஆகவே மரபிலக்கியம் வாசிக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்