Monthly Archives: ஏப்ரல் 2015

கைம்மண் அளவு..10 பாடலில் பாவம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ரசிகமணி என நேயத்துடன் விளிக்கப்படும், டி.கே.சி என்று அறியப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார் இன்றிருந்தால் வயது 134. அவரது அணுக்கத் தொண்டர்களில் ஒருவராக  இருந்தவர் ல.ச எனப்பட்ட வித்வான் ல.சண்முகசுந்தரம். இவ்வாண்டு மார்ச் 24ம் நாள் இரவில், தமது 94வது வயதில் காலமானார். பழுத்த பழம். தமிழ் அவரை அங்ஙனம்  கனியச் செய்திருந்தது. செய்யுளை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடன் சிறப்பிதழ்- பதாகை இணைய இதழ்

(முழுவதும் உணர்ந்த பெரியோர்களை போற்றும் நோக்கத்துடன் பதாகை நாஞ்சில் நாடனின் படைப்புலகிற்கான சிறப்பிதழ் கொண்டு வந்திருக்கிறது. தங்கள் உடல்நிலையையும் பொருட்படுத்தாது சிறப்பு கட்டுரை வழங்கிய எழுத்தாளர்அம்பை அவர்களுக்கும், தன் சகோதரியின் மருத்துவ சிகிச்சைகளுக்கிடையே நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் அ முத்துலிங்கத்திற்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றியும். நாஞ்சில் நாடனை நேரில் சந்தித்து சிறப்பானதொரு … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஃகம் சுருக்கேல் – அணிந்துரை

This gallery contains 5 photos.

உண்மை பற்றிச் சொல்கையில், நாஞ்சில் நாடன் அவர்களின் கதைகளிலேயே கூட ஒரு தகவல் இருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்கிறார் வெங்கட் சாமிநாதன். அப்போது கட்டுரைகள் பற்றி என்ன சொல்வது? கட்டுரைகள் என்பவை, எழுத்தாளனின் தொடர்ந்த உரையாடல். அவன் சொல்லும் விசயங்கள் தவிர, அவனைப் பற்றியும், நம்மைப் பற்றியும் அவ்வெழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு(9). அரிச்சந்திர கட்டம்

This gallery contains 2 photos.

அரிச்சந்திரன், சந்திரமதி, லோகிதாசன் தொடர்புடைய மயான காண்டத்து கட்டத்தை இந்தி யில் ‘ஹரீஷ்சந்திர காட்’ என்கிறார்கள். ‘ஹரீஷ்சந்த்ர’ எனும் பெயர்ச்சொல் தமிழில் தொல்காப்பியர் அனுமதித்த தற்பவம் எனும் இலக்கணப்படி ‘அரிச்சந்திரன்’ ஆயிற்று. கட்டம் என்றால் கோடு என்றும் காட்சி என்றும் சாதாரணமாகப் பொருள் கொள்கிறோம். ஆனால், காட் எனும் வடமொழிச் சொல் தமிழாகிக் கட்டம் என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாட்டத்தோடு வரும் வசந்தம்

This gallery contains 6 photos.

பம்பாயின் வாழ்க்கைமுறையில் தாராவி ஒரு தவிர்க்க இயலாத அங்கம். பெரும்பாலும் தமிழர்கள், உபி முஸ்லீம்கள், மராத்தியர்கள், ஆனால் இன, சாதி தனித்துவத்தைத் தமிழனைப் போல் யாரும் கட்டிக் காப்பதில்லை. தமிழ்நாட்டின் எல்லாக் கட்சிகளுக்கும் இங்கு கிளைகள் உண்டு. கொடிக் கம்பங்கள், படிப்பகங்கள், நிதி திரட்டல்கள்… தமிழ்நாட்டில் எந்த அரசியல் தலைவன் கனைத்தாலும் கட்சிக்காரன் இங்கே தண்ணீர் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பித்தப்பூ

This gallery contains 1 photo.

பித்தப்பூ பங்கயப் பூ நாறும் நயந்து இனித்த சுண்டு அதனில் பதியாத முத்தப்பூ மூச்செறிந்து சொல் களைந்து வாடாது காற்றில் பித்தப் பூவாய் கலந்து அலையும் …………………………………………………………நாஞ்சில்நாடன்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கைம்மண் அளவு..8, கல்லாதவன் கற்ற கவி

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் சில ஊர்களின் பெயர்கள் படும் பாடு, தாளம் படுமோ தறி படுமோ என்றிருக்கிறது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்களுக்கு நம்மூர் பெயர்கள் நாவில் வழங்கவில்லை. எனவே, அவர்களின் நாத்திறன் பொருந்தும்படி உச்சரித்தனர்.  ஓவியம்: மருது தூத்துக்குடியை ‘டூட்டுக்கோரின்’ என்றும், திருவல்லிக்கேணியை ‘டிரிப்ளிகேன்’ என்றும், கோழிக்கோடைக் ‘காலிகட்’ என்றும், வதோதராவை ‘பரோடா’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கைம்மண் அளவு..7 வயதுண்டு வாழ்த்த!!

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் காலியாகக் கிடக்கும் அனைத்துச் சுற்றுச்சுவர்களிலும் பன்னிற எழுத்துக்களில் வரைந்து வைக்கிறார்கள்; ‘வாழ்த்த வயதில்லை, எனவே வணங்குகிறோம்!’ பெரியய்யா, பெரியாயி, தாத்தன் என்று முதற்சொல்லை எழுதிக்கொள்கிறார்கள். அதைக்கூட அறியாமை என்று அறிந்துகொள்ள முடிகிறது.  ஓவியம்: மருது அவர்களில் பதின்பருவ வாரிசுகளைக் கூட ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’ என்கிறார்களே! இதையெல்லாம் தன்னடக்கமாக எடுத்துக்கொண்டு தாண்டியும் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

இறையும் மறையும்

This gallery contains 2 photos.

சரஞ்சரமாய் பூத்து இலை உதிரக் காத்து மஞ்சட் பாறையாய்த் தெளிந்து சரக்கொன்றை கண்பட்ட தருணம் கொன்றை அணிந்தானை நினைவூட்டிற்று கங்கை ஆற்றைப் புனைந்தானும் அம்புலியின் கீற்றை அணிந்தானும் மேனி நெடுக கீற்றை வரைந்தானும் வல்லரவின் ஆரம் சுமந்தானும் கற்றைவார்ச் சடைமேல் பனி மெளலி கவித்தானும் கயிலையில் மட்டுமே இருக்கக் கட்டுரை இல்லை. நெருஞ்சியும் தும்பையும் அரளியும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக