சொல்கிறார்கள்

சொல்கிறார்கள் 

நாஞ்சில் நாடனின் வலைப்பூ http://www.dinamalar.com/splpart_detail.asp?id=71

சமீபத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் www.nanjilnadan.wordpress.com என்ற வலைப்பூவை நடத்துகிறார். அவருடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்த, இந்த வலைப்பூ உதவுகிறது. செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் என்ற பெண் கவிஞரை, பாரதியார் உயர்வாக மதித்ததையும், அவருடைய கவிதைகளில் ஆவுடை அக்காளின் தாக்கம் இருந்ததையும் குறிப்பிடும் கட்டுரை புதுமையாக உள்ளது. உலக இலக்கியங்களுக்கான தலைப்புகள், எப்படி இடப்பட்டன என்பதை விளக்கும் கட்டுரை வித்தியாசமான தொகுப்பாகும்.

நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு

by RV on நவம்பர் 30, 2010

நாஞ்சில் நாடனின் எழுத்துகளை நண்பர் சுல்தான் ஷரீஃப் தொகுத்து வருவது தெரிந்திருக்கும். நான் ரெகுலராகப் படிக்கும் ஒரு தளம் இது, இது வரை பார்க்காவிட்டால் கட்டாயம் பாருங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.
நாஞ்சில் நாடனின் வாழ்க்கைக் குறிப்பு என்று ஒரு பதிவு சமீபத்தில் வந்தது. அவருடைய எழுத்துகளை அருமையாக லிஸ்ட் போட்டிருக்கிறார்கள். படிக்க வேண்டிய பதிவு.
நான் நாஞ்சில் நாடனை அதிகம் படித்ததில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சிறுகதைகள் மட்டுமே படித்திருக்கிறேன். விட்டுப்போன ஒரு எழுத்தாளர், தேடிப் பிடிக்க வேண்டும். சுல்தான் ஷரீஃபுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!
தொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் எழுத்தாளர்கள்

நாஞ்சிலின் இணையதளம்

நாஞ்சில் – சுல்தான் – இணையம்
நீண்ட காலமாக எல்லோரும் நாஞ்சில் நாடனை இணையத்தில் எழுதுங்கள் என வற்புறுத்திவந்தோம் , அவரும் ஆயிரம் காரணங்களை சொல்லி தவிர்த்து வந்தார் , ஆனால் எங்களில் யாருக்கும் நாஞ்சிலின் அச்சு படைப்புகளை இணையத்திற்க்கு மாற்றலாம் என்று தோன்றவில்லை அல்லது சோம்பல் .
திடீரென நாஞ்சில்நாடன் என ஒரு தளம் முளைத்தது , அவரது படைப்புகளை இணைமேற்ற துவங்கியது , யார் அது என யாருக்கும் தெரியவில்லை , தளத்தை நடத்துபவரே ஒரு பின்னூட்டத்தில் நாஞ்சிலை எப்படி தொடர்பு கொள்வது என்று கேட்டார் . தொடர்ந்த உழைப்பின் மூலம் நாஞ்சிலின் படைப்புகள் இணைய உலகம் வந்தடைந்தது,
அந்த இணையத்தை துவக்கியவர் சுல்தான் , திருநெல்வேலி, ஏர்வாடிக்காரர் , அரபுநாடு ஒன்றில் உள்ளார் , நாஞ்சிலின் நீண்டநாள் வாசகர் , சும்மா ஒரு முயற்ச்சி செய்யலாமேன்னு ஆரம்பிச்சேன் சார் , இவ்வளவு வரவேற்ப்பு இருக்கும் என நினைக்கலை என்று வியக்கிறார் , 
இப்போது நாஞ்சிலே வாரம் ஒருமுறை இணைத்தில் எழுதப்போவதாக சொல்கிறார் , நல்ல விளைவாக நாஞ்சிலின் புத்தகங்கள் விற்பனையும் உயரத்துவங்கியுள்ளது ,
மனமார்ந்த நன்றியும் வாழத்துக்களும் சுல்தான் .
நாஞ்சில்நாடன் இணையம் : https://nanjilnadan.wordpress.com/
Posted by Arangasamy.K.V at Sunday, November 07, 2010

சொல்வனம்

.: மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழில்:
இணையதள அறிமுகம் »
இணையத்தில் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன்
தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானோருக்கு இப்போது வலைத்தளம் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் வலைப்பக்கத்துக்கென்று பிரத்தியேகமாக எழுதுகிறார்கள். அச்சுப்பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளையும் இணைய வாசகர்கள் பயன்பெறும் வகையில் தங்கள் வலைப்பதிவுகளில் வெளியிடுகிறார்கள். இவர்களில் சமீபத்திய குறிப்பிடத்தக்க புதிய தளங்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன் இருவருடையதுமாகும். அ.முத்துலிங்கம் தனக்கேயுரிய மெல்லிய அங்கதம் தொனிக்கும் சிறந்த பல கட்டுரைகளை நாட்குறிப்புகள் போல் தன் தளத்தில் வெளியிடுகிறார். அது ஒரு சிறந்த வாசிப்பனுபவமாக இருக்கிறது.
நாஞ்சில்நாடன் இன்னும் இணையம் பக்கம் தீவிரமாக வரவில்லை என்றாலும் அவருடைய வாசகர் ஒருவர், நாஞ்சில்நாடனுக்கென்று வலைப்பதிவு ஆரம்பித்து நாஞ்சில்நாடனின் பல பேட்டிகளையும், அச்சுப்பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளையும் இப்பதிவில் வெளியிட்டு வருகிறார். இவ்விரு வலைப்பதிவுகளும் தமிழ் இலக்கிய வாசகர்கள் தவறவிடாமல் படிக்க வேண்டியவை.
நன்றி: http://solvanam.com/?p=11343

****************************************

 

விகடன் வரவேற்பறை 6-10-2010 

தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான நாஞ்சில்நாடனின் எழுத்துக்களைத் தொகுக்கும் வலைப்பூ. பனுவல் போற்றுதும், தீதும் நன்றும், அசைபடம், கதைகள், கட்டுரைகள் எனப் பல்வேறு தலைப்புக்களின் கீழ் நாஞ்சில்நாடனின் எழுத்துக்கள் தொகுக்கப்பட்டு இருக்கின்றன. செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் என்ற பெண் கவிஞரை பாரதியார் உயர்வாக மதித்தது குறித்தும் அவருடைய கவிதைகளில் ஆவுடை அக்காளின் தாக்கம் இருந்தது குறித்த பதிவு புதுமை. நண்பர் ஒருவர் தன் குழந்தைக்கு ‘ப’-வில் ஆரம்பிக்கும் பெயர் கேட்பதைச் சொல்லத் தொடங்கி, உலக இலக்கியங்களுக் கான தலைப்புகள் எப்படி இடப்பட்டன என்பதைச் சொல்லும் கட்டுரை முக்கியமான ஒன்று!
(06-10-2010 ஆனந்தவிகடனில் விகடன் வரவேற்பறை பகுதியில் வெளியானது)
**************************************
குணங்குடி-நாஞ்சில்
 ஜெயமோகன்
 குணங்குடி மஸ்தான் சாயபு பற்றிய நாஞ்சில்நாடனின் இந்தக்கட்டுரை அறிமுகக் கட்டுரை என்ற அளவிலேயே அபாரமான வாசிப்புத்தன்மை கொண்டது. அவரிடம் நேரில் பேசுவதுபோன்ற அதே அனுபவம்
https://nanjilnadan.wordpress.com/2010/10/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/
நன்றி: http://www.jeyamohan.in/?p=8813
*************************************
கடிதங்கள்
ஜெயமோகன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நாஞ்சில் நாடனைப் பற்றிய ஆழமான விவரணை அடங்கிய இந்த கட்டுரை அற்புதமாக அமைந்திருக்கிறது. பல இடங்களில் நக்கலடிப்பதில் நீங்கள் நாஞ்சில் நாடனை விஞ்சி விட்டீர்கள். வரிதோறும் தெறிக்கும் அங்கதம் வயிறு வலிக்க சிரிக்க வைத்த அதே சமயம், நாஞ்சில் என்ற அரிய மனிதரை மீண்டும் மீண்டும் சிந்திக்க வைக்கிறது. சைவமும் சாரைப் பாம்பும்”, “சாலப் பரிந்து”,” ஆசை என்னும் நாய்கள்”, மிதவை, ‘அம்பாரி மீது ஒரு ஆடு’, போன்று கதைகளில் மட்டுமே கண்டு வந்த நாஞ்சிலை நேரில் கண்டு பழகியதைப் போன்ற உணர்வை அளித்தது உங்கள் கட்டுரை.
https://nanjilnadan.wordpress.com/2010/10/22/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%81%e0%ae%b2/#comment-102
மிக்க அன்புடன்,
கணேஷ்
சிங்கப்பூர்
அன்புள்ள கணேஷ்
நாஞ்சில்நாடனின் இணையதளம் மிக சுவாரசியமாக உள்ளது. அவரது பரந்துபட்ட பார்வையும் நகைச்சுவையுணர்ச்சியும் அற்புதமானவை
இதே கட்டுரை என் இணையதளத்திலும் உள்ளது
ஜெ
நன்றி: http://www.jeyamohan.in/?p=8815
********************************************************
நக்கலும் நாஞ்சிலும்
ஜெயமோகன் October 10th, 2010
நாஞ்சில்நாடனின் இணையதளம் பலமடங்கு வளர்ந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. எனக்கு சிறில் போல அவருக்கும் ஓரு வாசகநண்பர் அமைந்திருப்பது இலக்கியத்தில் அற்புதம்தான்
ஆளாளே கேட்டார்கள், ‘செம்மொழி மாநாட்டுக்குப் போகலியா?’ என. போயிருக்கலாம்தான், வேடிக்கை பார்த்தும் இருக்கலாம்தான். கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை?’ எனக் கேட்டது உள்மனம். ஆய்வரங்குகளில் அமர்ந்து செவிமடுக்க ஆசைதான். அரங்கில் பார்வையாளராக அமர்ந்தவர் கூட்டுத் தொகை மூன்றிலிருந்து நான்காக உயர்ந்திருக்கக் கூடும்
நாஞ்சிலுக்கே உரிய நையாண்டி. தகவலறிவும் நகைச்சுவையும் அவதானிப்புகளும் சரிவிகிதத்தில் கலந்த இக்கட்டுரைகளுக்கு ஈடுசொல்ல தமிழில் அ.முத்துலிங்கம் எழுத்துக்கள் மட்டுமே
https://nanjilnadan.wordpress.com
நன்றி: http://www.jeyamohan.in/?p=8624
http://www.tamilonline.com/thendral/morecontent.aspx?id=70&cid=2&aid=30

25 Responses to சொல்கிறார்கள்

  1. Surendran சொல்கிறார்:

    வாழ்த்துக்கள்.

  2. jeyamohan சொல்கிறார்:

    மிகச்சிறப்பான முயற்சி. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நாஞ்சில் நாடனின் ஆக்கங்கள் திண்ணை இணையதளத்தில் பல உள்ளன. தேடிக்கிடைக்காவிட்டால் அவர்களிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம். என்னுடைய இணைய தளத்தில் அவரைப்பற்றி வந்துள்ள எல்லா ஆக்கங்களையும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்

    ஜெயமோகன்

  3. கோவை அரன் சொல்கிறார்:

    எனக்கு உங்கள் தொ பே எண்ணை பெய்ல் செய்யுங்கள் நண்பரே

  4. sisulthan சொல்கிறார்:

    எனது இந்திய தொட்ர்பு எண் +91(கண்டிப்பாக இடவும்) 9443182309
    பஹ்ரின் எண் +973 39027288
    தற்போது பஹ்ரின்

  5. va.srinivasan சொல்கிறார்:

    அருமையான பணி. தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்துகளை இன்டர்-நெட்டில் பலரும் படிக்க வகை செய்தமைக்கு நன்றியும், வாழ்த்துகளும்.

    அன்புடன்

    வ.ஸ்ரீநிவாசன்.

  6. alagamperumal சொல்கிறார்:

    எப்போதுமே வலையில் எழுதுவதை வெறுத்து வந்த நாஞ்சில் ‘மனம் திருந்திய மைந்தனாகி” விட்டாரோ என ஆச்சரியத்தில் அமிழ்ந்தேன். இங்கு வந்த பிறகுதான் சங்கதி புரிந்தது….வாழ்த்துக்கள்!

  7. Vela சொல்கிறார்:

    என்னுடைய குருவுக்கு, குருவை பற்றி, குருவுக்காக… நினைக்கவே ரொம்ப அருமையா இருக்கு. ரொம்ப அருமையான வலை.. உங்கள் முயற்சிக்கு கோடி நமஸ்காரம்..

  8. RV சொல்கிறார்:

    சுல்தான்,

    நாஞ்சில் நாடனின் எழுத்துகளை தொகுப்பதற்கு நாங்கள்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். சில வாரங்களாகவே உங்கள் தளத்தை ரெகுலராக படித்துக்கொண்டிருக்கிறேன்…

    எல்லோரும் இந்நாட்டு மன்னர் சுட்டிக்கு நன்றி, இப்போது இணைத்து விட்டேன்.

  9. நாஞ்சில் பிரதாப் சொல்கிறார்:

    மிகவும் நன்றி சுல்தான். ஜெயமோகனின் தளத்திலிருந்துதான் இந்த தளத்தைப்பற்றி அறிந்தேன். மிகவும் நன்றி.

  10. Shan Nalliah,Gandhiyist Norway சொல்கிறார்:

    GREAT..!!! GREETINGS FROM NORWAY..!!!

  11. velraj சொல்கிறார்:

    Thangal muyarchikku nandri matrum vaazhthukkal !

  12. சென்ஷி சொல்கிறார்:

    🙂

    மகிழ்வுகள் ஆயிரம்..

  13. Manikandan. R சொல்கிறார்:

    நாஞ்சிலின் எழுத்துகளை வலைப்பூவில் கொண்டுவந்ததருக்கு நன்றி.
    நாஞ்சில் நாட்டு வட்டார அகராதி ஒன்றையும் தொகுத்து இணைத்தால் சொற்களின் பொருள் துல்லியமாக விளங்கும்.
    google reader இல் படிக்கச் இயலவில்லை அவனசெய்யவும்.

    அன்புடன்
    மணியன்

  14. Mohamed Moosa சொல்கிறார்:

    வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை….! எனது ஆதர்ஷ எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடனும், வண்ண தாசனும் என்னருகில் அமர்ந்து உரையாடி கொண்டிருப்பதை போல் தோன்றுகிறது. …!

  15. யெஸ்.பாலபாரதி சொல்கிறார்:

    சுல்தான் இதையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
    http://navinavirutcham.blogspot.com/2010/12/32.html

    மேலும்,
    தங்களின் மின்னஞ்சல் முகவரி கூட இல்லாதது சிரமமாக உள்ளது. தளத்தியேயே கூட மின்னஞ்சல் முகவரியை போட்டு வையுங்கள். பலருக்கும் உயபோகமாக இருக்கும்.

  16. s.saravanan சொல்கிறார்:

    கலைமாமணி திரு .நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் .தங்களுக்கு என்றும் இறை ஆசி கிடைக்க, இறையை பிராத்திக்கும்
    s.saravanan
    service@nanjilvellalar.com

  17. Doraiswamy Sampathkumar சொல்கிறார்:

    WISHES. HEARTFELT THANKS. SHALL VISIT SITE ON REGULAR BASIS.

    INDIRA PARTHASARATHY
    JANAKIRAMAN
    SU.SAMUTHIRAM
    ASHOKAMITHIRAN
    SU.RA
    PUTHUMAIPITTHAN





    NAANJIL NAADAN

  18. pandiang சொல்கிறார்:

    மயிலை விழாவில் முழுமையாக கலந்து கொள்ள இயலாமற் போய்விட்டது.உங்கள் உரையைக்கேட்க வந்து நேரம் கருதி கேட்க இயலாமல் திரும்பிவிட்டேன்.எனக்குத் தோன்றியதை வேர்களில் பதிவு செய்திருக்கிறேன். பாண்டியன்ஜி

  19. govarthanam சொல்கிறார்:

    LOT OF THANKS TO SULTHAN,ONLY ONE LINE FOR U”இன்னும் உலகம் இவர்களால் தான் அழியவில்லை”
    WITH LOVE
    M.GOVARTHANAN.ERODE

  20. RV சொல்கிறார்:

    மொழிபெயர்ப்பாளர் கௌரி கிருபாநந்தன் (http://gowri.kirubanandan.com/) சிலிகான் ஷெல்ஃபுக்கு அனுப்பிய மறுமொழி –

    ந.ரகுநாதன் அவர்கள் எழுதிய “பலாச்சுளை” கதையின் தெலுங்கு மொழிபெயர்ப்பு “விபுலா” என்ற தெலுங்கு பத்திரிக்கை, ஜூன் மாத இதழில் வெளியாக உள்ளது.

    இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் eemaata.com என்ற மின் இதழில் இதுவரையில் அசோக மித்திரன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், தோப்பில் முகம்மது மீரான், பாமா அவர்களின் சிறுகதைகளை தெலுங்கு வாசகர்களுக்குக் கொண்டுபோய் செர்பித்து உள்ளேன்.
    தெலுங்கு நாவல்கள், கதைகளை தம்ழாக்கம்செய்து வருகிறேன் என்றாலும், நல்ல தமிழ் சிறுகதைகளை தெலுங்கு வாசகர்களுக்கு அறிமுகம் செய்துகொண்டுதான் வருகிறேன்.

  21. bikesawaridays சொல்கிறார்:

    சங்க புலவனின் திறன் சொல்லில் தீராதே..! அய்யா..
    நமக்கெல்லாம் தெரிந்த ஒரு பாடல்
    நாராய் நாராய் செங்கால் நாராய்
    பழம் படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
    பவளகூர்வாய் செங்கால் நாராய்

    இப்பாடலின் அடுத்த வரிகள், உன் கணவன் (கவிஞர்) துயரத்தில் கிடக்கிறான் என்ற செய்தியை மனைவிக்கு தூது சொல்லும் படியாய் எழுதப்பட்டது. சத்திமுத்தம் வாவி என்ற பெயர் கொண்டு விளங்குவதால் புலவரின் பெயரையும் சத்திமுத்த புலவர் என்றே நாம் சூட்டிவிட்டோம்.
    இங்கு புலப்படும் அழகியல் தான் சங்கப்பாடல்
    கவிஞன் வானத்தில் பறந்து குளத்தில் மீன் கொத்தும் நாரையை பார்க்கிறான், அப்போதே அவனுக்கு தெரிகிறது, இந்நாரை நெடுந்தொலைவு பறந்து செல்லும் திறன் கொண்டது என்ற உண்மை, அதனாலே தான் நாரையிடம் தனது தூதை விடுத்தான், என்ன அழகு..
    அடுத்து, நாராயின் உடலை கூர் செய்கிறான், அதன் அலகு அவனை எதோ செய்கிறது, தேடுகிறான் உவமைக்கு தன் எதிரே நீண்டு நெடிது வளர்ந்த பனை மரம் தென்படுகிறது, அம்மரத்தின் பழத்தில் இருந்து முளைத்த பனங்கிழங்கின் உருவம் தென்படுகிறது. இந்த கிழங்கை இரண்டாய் கீறி வைத்தது போல் உள்ளது அதன் அலகு . இங்கு கவனிக்க வேண்டிய வரிகள் “பழம் படு பனையின் கிழங்கு பிளந்தன்ன ” பூமியில் இருக்கின்ற எல்லா மரத்தின் பழத்தில் இருந்தும் கிழங்கு முளைப்பதில்லை என்ற மரங்களை பற்றிய நுண் அறிவு அவனிடம் இருந்துள்ளதே..!

    ஏதோ என் அறிவுக்கு எட்டிய வரை.. இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய வரிகள் புதைந்து கிடைக்கும், நம் சங்க பாடல்களில்.

    தொடர்வோம்.. நன்றி..
    கண்ணன் நபா.

  22. Prof.Karthikeyan சொல்கிறார்:

    ‘எட்டுத்திக்கும் மதயானை’ வாசித்த நாளிலிருந்தே நாஞ்சில்நாடனைச் சந்திக்க வேண்டும் என்ற என் ஆவல் பன்மடங்காகப் பெருகியதற்குக் காரணமாக அமைந்தது மற்றுமாேர் ஆனந்தப் பேரனுபவம்.ஒருமுறை ஆனந்தவிகடனில் வாசகர் கேள்விகளுக்குப் பதிலளித்தார் நாஞ்சில்நாடன்.அதில் என் கேள்வியும் அடக்கம்.

    ‘எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்’ என்ற என் கேள்விக்கு…

    “எந்த முன்முடிவும் இருக்கக் கூடாது.பிறர் சொல்லி ஓர் எழுத்தாளன் மீது ஏற்படும் விருப்பு வெறுப்புகள் குறுக்கிடக்கூடாது.ஒரு துறையை விரும்பி வாசிக்கிறவர் அதைத் தொடர்ந்து மேலே போகலாம்.தேர்ந்த வாசகனுக்கு எடுத்த புத்தகத்தின் 10 பக்கங்கள் வாசித்தாலே தனக்கு உகந்ததா இல்லையா…என்பது தெரிந்து விடும்.ஏற்கெனவே வாசித்திருக்கும் நண்பர்களின் கருத்தையும் ஏற்றுக்கொள்ளலாம்…”
    – என்று ஓர் அருமையான பதிலளித்திருந்தார்.இவ்விரு காரணங்களும் அவரைச் சந்திக்கும் உந்துதலை ஏற்படுத்தினாலும் சந்திக்க நீண்ட காலமாகியது.

    என் நண்பரான ஓவியர் ஜீவா, ‘சிறுவாணி வாசகர் மையம் சார்பில் இந்த வருடம் எனக்கு “நாஞ்சில் நாடன் விருது” வழங்குகிறார்கள் அவசியம் வாருங்கள்’ என அழைப்பு விடுத்திருந்தார்.சிறுவாணி வாசகர் மையத்தை சிறப்பாக நடத்தி வரும் திரு.பிரகாஷ் மற்றும் திருமதி.சுபாஷிணி இருவரும் நடத்திய அந்த விழா மிகவும் நேர்த்தியாக நடைபெற்றது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வந்திருந்தனர்.அவ்விழாவில் தான் நாஞ்சில்நாடனை முதன்முதலில் சந்தித்தேன்.விழாவின் முத்தாய்ப்பாக நாஞ்சிலாரின் பேச்சு அமைந்தது.மற்றவர் பேச்சிலிருந்து எனக்கொன்று புரிந்தது.நாம் சந்திக்க வேண்டும் என விரும்புவது ஒரு எழுத்தாளர் மட்டுமல்ல… ஒரு பல்கலைக்கழகம் என்று.ஆம்!… சிறுகதை, புதினம், கவிதை மட்டுமன்றி தீவிரமான சொல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் நாஞ்சில்நாடன்.ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பணியைத் தனிமனிதராகச் செய்து கொண்டிருக்கிறார்.விழா முடிந்ததும் அவரிடம் சென்று பேசினேன்.அன்று துவங்கியது எங்கள் நட்பு.அவரை ஒருமுறையேனும் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடைக்குமா என நான் எண்ணிய காலங்கள் உண்டு.தற்போது அனுதினமும் அவருடன் தொடர்பில் இருக்கக்கூடிய வாய்ப்பினை காலம் எனக்களித்தது என் பேறு.பார்ப்பதற்கு ஒரு காவல்துறை உயரதிகாரியைப் போன்ற மிடுக்கான தோற்றமுடைய நாஞ்சிலாரிடம் நெருங்கிப்பழகிய பின்னர் தான் அவரது குழந்தை உள்ளம் புரிந்தது.தமிழகத்தின் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரென்ற எந்த கர்வமும் இல்லாதவர்.’சாகித்ய அகாடமி’,’கலைமாமணி’ போன்ற விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர்.ஞானபீட விருது பெறுவதற்கான அனைத்துத் தகுதியும் உடையவர்.என் அழைப்பினை ஏற்று நான் இயக்குனராகப் பணிபுரிந்த/பணிபுரிந்து கொண்டிருக்கும் கல்லூரிகளுக்கு வந்து சிறப்புரையாற்றியிருக்கிறார்.நான்கு முறை அவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது என் வாழ்வின் உன்னதப் பக்கங்களில் ஒன்று.மாணவர்களிடையே பேசும் போதெல்லாம் புத்தக வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்.சொற்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.”உலகில் பல மொழிகள் அழிந்து கொண்டே வருவதுடன் அம்மொழிகளுக்குள் புழங்கும் சொற்களும் குறைந்து கொண்டே வருகின்றன.பயன்படு சொற்கள் குறைந்தால் ஒரு மொழி தன் வளத்தை இழப்பதுடன் இறுதியில் அது அழிந்தும் போக ஏதுவாகும்.இன்றைக்கு நாம் பயன்படுத்தும் தமிழ்மொழியின் சொற்கள் எவ்வளவு இருக்கும்? அதிகபட்சம் ஆயிரம் சொல்லலாமா? சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டு 1924ல் வெளிவந்த பேரகராதியில் 1,24,000 சொற்கள் அகரவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.அப்பேர்ப்பட்ட மிகப்பெரும் பொக்கிஷத்திலிருந்து சொற்களை எடுத்துச் செலவழிக்க ஏன் கஞ்சத்தனம் படுகிறோம்?” என மாணவர்களிடம் கேள்வி கேட்டு அவர்களுடைய சிந்தனையைத் தூண்டினார்.சகமாணவிகளிடம் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களைப் போதித்த அதே சமயத்தில் மாணவிகளும் நாகரிகம் என்னும் பெயரில் எப்படியெல்லாம் தன்னிலை மறந்து நடந்துகொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தினார்.அவரது பேச்சுக்குப் பின் ஒரு பேராசிரியை அவரிடம்,”பெண்களாகிய நாங்கள் கூட மாணவிகளிடம் எளிதில் சொல்லி விளங்க வைக்க முடியாத சில விஷயங்களை நீங்கள் அருமையாகச் சொல்லிப் புரிய வைத்திருக்கிறீர்கள் சார்… மிகுந்த நன்றி” என்று கூறியதை நான் கண்டேன்.தீவிர உணவு ரசிகரான நாஞ்சிலாருடன் ‘Western valley’ மற்றும் ‘பாலகுமார் மெஸ்’ ஆகிய பிரசித்தி பெற்ற உணவகங்களுக்குச் சென்றிருக்கிறேன்.உணவு பற்றி அவருடன் அளவளாவிய போது…”நான் உணவை ரசிப்பவன்.கஷ்டப்பட்ட காலத்திலிருந்த போதும் சரி… பம்பாய்க்குச் சென்ற போதும் சரி… நான் எல்லா உணவையும் ரசித்துத்தான் சாப்பிடுகிறேன்.மஹாராஷ்டிரத்தின் சோளரொட்டியும்,கூனிப் பொடியில் இடிக்கப்பட்ட சம்மந்தியாக இருந்தாலும்கூட ருசித்து அந்த உணவுக்கு உண்டான நியாயத்தை வழங்கித்தான் உண்கிறேன்” என்றார்.கல்லூரி விழாக்கள் தவிர இலக்கியக் கூட்டங்களிலும் அவரைச் சந்தித்து உரையாடுவதுண்டு.பலமுறை அவர் வீட்டிற்குச் சென்று அவருடைய குடும்ப நண்பராகவே ஆகி விட்டேன்.அவருடன் நான் காரில் பயணம் செய்யும் போதெல்லாம் எவ்வளவோ இலக்கிய விஷயங்களைப் பேசிக் கொண்டு வருவார்.இயற்கை தனக்கு இன்னும் பத்து வருடமாவது ஆயுள்தர வேண்டுமென்றும்,எழுத வேண்டிய படைப்புகள் இன்னும் இருக்கிறது என்றும் கூறுவார்.
    1975ல் நா.பார்த்தசாரதியின் தீபம் இதழில் எழுதத் துவங்கிய அவர் எங்குமே நின்று இளைப்பாறியதில்லை.அவருடன் எழுத வந்தவர்கள் இன்று பெரும்பாலும் ஓய்ந்து விட்டனர்.தேடல்,விழைவு, உழைப்பு ஆகியவை தான் அவரை மிக விரும்பிப் படிக்கப்படும், மிக அதிகம் எழுதும் எழுத்தாளராகவும் வைத்திருக்கிறது.நாஞ்சில்நாடனின் கதைகளின் வழியாக நாம் கண்டடைய முடிகிற விடைகள் யாவுமே நேரடியானவை, யதார்த்தமானவை.உள்ளதை உள்ளபடி சொல்லுபவை.இளம் தலைமுறை எழுத்தாளர்களைத் தொடர்ந்து கூர்மையாகக் கவனித்துப் பாராட்டுகிற பெருந்தன்மையும், தன்னலமற்ற குணமும் அவருக்கிருக்கிறது.சகமனிதரின்பால் அவர் கொண்ட நேசமும், சமூகத்தின் பேரில் கொண்ட அக்கறையும், எவருக்கும் அஞ்சாமல் தன் கருத்தை முன்வைக்கக்கூடிய மாண்பும், எந்தப் பாகுபாடுமின்றி அனைவரிடமும் கலந்து பழகும் பண்பும் மிகுந்த அந்த மாமனிதர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு இன்னும் பல சிறந்த படைப்புகளை வழங்க வேண்டும் என்பதே என் அவா.

  23. அன்பு ஹனீஃபா சொல்கிறார்:

    பணிகிறேன்

பின்னூட்டமொன்றை இடுக