Monthly Archives: மே 2015

கைம்மண் அளவு 14, துருப்பிடித்த பேரூந்துகள்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் நாகர்கோயில் போயிருந்தேன் அண்மையில். நாகர்கோயிலா அல்லது நாகர்கோவிலா என்றொரு வழக்குண்டு இன்னமும். அதைத் தமிழறிஞர் தீர்க்கட்டும். ‘நாஞ்சில் நாடன் நாகர்கோயில் போவது அதிசயமா? என்னவோ சுவிட்சர்லாந்து போனதுபோல் சொல்கிறாரே’ என்பார் எமை அறிந்தார். அதுவும் சரிதான். என் 87 வயதுத் தாய் வாழும் ஊர்,  சகோதர சகோதரிகளும் சுற்றமும் வாழும் ஊர். காரணம் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

கைம்மண் அளவு13- துருப்பிடித்த வேல்

This gallery contains 2 photos.

நாஞ்சில்நாடன் திருவனந்தபுரத்தில் தம்பானூர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் எதிரே மிகச்சிறந்த சைவ உணவு விடுதி ஒன்றுண்டு. அங்கு செல்லும் நண்பர்களுக்கு அந்த விடுதியை முன்மொழிவேன். அந்நகரில் தங்க நேரிடும் நாட்களில் விரும்பிப் போவதுண்டு அங்கே. விலை, கோவை அல்லது சென்னை விலைகளுக்கு மாற்றுக் குறைந்ததில்லை என்றாலும் உணவின் தரம் உயர்வாக இருக்கும். நெரிசல் மிகுந்த நாட்களில், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எப்படி கட்டங்கட்டமா இலக்கியமாக்குறது?

This gallery contains 1 photo.

ஆல்தோட்ட பூபதி நாஞ்சில் சார் மாதிரி கொஞ்சம் எள்ளல் கலந்து சொல்லியாகணும்னா: வெயிலிலும் காற்றிலும் அவ்வப்போது கொட்டும் மழையிலும் இருந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அந்தக் கட்டிடத்தைத் தாங்கி வரும் முழுக்க துருவேறிய தகரக் கூரைகள்.அது இறங்கும் இடத்தில்தான் இருந்தது மில்லின் முதல் கேட். அதன் அருகே, அப்பனே காட்டடா என வயிற்றில் சிவனே வந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு 12 அச்சம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன்… 38 ஆண்டுகளுக்கு முன்பு, பம்பாயில் வாழத் தலைப்பட்ட பிறகு விடுமுறையில் ஒருமுறை சொந்த ஊருக்கு வந்தபோது, எழுத்தாளர் நகுலனை முதன்முறையாக திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். எனது எண்ணிறந்த குருக்கன்மார்களில் அவரும் ஒருவர் அவர் காலமாவது வரை அது தொடர்ந்தது. நான் திருவனந்தபுரத்தில் பெண் கட்டியதும் வசதியாகப் போய்விட்டிருந்தது. ‘அனந்தபுரம்’ என்பதைச் சொல் மாற்றி, நீல.பத்மநாபன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எட்டு கிரிமினல் கேஸ் – முன்னுரை

This gallery contains 13 photos.

பல்லாயிரக் கணக்கான ஆண்டுகட்கு முன்பான தொன்மங்களின் அறச்சிக்கல்கள் இவை. பாவலர் வாழ்ந்த காலத்துக் தென்திருவிதாங்கூர் கோர்ட் மொழியில் எழுதப்பட்டுள்ளது இந்த நூல். குறிப்பாக வாதி, பிரதிவாதி, சாஷிகள், வக்கீல், வியாச்சியம், விசாரணை, பிரதிவாதி வக்கீல் கிராசு, வாதி வக்கீல் றீக்கிராசு, ஆர்டர், பிரசிடிங்ஸ், குற்றப்பத்திரிக்கை, ஹியறிங், ஜட்ஜ்மெண்ட், அப்பீல், புணர் விசாரணை போன்ற சொற்களை பயன்படுத்தியே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கைம்மண் அளவு 11..இளைய நேயம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் தேச விடுதலை பெற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகே, திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து பிரிக்கப்பட்ட தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரையின் பாதி தாலுகாக்களைக் கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் உருவாயிற்று. இந்த மாவட்டத்துக்காரர்கள் நெடுங்காலம் ரயில் பார்த்தது சினிமாக்களில்தான். திருநெல்வேலி அல்லது திருவனந்தபுரம் போக வேண்டும், ரயிலை நேரில் பார்க்க. புகைவண்டி என்றும், தொடர்வண்டி என்றும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்