Monthly Archives: ஏப்ரல் 2011

நினைவுகளின் சுவட்டில்

நாஞ்சில் நாடன் அகல்’ பதிப்பக நண்பர் பஷீருக்கு என் நினைவுக் குறிப்பு நூலொன்று எழுதித் தரவேண்டும் என ஐந்தாண்டுகளாக ஆசையுண்டு. ‘பேய்க்கரும்பு.’ கையில் பிடித்துத் திரியும் பட்டினத்துப் பிள்ளை போன்று, எனது மரியாதைக்குரிய படைப்பாளி, ‘பாதசாரி’ எப்போதுமதை வழி மொழிபவர். பார்க்கும் இடத்திலெல்லாம் ‘மீனுக்குள் கடல்’ எனும் அவரது நூலுக்குள் இருக்கும் ‘காசி’ போலொரு கதை … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பெயரணிதல்…..2

நாஞ்சில் நாடன் முன் பகுதி: பெயரணிதல் என்னூடைய போதாத காலம் பாருங்கள்-நான் மதிக்கும் பேராசிரியர், நான் ஈடுபட்டு வாசித்த ஆய்வு நூல்களை எழுதியவரின் எதிர்வினை,அப்படியே,சொற்பிசகாமல்: ‘முனியம்மா’ என்பது ஒரு தலித் பெண் எழுத்தாளரின் புனைபெயர். தேவையின்றி மேற்கோள் குறியிட்டு அப்பெயரைக் குறிப்பிடும் நாஞ்சில் நாடனின் நோக்கம்தான் என்ன? ஆய்வுகளின் போக்கு இதுவானால் உண்மைகளை நாம் எங்கு … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

மிதவை…4.1

வெளியே வந்ததும் ரோட்டின் இருபுறமும் கந்தலால் ஆன குடிசைகள். மூத்திர நாற்றம். காலையில் கழித்த புது மலம்.ரோட்டில் சாரிசாரியாய் லாரிகள்…… அலுமினியப் பாத்திரங்களை மண்போட்டுத்  துலக்கிக்கொண்டிருந்தாள் ஒரு பெண். சிவப்பு நிறத்தில் பார்க்க அழகாகவும் தின்னச் சுவையற்றும் இருக்கும்  செந்நவரை மீன்களின் தலையைக் கொய்து குடலை உருவி எறிந்து வால் நறுக்கிக் கழுவிக்கொண்டிருந்தாள் வேறொரு பெண். … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , , , | மிதவை…4.1 அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கடவுளின் கால்

நாஞ்சில் நாடன் சூரத்திலிருந்து திரும்ப,ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். சூரத் தொன்மையான நகரம்.மதுரை,காஞ்சி,காசி,கயா,வாதாபிபோல. காஞ்சிப் பட்டுக்கு சூரத்தின் ஜரிகை, மாட்டு வண்டிக் காலத்தில் இருந்தே. சாரம்,துண்டுக்கு இன்று ஈரோடு. ஜமுக்காளத்துக்கு பவானி,கரூர். சன்ன ரக இரட்டை வேட்டிக்கும் துவர்த்துக்கும் பள்ளியாடி, பட்டுக்கு காஞ்சிபுரம்,ஆரணி,தர்மாவரம்,திருப்புவனம்,போச்சம்பள்ளி. காற்சட்டை மேற் சட்டைத் துணிகளுக்கு பிவாண்டி, பின்னலாடைக்கும்,துன்னலாடைக்கும் திருப்பூர், பெண்டிர் ஆடைத் துணிகளுக்கு … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பெயரணிதல்

நாஞ்சில் நாடன் தமிழ் இலக்கணம், காரணப் பெயர் இடுகுறிப் பெயர் என இரண்டைப் பேசுகிறது. ஆகுலப்பெயர் வேறென்றும் ஆகாத பெயர் அதனினும் வேறென்றும் அறிக. கருப்பன்,வெள்ளச்சி,செவலை,மயிலை,நாற்காலி,நெட்டையன்,தடியன் எனபன காரணப் பெயர். தேக்கு ,தென்னை,பசு,யானை,மரம்,பானை போன்றவை இடுகுறிப்பெயர்கள். செண்பகம் என்றொரு பறவையைப் பெயர் சொல்லி அழைக்கிறோம்.சில பகுதிகளில் செம்போத்துஎன்பார்கள். எனக்கு செண்பகத்தைப் பார்த்தால் இனம் தெரியும். செண்பகம் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

கொங்கு தேர் வாழ்க்கை

நாஞ்சில் நாடன் லைன் வீடென்று சொல்வாரிங்கு. ஒருவேளை சென்னையின் ஸ்டோர் வீடுகள் இப்படித்தான் இருக்குமோ தெரியவில்லை. முதலில் நாற்பது அடி அகலமும் அறுபதடி நீளமும் கொண்ட காலிப் புரையிடம் ஒன்றை நினைவில் கொண்டுவரலாம். அதாவது ஒரு கிரவுண்ட் அல்லது ஐந்தே கால் சென்ட். தெருவில் இருந்து மனையின் அகலப் பக்கத்தின் நடுவில் முன்வாசல். தொடர்ந்து ஐந்து … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், விகடன் கதைகள் | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

வனவாசத்தால் பெற்ற பரிசு – உயிர் எழுத்து

  காங்கிரசின் தலைமையும் திராவிடத் தலைமையும் நேற்று இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலையை எவ்விதம் எதிர்கொண்டன என்பதை இன்றைய இளம்படைப்பாளி ஏதும் செய்யமுடியாத கண்ணீரோடு கண்டனர். இவர்களின் எதிர்வினை என்னவாக நாளை இருக்கும்? இவர்களின் பாசாங்குகளைத்தான் இலக்கியத்தில் ஆவணமாக்குவர்! சு.வேணுகோபால் இதுதான்.இந்த வேலையைச் செய்ய நாஞ்சில் நாடனும் ஏதோ                                                                                         சிறுவகையில் உதவியிருக்கிறார். (முழு கட்டுரையும் படிக்க: … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அட்டம்

 (நிற்க. இளம் தமிழ் இலக்கியவாதிகள் ஒரு சொல் கேளீர்.  பொழுது போகாமல் திருட்டு டி.வி.டியில் திருட்டுத் தொழில் வளர்க்கும் தமிழ் சினிமா பார்ப்பதற்கு பலமடங்கு மேலானது ‘அபிதான  சிந்தாமணி’யில் மேய்வது.  அட்டம் தொடர்பாக, அபிதான சிந்தாமணியில் இருந்து சில சுவாரசியமான தகவல்கள்.) நாஞ்சில் நாடன் (எண்களை குறித்த தொடர் கட்டுரைகள் பாகம் 1.)  அடுத்த எண் … Continue reading

Posted in "பனுவல் போற்றுதும்", அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குடியும் குடி சார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும்(2)

 குஜராத் காந்தி பிறந்த மாநிலம். அங்கு அதிகாரப்பூர்வமாகக் குடிக்க அனுமதி இல்லை. காந்தி, குஜராத்துக்கு மட்டுமா பிறந்தார், இந்தியாவுக்குப் பிறக்கவில்லையா என்பது துணைக் கேள்வி. நாஞ்சில் நாடன் முன் பகுதி: ..

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மிதவை…4

நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை…தொடர்கதை (1/1) மிதவை…தொடர்கதை (1/2) மிதவை ..2 மிதவை 2.1 மிதவை……3 மிதவை……3.1  . தொடரும்….

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கதைகள், பம்பாய் கதைகள் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

வண்ணதாசனுக்கு சுஜாதா விருது

நாஞ்சில் நாடன் என் முதல் சிறுகதை ‘விரதம்’. ஜூலை 1975  ‘தீப’த்தில் வெளியிட்டார் நா.பா. ‘இலக்கியச் சிந்தனை’ அதை அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாய்த் தெரிவு செய்தது.கல்யாண்ஜி என்னை ஊக்குவித்துக் கடிதம் எழுதினர். தமிழ்ச் சங்கப் பிரமுகர் அதை மலம் துடைக்க ஆகும் என்றார். என்றாலும் 36 ஆண்டுகளாய் எழுதிக்கொண்டிருக்கிறேன். வண்ணதாசனுக்கு சுஜாதா விருது

Posted in அனைத்தும், இலக்கியம் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குடியும் குடி சார்ந்த எண்ணங்களும் விழுமியங்களும்(1)

பலர் குடித்து விட்டு வந்து பெண்டாட்டியின் கூந்தலைப் பற்றி முறுக்கி, முதுகை வளைத்து, குனியவைத்து குத்துகிறார்கள். காலால் வயிற்றில் எற்றோ எற்றென்று எற்றுகிறார்கள். பிள்ளைகளை அடிக்கிறார்கள். சோற்றுப்பானையைத் தூக்கிப் போட்டு உடைக்கிறார்கள். வாகனங்கள் ஓட்டி மண்டை உடைந்து சாகிறார்கள். இதனைச் சமூகம் கவனிக்கிறது. (ஜூலை 2007)  நாஞ்சில் நாடன்  ௦ அடுத்த பகுதியில் முடியும்…

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

புத்தகங்களின் ஊடாகத் துலங்கும் முகம்

  அவர்போல் நம்பிக்கையும் ஊக்கமும் கொண்ட புத்தக விற்பனையாளர் மாவட்டத்துக்கு ஒருத்தர் இருந்தால் தமிழ் சமூகத்தின் முகத்தில் காணும் இருண்ட வரைகளை மாற்றிவிட முடியும் என்றெனக்குத் தோன்றுவதுண்டு நாஞ்சில் நாடன் ..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கன்னியாகுமரி

நாஞ்சில் நாடன் எந்தக் கடலும் பெருங்கடலும் அழகுதான். அதில் கன்னியாகுமரி தனியழகு. திருச்செந்தூர் வேறு அழகு. திருப்புல்லாணி இன்னோர் அழகு! வைத்த கண் வாங்காமல் பார்க்கச் செய்யும் கவர்ச்சியும் அச்சமும்கொண்ட அழகு மூன்றெனச் சொல்வர் முன்னோர். ஓய்வின்றி அலையடிக்கும் சமுத்திரம்; காதடித்து நின்று அசைந்தாடும் யானை; படமெடுத்துப் பரக்கப் பார்க்கும் நாகப் பாம்பு! கன்னியாகுமரியில் 60 … Continue reading

Posted in “தீதும் நன்றும்”, அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடன் சிறுகதைகள்

நாஞ்சில் நாடன் சிறுகதைகள் அன்று அமாவாசை. சின்னதம்பியா பிள்ளையின் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. எனவே பழைய கஞ்சியைக் குடிப்பதற்குப் பதில், தன் பெண் வீட்டிற்குப் போய் அமாவாசைச் சாப்பாடு சாப்பிடலாம் என்று கிளம்பினார். முதலில் பெரிய பெண் வீட்டிற்குப் போனபோது அப்பா சாப்பிட்டு வந்துவிட்டார் என்கிற தோரணையில் பேசினாள். இளைய பெண்வீட்டில் சாப்பிடலாம் என்றால், … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெருந்திணை

    இராப்பாடி பசியாற யாசித்து உதிரும் முதுமையின் கனவு   கண்டு எய்திய பின்னும் தேடிச் சலிக்கும் ஞானியின் தினவு   உற்றார் வெற்றியில் களிக்கும் கணத்திலும் உட்பாய்ந்து வருத்தும் தோல்வியின் நினைவு   கசந்த்தோர் எண்சீர் விருத்தமாய் நலியும் எளிய என் இதிகாசப் புனைவு ***********  “பச்சை நாயகி” கவிதைத் தொகுப்பில் “நாஞ்சில் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தென்குமரியின் கதை

தமிழனுக்கு முறையான வரலாறு இல்லை என்பார்கள். அ.கா.பெருமாளின் இந்த முயற்சியைக் காணும்போது இன்னும்கூட காலம் தாழ்ந்து போய்விடவில்லை என்று தோன்றுகிறது நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கமண்டல நதி 6

  (கும்பமுனி சிரித்தபடியே இருக்கிறார். நவீன வாழ்க்கை என்ற மாபெரும் கேலி நாடகம் அவர் முன் நடந்தபடியே இருக்கிறது. அவருக்கு எல்லாமே அபத்தமானவையாகப் படுகின்றன.) ஜெயமோகன் முந்தைய பகுதிகள்: 1 .ஜெயமோகன் நேரில் கண்ட கும்பமுனி 2. கமண்டல நதி (2) 3. கமண்டல நதி (3) 4. கமண்டல நதி (4) 5. கமண்டல நதி 5 … Continue reading

Posted in அனைத்தும், கமண்டல நதி, கும்பமுனி, நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மிதவை……3.1

  (ஒய் பி சவான்போல் தொப்பி வைத்துக் கொண்டிருந்தனர். முன்பெல்லாம் தொப்பி வைத்திருந்தவரை துருக்கர் எனவே சண்முகம் நினைத்துக் கொண்டிருந்தான். ஜவகர்லால் நேரு பற்றிக்கூட இந்த குழப்பம் இருந்தது.) நாஞ்சில் நாடன் முன்கதை: மிதவை…தொடர்கதை (1/1) மிதவை…தொடர்கதை (1/2) மிதவை ..2 மிதவை 2.1 மிதவை……3 தொடரும்….

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள், மிதவை தொடர் | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நேர்காணல்………….கும்பமுனி (2)

இதுக்கு அம்பது வருசமா பதிலு சொல்லீட்டு வாறேன். ஒரு மயிராண்டிக்கும் மனசிலாக மாட்டங்கு….மனசிலானாலும் ஏத்துகிட மாட்டான். எவன் சத்தம் போட்டு பேசுகானோ, எவன் நீண்ட நேரம் பேசுகானோ அவன் பெரிய புரட்சிப் பீரங்கி ஓய் நம்ம ஊர்லே…(கும்பமுனி) முந்தைய பகுதி:நேர்காணல்………….கும்பமுனி நாஞ்சில் நாடன்

Posted in அனைத்தும், கும்பமுனி, நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

தாய் மனம்

நாஞ்சில் நாடன் கோயம்புத்தூரில் வாழ்கின்ற இந்த இருபது ஆண்டுகளில், அலுவல் நிமித்தமாக முப்பது முறைக்கும் குறையாமல் காரைக்குடி போனதுண்டு. அலைச்சலில் ஒரு சுகம் இருந்ததுபோல, அலுவலக வேலைகளைச் சுளுவாக முடிக்கும் திறனும் இருந்தது. கிராமங்களில் விறகு கீறுபவர்களைக் கவனித்தால் தெரியும், சிலர் மொத்த பலத்தையும் செலுத்தி மாங்குமாங்கென்று கோடரி போடுவார்கள். சிலர் ஆசாக வீசுவதில் விறகுச் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தாமிரபரணி பின்னும் ஒழுகும்

நாஞ்சில் நாடன் ..

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்