Monthly Archives: மார்ச் 2012

தலைகீழ் விகிதங்கள் 1

This gallery contains 7 photos.

நாவல் எழுத ஆரம்பித்தேன். 1975-ல் எழுதத் தொடங்கிய நாவல் வளர்ந்தது, முழுத்தாளில் அறுநூற்றுச் சொச்சம் பக்கங்கள். மோகமுள், பாரதியார், பெரியார் திரைப்படங்களைப் பின்பு இயக்கிய ஞான. ராஜசேகரன் அப்போது பம்பாயில்CENTRAL INTELIGENCE BUREAU-வில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரும் நானுமாக, சனி ஞாயிறுகளில் அவரது குடியிருப்பில் உட்கார்ந்து வரிவரியாய் வாசித்து எடிட் செய்து நாவலை 400 பக்கங்களுக்குச் சுருக்கினோம்.       … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

ஈரோடு சந்திப்பு

This gallery contains 1 photo.

  (சொல் புதிது ஜெயமோகன் இணைய குரூப்பில் இருந்து) ராதா கிருஷ்ணன்  ஈரோடு வாசகர் வட்டம் ஏற்பாடு செய்திருந்த தமிழ் மரபிலக்கியம்பற்றிய (நாஞ்சில் நாடன்) இருநாள் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்புகிடைத்தது .முதல் நாள் இரு அமர்வாக மரபிலக்கிய அறிமுக வகுப்புகளாகவும் மறுநாள் நாஞ்சில் நாடனுடன் பங்கேற்போர் உரையாடும் நிகழ்வாகவும் நடை பெற்றது. இந்நிகழ்வில் கோபாலகிருஷ்ணன்(சூத்ரதாரி) மோகன ரங்கன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 12E

This gallery contains 6 photos.

மேற்கில் வருணன், கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமதர்மன், தென் கிழக்கில் அக்னி, வடமேற்கில் வாயு, தென் மேற்கில் கணபதி, வடகிழக்கில் ஈசன். எல்லோருக்கும் ஒரு திசை இருந்தது. ஆட்சி செய்யவோ அல்லது நோக்கிச் செல்லவோ!  …..நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை                     … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

மானுடம்

This gallery contains 1 photo.

  நாஞ்சில்நாடன்   ஆணாய் பெண்ணாய் அலியாய் இருத்தல் இருதுடை நடுவின் இயல்பு என்பதோர் நேர்தல் எனின் ஆணாய் பெண்ணாய் அலியாய் வாழ்தல் நேர்தல் அல்ல மானுடம் என்பது நேர்தலில் இல்லை வாழ்தலில் துளிர்க்கும் பசிய சிறுபுல் மாடு கடிக்கும் காய்ந்தும் கிடக்கும் கவிந்து வளர்ந்து மண்ணும் மூடும் …………………………………………………………………… …………………………………….”மண்ணுள்ளிப் பாம்பு” கவிதை தொகுப்பு.. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானோபதேசம்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் பொய்யின் மொழி பேசு தாயின் கோயிலில் திருடு பேரிளம் பெண்ணையும் கற்பழி சகமனித உதிரம் உறிஞ்சு பிள்ளைக்கறி சமைத்துண் பொன்னும் பொருளும் கொணரா மருமகளைக் கருக்கு கொலைத் தொழில் பழகு உயிர் மருந்தில் ஊழல் செய் செய்க பொருள் வையத் தலைமை கொள் வாழ்வாங்கு வாழ்வாய் காண் ……………………………………………………………………. …………………………………………………..”மண்ணுள்ளிப் பாம்பு” கவிதை தொகுப்பு

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாமிசப் படப்பு 1A

This gallery contains 9 photos.

பரவிவரும் பல்வேறு கலாச்சார நாற்றங்களினால் ஒவ்வொரு மண்ணும் தங்கள் சொந்த அடையாளங்களை இழந்து போயிருக்கும் நேரமிது.நாஞ்சில் நாட்டு மணற்பிரதேசத்தில் காணமற்போன மறபுகளையும் நம்பிக்கைகளையும் தோண்டித்துருவி எடுத்த நாடனின் உழைப்பு வியப்பைத் தருகிறது. அவருடைய எழுத்துக்களில் காணப்படுகிற அற்புதமான பிழையற்ற மொழி தமிழ் புத்தகங்களின் எதிர்காலத்தில் நல்ல நம்பிக்கை விதைக்கிறது…பாண்டியன்ஜி    நாஞ்சில்நாடன்         … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி A

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் கலிங்கத்துப் பரணி வெண்பாவில் புகழேந்தி, விருத்தம் எனும் ஒண்பாவில் உயர் கம்பன், கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன், பரணிக்கு ஓர் செயங்கொண்டான் என்று போற்றிப் பாடினார்கள். கவிச் சக்ரவர்த்தி எனும் பட்டம் பெற்ற செயங்கொண்டார் எழுதிய ஒப்பற்ற பிரபந்த வகை கலிங்கத்துப் பரணி. உண்மையில் கவிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மாமிசப் படப்பு – புதிய நாவல்

This gallery contains 7 photos.

ஒரு மண்ணின் இயல்பான வாசனையை இவரைவிட வேறொருவர் இத்தனை தெளிவுற வெளிப்படுத்தியிருக்கமுடியும் என்று தோன்றவில்லை.கேட்ட படித்த பார்த்த அடுக்கடுக்கான சொற்கள் தகுதிமிக்க இடங்களில் இடம் பிடித்திருக்கின்றன.நாஞ்சில் நாடனென்ற பெயருக்கு பொருத்தமாக ஒரு மண்ணின் சகல வாசனைகளையும் தொடர்ந்து அள்ளித் தெளிப்பது அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை என்றே கருதுகிறேன்…பாண்டியன்ஜி  நாஞ்சில்நாடன் தொடரும்……

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 12d

This gallery contains 8 photos.

                     சக உயிர்கள், சகமனிதர்களின் மீதான அன்பும் – நேசமும்தான் பிரதானம் என்பதே என் ஆன்மீகம். எல்லா மத இலக்கியங்களும் போதிப்பது அன்பு ஒன்றை மட்டும்தான். யாவரையும், யாவற்றையும் நேசிக்கச் சொல்வது அந்த அன்பு. அன்பை முன்னெடுப்பது எனது நோக்கம்……நாஞ்சில்நாடன் முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உடைப்பு (சிறுகதை)

This gallery contains 8 photos.

எனது கிராமத்தை உணர ஆரம்பித்திருந்த வாழ்க்கையை,சீரழிவுகளை,சிறப்புகளைப் பற்றி எனக்கு சொல்ல நிறைய இருந்தது.நாவல் என்பது கதை சொல்வதல்ல என்ற அறிவிருந்தது.நன்றாக உணர்ந்திருந்த வாழ்க்கையை கலையாகப் படைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது அந்த வாழ்க்கையின் சகல சாராம்சங்களையும் சொல்லிவிடுவது எனக்கு அவசியமாக இருந்தது. கவிதை,சிறுகதை,நாவல் என்ற ரீதியில் படைப்பில் ஈடுபாடு கொண்டிருக்கும் கலைஞன் தனது தேடல்களை சொல்லிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சதுரங்ககுதிரை 15

This gallery contains 9 photos.

ஈவிரக்கமில்லாமல் மனுசனை அடிச்சு நொறுக்குகது…….பாவப்பட்டவனை கொடுமைப்படுத்துகது….உனக்கும் எனக்குமாக குரல் கொடுப்பவனை லாட்டியால் அடிக்கது……இதெல்லாம் நியாயம்தானா? நாங்க வெறும் கருவிதான்…அடிண்ணு ஆர்டர் கொடுத்தா அண்ணன் தம்பி பார்க்க முடியுமா? இங்லீஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம், காங்கிரஸ்காரன் சர்கார்லேயும் அடிச்சோம்……ஜனதா சர்கார்லேயும் அடிச்சோம்…..கம்யூனிஸ்காரன் சர்கார்லயும் பெங்கால்ல அடிக்கத்தானே சாப் செய்தான்… …..நாஞ்சில்நாடன் முன்கதை :  சதுரங்க குதிரை         … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் முன் பகுதிகள்: சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் சொல்வனம் பனுவல் போற்றுதும் பரணி பரணி என்றால் பெரிய ஊறுகாய்ப் பரணி, நல்லெண்ணெய்ப் பரணி, சிறிய உப்புப் பரணி, தயிர்ப் பரணி என இன்று மணிவிழா வயதைத் தாண்டியவர் அறிந்திருப்பார்கள். திருநெல்வேலிக்காரர் ஒருபோதும் தாமிரபரணியை மறந்து வாழாதவர். ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பே அவர் மரபணுக்களில் சேமிதமான செய்தி அது. தமிழில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஈசாக்கு

This gallery contains 5 photos.

  வாழ்க்கை என்பது, சம்பவங்கள் என்பது, மனிதமனத்தின் செயல்பாடுகள் என்பன கதை எழுதுவதற்காக நடைபெற்றுக் கொண்டிருப்பவை அல்ல. உங்களை மகிழ்வூட்ட கேளிக்கையூட்ட அல்ல. நல்ல எழுத்து என்பது ஒரு புரிதலுக்கு ஆட்படுத்த இயங்குவது. புரிதலுக்கு எப்படி ஆட்படுத்துவது? சில கேள்விகளை எழுப்புவதன் மூலம். கேள்விகள் எங்கிருந்து படைப்பாளிக்கு எழுகின்றன? வாழ்க்கையைக் கூர்ந்து நோக்குவதன் மூலம். …நாஞ்சில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத் திக்கும் மதயானை 12C

This gallery contains 7 photos.

ஊருக்கு போகவேண்டும் என்றால் 2000 ரூபாய் வேண்டும். ஆனால், வருடம் முழுவதும் சேமித்தால் மட்டுமே அத்தொகையை சேமிக்க முடியும். அதனால் ஒரு நண்பன் ஊர் செல்ல ஆசைப்படும் போது ஆளாளுக்கு 100, 200 ரூபாய் என்று தருவோம். அதை வாங்கிக்கொண்டு ஊருக்குப் போகும் அவனை வழியனுப்பி வைக்க ரயில் நிலையத்தில் நிற்போம். வண்டி கிளம்பும் அந்தத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சதுரங்ககுதிரை 14

This gallery contains 10 photos.

நாவல் எழுதுவது என்பது வாழ்க்கையை அப்படியே பதிவு செய்வதல்ல அதைக் கூர்மையான பார்வை உடைய யாரும் செய்துவிட முடியும்.நல்ல கலைஞன் நகல் செய்துகொண்டு போவதில்லை.வாழ்க்கை அனுபவத்தைக் கலையாக மாற்றும் நுட்பமான வேலை அவனுடையது.எல்லாக் கலைஞர்களைப் போலவே நாவலாசிரியனுக்கும் அந்தப் பொறுப்பு உண்டு.அதை உணராமல் நல்ல நாவல் எழுதும் முயற்சி வியர்த்தனமானது.நாவலாசிரியன் என்ற முறையில் இது எனக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அமைதியான ஒரு மாலைப் பொழுதில்

This gallery contains 5 photos.

கதையோ, கவிதையோ எதுவுமே சமூகத்தின் விளைபொருள் என்ற வகையில், வெற்றுக்கூடல்ல. அதற்குள் ஓர் உயிர் ஒளிந்து கிடக்கிறது. அதை, அதன் உயிர்த்துடிப்பை வெளியே கொண்டு வருவதில்தான் கலைஞனின் கிரியேட்டிவிட்டி இருக்கிறது. எந்தப் படைப் பாளிக்கும், அவரின் எந்த ஒரு படைப்பிற்கும் அவருக்கேயுரிய அல்லது அதற்கே உரிய எல்லைகள் – லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. வாசகர்களில் பல படித்தரமானவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

என்பிலதனை வெயில் காயும் 20

This gallery contains 9 photos.

மூன்றாவதாக எழுதப்பட்டு, இரண்டாவதாக 1979-ல் வெளியான நாவல் ‘என்பிலதனை வெயில் காயும்’.தற்போது புத்தகமாக இருக்கும் வடிவத்தில் நான் அதை எழுதவில்லை. ஐந்தாவது நகலெடுப்பில் அதன் வடிவம் தலைகீழாக மாறியது. வடிவம், உத்திபற்றிய என் அக்கறைகளை அந்த நாவலில் காண இயலும்………………..நாஞ்சில் நாடன்  முன்கதை :என்பிலதனை வெயில் காயும்             … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எட்டுத் திக்கும் மதயானை 12B

This gallery contains 7 photos.

படைப்பென்பது உள்ளாடையின் உள்ளறையில் வைத்துப் பாதுகாத்துத் திரியும் ஒன்றல்ல என்பதால் களவாடிக் கொள்கிறார் எந்த நாணமும் இன்றி. பொதுசொத்து என்பதாலேயே அது மரியாதை இழந்தும் போனதாகிறது. எனவே அசலைத் தூக்கி அந்தரத்தில் வீசிவிட்டு நகலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பல்லக்கு, பவள மணிப்பூக்கள், பரிவட்டங்கள்… என்றாலும் அலுத்துப் போகவில்லை, எழுதுவது. உங்களுக்கும் அலுத்துப் போகாதவரக்கும் எழுதலாம், தொடர்ந்து. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்