Monthly Archives: நவம்பர் 2014

நூன் முகம்-சிற்றிலக்கியங்கள்

This gallery contains 7 photos.

நூல்கள் பயிலப்பட வேண்டும், சொல்லப்பட வேண்டும், அனுபவிக்கப்பட வேண்டும், போற்றப்பட வேண்டும். எனவே நான் கேள்விப்பட்ட, வாசிக்க நேர்ந்த, அனுபவித்த, சிற்றிலக்கிய வரிசை நூற்கள் சிலவற்றை மட்டும், உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன். இதில் பேசப்படும் பல நூல்களில் ஒன்றேனும் எதிர்காலத்தில் உங்கள் கரங்களில் கொலு ஏறுமானால், என் இந்த முயற்சியின் பயன் அது.   ………………….நாஞ்சில் நாடன்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கூற்றம் (கவிதை)

This gallery contains 2 photos.

தொல் கடலின் வேங்கைச் சுறா ஆழம் அறியும் வேழம் அறியும் கானில் பூத்த புளிய மரம் கொடுங்காற்றின் குலப்பாடல் கூளம் அறியும் வல்லரவின் உட்செவிகள் மேளம் அறியும் கோளும் அறியும் கொல் கூற்றின் கொக்கரிப்பு நீயறிய மாட்டாயோ உடன் பிறப்பே ! ரத்தத்தின் ரத்தமே ! தோழனே ! தொண்டனே ! தலைவன் யார் கயவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

டென்னிஸ் எல்போவும் டிரிகர் பிங்கரும்

This gallery contains 14 photos.

’மாமன் பிடித்து வந்த பிடி கயிறு பொன்னாலே’ என்று செங்கல் சூளையில் வேலை பார்க்கும் பெண் தாலாட்டும் கற்பனை. ‘கோவணம்கூட பொன் சரிகையாக இருந்திருக்கலாம்….’ இந்த நாஞ்சில் நாடன் பயலைக் கேட்டால், தங்க கோமணம் மலைபடுகடாம் பயன்படுத்தி இருக்கிறது என்பான்… யாரு கேக்கதுக்கு இருக்கு? படிச்சிருந்தால்தானே மறுக்க முடியும்? கோமணம் என்னும் சொல்லி இருந்து, கெளபீன … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

இரக்கம் என்று ஒரு பொருள் இலாதவர்

This gallery contains 9 photos.

நண்பர் கோமல் அன்பரசன் எழுதி, விகடன் பிரசுரமாக வெளிவரும் ‘கொலை கொலையாம் காரணமாம்’ எனும் நூலில் தொகுக்கப்பட்டுள்ள, தமிழகத்தை குலுக்கிய 25 வழக்குகளின் செய்திகளை வாசித்து வரும்போது, மனதளவில் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன். தத்தம் கட்சிக்காரர்களை காப்பாற்ற, தப்புவிக்க, தமது நிர்வாகத் திறமை குறைபாடுகளை மறைக்க, பொருளாசை காரணமாக அறம் பிறழ்ந்து செயல்படும், செயல்பட்ட அரசுகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் வெண்முரசு வாசிப்பனுபவம், வாழ்த்து

வெண்முரசு’ வெளியீட்டு விழாவை முன்னிட்டு எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்கள் வெண்முரசிற்கு அளித்த நேர்காணல்

Posted in அசை படங்கள், அனைத்தும் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அன்பின் ஆழம்

This gallery contains 6 photos.

  சிலர் கேட்டுக்கொண்டால் மறுக்க முடிவதில்லை. ஊரில் கேட்பார்கள் ”ஆத்திலே சாடச் சொன்னா சாடுவியா?” என்று. ஆம், சாடுவோம். ஆனால் அவர்கள் அவ்வித காரண காரியம் இன்றி சாடச் சொல்ல மாட்டார்கள். அந்த உறுதியினால்தான் இதை எழுதத் துணிந்தேன். தமிழின் சமகாலத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவரும், சிறுகதை என்றும், நாவல் என்றும், கட்டுரை என்றும் செயற்கரிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

தேசு குறைய எரியுமோ!

This gallery contains 7 photos.

நான் விரும்பித் தொடர்ந்து வாசிப்பவர்களில் முக்கியமானவர், லஷ்மி சரவணக் குமார். ஐந்தாறு ஆண்டுகளாய் கவனித்துத் தொடர்கிறேன் அவரது சிறுகதைகளை. பட்டியலிடுவது ஒன்றும் பாவகாரியமோ, வாக்குச் சேகரிப்போ, வெள்ளாளமயமாக்குவதோ அல்ல. இந்த வயதில் எனக்கு யாரால் என்ன ஆகவேண்டியதிருக்கிறது! பட்டியலின் விடுதல்கள் வயதின் மறதி சார்ந்தவை. அவற்றுள் எந்த நுண் அரசியல் கண்டுபிடித்தாலும் எனக்கது பொருட்டில்லை, அக்கறையும் … Continue reading

More Galleries | Tagged | 1 பின்னூட்டம்

கவிதை, ஞானம், இறை

This gallery contains 11 photos.

இதுகாறும் நான் எழுதிய முன்னுரைகள், மதிப்புரைகள், பிற கட்டுரைகளில் எழுதிய குறிப்புகள் யாவும் பதிவில் உள்ளன. முனைந்தால் யாரும் தேடி எடுத்துவிட இயலும். எனக்கெதிராக இலக்கிய உலகில் வலிந்து மேற்க்கொள்ளப்படும் பரப்புரையை என் பதிவுகளே எதிர்கொள்ளும். நான் மேலே குறிப்பிட்ட பதிவுகள் வழி நின்று , நான் ஆதரித்த ஆசிரியர்களின் ஜாதி, மதம்,இனம், வர்க்கம் பற்றி … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்