Category Archives: கல்யாண கதைகள்

தாலிச் சரண் மறுவாசிப்பு

This gallery contains 1 photo.

தாலிச்சரண்  

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

யானை லொத்தி

This gallery contains 12 photos.

யானை லொத்தி நாஞ்சில் நாடன் ——————— பிரம்மாண்டமான கல்யாணம். பிரம்மாண்டம் என்பதற்கு என்ன அளவு? எத்தனை கன அடி? பிரம்மாண்டமான கூட்டம், பிரம்மாண்டமான படம், பிரம்மாண்டமான ஊழல். பெரிய என்று கொள்ளலாமா? எதையும் ஒப்பீட்டு அளவில் தானே அனுமானிக்க இயலும்? எருமையை விட யானை பெரிது எனில், யானை பார்த்திராதவனுக்கு உத்தேசமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்.. … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கல்யாண பரிசு

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் திருமண வீடுகளுக்குப் போனால், பரிசுப் பொருட்களை வாங்கித் தரும்படியோ, காசு-பணம்-துட்டு-மணி கவரில் போட்டுக் கொடுக்கும்படியோ நமக்கு வருமானம் போதாது. பெரும்பாலும் நம்மைக் கல்யாணத்துக்கு அழைப்பவர்கள் நம் எழுத்தோடு அறிமுகம் உடையவர்கள். மேலும் ‘அம்பட்டன் குப்பையிலே அத்தனையும் மயிரே’ என்பதை போல, நம்மிடம் இருப்பவை புத்தகங்களே! விலைமதிப்பற்ற நம் கையெழுத்து ஒன்றினைப் புத்தகத்தில் நாட்டி, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் எழுதிய கல்யாண கதைகள் https://nanjilnadan.com/category/கல்யாண-கதைகள்/

More Galleries | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

அறுசுரம்

This gallery contains 4 photos.

  எல்லாம் நேரம். பெரும்பாறையின் ஒரு பகுதி அம்மன் சிலையாக வடித்தெடுக்கப்பட்டு அபிடேகம், அர்ச்சனை, தூப தீபம், நானாவித பரிமள புட்ப வாசனை,சகலவிதமான அலங்காரம் ஏற்று வழிபடும் தெய்வமாக, பலர் கை தொழ நிற்கிறது. இன்னொரு துண்டு வாசற்படியாக பலர் மிதித்து ஏறும்படியாகவோ, திண்டின்மேல் பதிக்கப்பெற்று பக்தர்கள் குண்டி தாங்கும் பதிக்கப்பட்ட பாளமாகவோ கிடக்கிறது.    … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

விளம்ப காலம்

This gallery contains 3 photos.

  நாஞ்சில் நாடன் சிறுகதை தினமணி தீபாவளி மலர்  2013  

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் சங்கமம்

This gallery contains 8 photos.

ஏ.  கோபால் ‘ஒரு விழாவை கல்யாணம் போல் செய்தான்” என்பார்கள் எங்கள் பக்கம். கல்யாணத்தை சங்கமமாக அமையப்பெற்றது யாம் பெற்ற பாக்கியம்! எம் ஆசான் நாஞ்சில் நாடன் புதல்வி சௌ.சங்கீதாவின் திருமணம், திருமணம் என்றும் உணரப்பட்டது. ஆசான் எழுத்துக்களில் தொனிக்கும் வன்மை பழகுவதில் புலப்படும் மென்மையாய் !  நாகர்கோயில்,நவம்பர் 12,13 தேதிகளில் சொல்லேர் கலைஞர்களின் கோவிலாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இருள்கள் நிழல்களல்ல – நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள் 6

This gallery contains 10 photos.

  சின்னஞ் சிறு வயதில், ஆறோ ஏழோ படிக்கின்றபோது, ஊரில் நடந்த திருமண வீட்டில், மத்தியானம் சாப்பிட, வகுப்பாசிரியரிடம் அனுமதி பெற்று, ஒன்றரை மைல் ஓடிவந்து பந்தியில் உட்கார்ந்திருக்கும்போது, உடை கண்டு, பொருளாதார நிலை கண்டு, பந்தியில் இருந்து தூக்கி வெளியே விடப்பட்ட சிறுவனின் அகம் இன்னும் மறந்து போகவில்லை. பசியின், அவமானத்தின், சோகத்தின், பலகணிகள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

எங்க நாஞ்சில் வீட்டுக் கல்யாணம்

This gallery contains 1 photo.

ச விஜயலச்சுமி முன் பகுதிகள்: எங்கவீட்டுகல்யாணம்…பகுதி-1   எங்க வீட்டுக் கல்யாணம்…பகுதி-2 பார்த்த இடத்தின் களிப்போடும் தங்கையின் திருமணத்தின் குதூகலத்தோடும் மண்டபத்திற்குவந்தேன்.தமிழ்ச்செல்வன் அண்ணன் மகனின் திருமணத்திற்குபின் இத்தனை படைப்பாளிகள் கலந்துகொண்ட திருமணம் சமீபத்தில் வேறெதுவும் இல்லை.எனக்கு நேரடி அறிமுகமில்லாத பலரையும் சந்திக்கும் வாய்ப்பாக இருந்தது.தங்கை சங்கீதா பொறுப்பு மிக்கவள். அவளது பொறுப்புணர்ச்சியினால் எனக்கு கொஞ்சம் செறுக்குகூட, பல முறை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

துறவு – நாஞ்சில்நாடனின் கல்யாணக்கதை 5

This gallery contains 8 photos.

  இரயில் வள்ளியூரைத்தாண்டிய சிலநிமிடங்களில் தொலைபேசியில் நாஞ்சிலார் அழைத்தார்.வண்டி எங்கே வந்துகொண்டிருக்கிறது என கேட்டவர் இரயில் நிலையம் வந்து சேரும் நேரத்தைக்கூறிவிட்டு நான் இங்கேதான் இருக்கிறேன் மெயின்கேட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார்.அறைக்கு அழைத்துச்செல்ல காத்திருந்தார்.காலையில் தங்கை சங்கீதாவுடன் இணைந்து நாஞ்சில்நாட்டு சிற்றுண்டி சாப்பிட்டோம்……(ச விஜயலட்சுமி)(http://peruvelippen.wordpress.com/2011/11/18/எங்கவீட்டுகல்யாணம்பகு/)   பிற நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள் 1 கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம் 2  … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனின் கல்யாண கதைகள்

This gallery contains 1 photo.

 …நாஞ்சில் நாடன் எழுதிய கல்யாணக் கதைகள் 1. பண்டாரம் பிள்ளைக்குப் போகாமல் முடியாது. ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்குக் கல்யாணம் நடக்கையில் தாய்மாமன் முறையுள்ளவன் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அக்காளுக்கோ வேறு உடன்பிறப்பு கிடையாது. நிச்சய தாம்பூலதுக்கே எழுத்து உண்டு. ‘தத்தர’ நடவு சமயம் எனவே போகமுடியவில்லை. இப்போது கல்யாணத்துக்கு எங்கு கடன்பட்டாலும் எவள்  தாலியை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தாலிச்சரண்

This gallery contains 14 photos.

நாஞ்சில் நாடன் நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற தாலிகட்டுக்கள் அதற்கு முன்பும் நடந்திருக்கும். பின்பும் நடக்குமாக இருக்கும். கிழக்குப் பார்த்து விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது.  கிழக்கென்பது அனுமானம் தீர்மானித்தது. காங்கிரீட் அடுக்குப் பெட்டிகளுக்குக் கிழக்கும் மேற்கும் என்பது உழக்கில் கிழக்கும் மேற்கும் போல. ஆனால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஐயம் இட்டு உண்

This gallery contains 12 photos.

  நாஞ்சில் நாடனின் கல்யாணக் கதைகள் 4 அக்கரை என்றோர் ஊரை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பொதுவாக ஆற்றின் மறுகரை என்பது பெறுபொருள். ஆற்றின் இக்கரையில் பிரதானமான ஊராக சுசீந்திரம் இருப்பதால், இரண்டாகப் பிளவுபட்டு கிடக்கும் மறுகரையில் இருக்கும் ஊரது.  நானிங்கு சொல்ல வருவது அந்த அக்கரையைதான்.  இந்த கர்நாடக இசை உலகில் கசிந்து குழைந்து உருகிவரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்

நாஞ்சில் நாடன்  பண்டாரம் பிள்ளைக்குப் போகாமல் முடியாது. ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்குக் கல்யாணம் நடக்கையில் தாய்மாமன் முறையுள்ளவன் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது. அக்காளுக்கோ வேறு உடன்பிறப்பு கிடையாது. நிச்சய தாம்பூலதுக்கே எழுத்து உண்டு. ‘தத்தர’ நடவு சமயம் எனவே போகமுடியவில்லை. இப்போது கல்யாணத்துக்கு எங்கு கடன்பட்டாலும் எவள்  தாலியை அருத்தானாலும் போய்த்தான் தீர வேண்டும். … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், கல்யாண கதைகள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

பாலாவும் இடலாக்குடி ராஜாவும்

பாலாவும் இடலாக்குடி ராஜாவும் ஜெயமோகன் http://www.jeyamohan.in/?p=9120 கல்லூரிநாட்களில் கஞ்சாக்கும்பலில் ஒருவராக அடிதடியும் கலாட்டாவுமாக அர்த்தமே இல்லாத வாழ்க்கையை வாழ்ந்தவர் பாலா என்ற பாலசந்திரன். உடல்நலம் சீரழிந்து நடமாடுவதே கடினமாக ஆனநாட்கள்……அப்போது தற்செயலாக ஒரு நூலில் இடலாக்குடி ராஜா என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. எழுதியவர் நாஞ்சில்நாடன்…அந்தக்கதை பாலாவை ஓங்கி அறைந்தது……….அதுவே பாலசந்திரன் பாலா ஆன கதை. அது … Continue reading

Posted in அனைத்தும், கல்யாண கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், நாஞ்சில்நாடனைப் பற்றி | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இடலாக்குடி ராசா – நாஞ்சில் நாடன்

இடலாக்குடி ராசா  – நாஞ்சில் நாடன்   (நன்றி:  கதையை தட்டச்சுசெய்து தந்து உதவியவர்:    சென்ஷி senshe.indian@gmail.com ) ‘இடலாக்குடி ராசா’ என்றால் எல்லோருக்கும் ஒரு இளக்காரம். வெள்ளாட்டு மறியைப் பார்த்தாற்போல. வாயால் ‘புர்ர்ர்..’ என்று ஒலியெழுப்பி மருட்டும் விளையாட்டு. முன்னங்கால் கறண்டையில் முறுக்கிய துணிப்பிரியால் கட்டு. உராய்ந்து உராய்ந்து முட்டிகளின் சதைந்த செம்புண் பின்காலில் ஒவ்வொரு … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், கல்யாண கதைகள், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , , , , , , | 35 பின்னூட்டங்கள்