Monthly Archives: நவம்பர் 2012

பெருந்தவம்- (முழுக் கதை)

நாஞ்சில்நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க முடியும். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்

நாஞ்சில்நாடனும் ஒரு சிறுகதையும்

This gallery contains 4 photos.

வீரக்குமார்…ஈரோடு சிவகிரி http://www.veerawritings.blogspot.in/2012/11/blog-post_1374.html வெகுஜன ரசிப்புத்தளத்தில் இருந்து வந்த என் வாசிப்பு அனுபவத்தை இலக்கியப்படுத்திய என் முதல் முன்னோடி நாஞ்சில்நாடன். அவரின்கதைகளைப் பிடித்துக்கொண்டுதான் என் முதல் அடியை தீவிர வாசிப்பின்மாபெரும் கோட்டைக்குள் அடி எடுத்து வைத்தேன். அவருடைய எழுத்தின்தடத்தை ஒட்டியே என் ஆரம்பகால வாசிப்புகளின் ஒப்பீடு இருந்தது.கதைசொல்லலில் அவருக்கிருந்த துல்லியத்தன்மை எனக்குள் பெரும்கிளர்ச்சியை  உண்டாக்கியிருந்த காலத்தில் அவரின் கதைகள் மூலமாகவேநான் நாஞ்சில் நாட்டைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை என்மனதுக்குள் உருவாக்கிக் கொண்டேன். தொடர்ந்த அவருடையதான எழுத்தின்வாசிப்பு தந்த உற்சாகத்தின் காரணமாக அவருடைய கதைகளின்களங்களையும் அவரின் கதாபாத்திரங்களையும் பார்த்துவிடவேண்டும் என்றநாடகத்தனமானதொரு எண்ணம் எனக்குச் சிறு செடியைப் போல் முளைவிடத்துவங்கியது. பின்னாளில் அது பெருமரமாய் வளர்ந்து நிற்கையில் நான்நாஞ்சில் நாட்டுப் பயணத்தைத் தீர்மானித்துவிட்டேன். கன்னயாகுமரிமாவட்டத்தின் செழிப்பான பல கிராமங்களின் தொகுப்பேநாஞ்சில் நாடு. அதில் ஒன்று வீரநாராயணமங்களம். நாஞ்சில் நாடனுடையசொந்த ஊர். நாகர்கோவிலிருந்து இறச்சகுளம் சென்று பின் வலம் திரும்பிச்செல்ல ஆரம்பித்தவுடனேயே அவரின் சிறுகதைத் தொகுப்பைத்திறந்துவைத்துப் படிக்க ஆரம்பித்ததைப் போன்ற உணர்வு உண்டானது. அவரின் கதாபாத்திரங்களான சின்னத்தம்பியா பிள்ளையும் பூதலிங்கம்பிள்ளையும் பூமணியும் வழியெங்கும் குறுக்கிட்டார்கள். அவர் விரித்துவிரித்து எழுதிய நெர்கதிர் வயல்வெளிகளும் நீலப்பச்சை மலைக் குன்றுகளும்சிதிலப்பட்ட தார்ச்சாலைகளும் வரவேற்க, வீரநாராயணமங்களம் நோக்கிமெல்ல நகர்ந்தேன். வழக்கமாக சின்னத்தம்பியா பிள்ளை குளிக்கும் பழையாறு கிளை பிரிகின்றஇடத்தை திருவிதாங்கூர் மகாராஜா காலத்து சுடு செங்கல் சுண்ணாம்புக்காரைப்பாலத்தின் மேல் நின்று கொண்டு பார்த்தேன். சிதைபட்ட பாலத்தில் வேலைநடந்து கொண்டிருந்தது. அவர் எழுதின படி அப்பொழுதும் பிள்ளைமார்களும்சின்னஞ்சிறார்களும் குளித்துக் கொண்டுதானிருந்தார்கள். வீரநாராயணமங்களம் வந்தவுடன் முதலில் தென்பட்டது அவர் படித்த அந்தப்பள்ளி. நவீன தமிழ் இலக்கியச் சூழலின் ஒரு தவிர்க்க முடியா ஆழுமையைத்தந்த அந்த ஆரம்பப்பள்ளியையும் அதன் அருகிலேயே ஓடிய வாய்க்காலின்படித்துறையையும் பக்கத்தில் உயர்ந்திருந்த ஆழமரத்தையும்வியப்புடன்பார்த்துக் கொண்டு நின்றேன். கதைகளின் வழியே எனக்குள் பதிந்திருந்தஅத்தனை உறுப்புகளும் என் கண்முன்னே நிஜமாக விரிந்து நின்ற அந்தத்தருணங்கள் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குறுக்கிட்டஒருவரிடம் –ஒருவேளை மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம்பேயாகத் தெரிவது போலவோ என்னவோ, அவர் கூட ‘எடலக்குடிராசா’போலவே இருந்தார். – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பெருந்தவம்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மேல மலை இறங்கிக் கொண்டு இருந்தான் சிவனாண்டி உச்சி சாய்ந்து. மேற்கில் படிய ஆரம்பித்த பகலவன், அவன் முதுகில் உப்புக் காய்ச்சிக்கொண்டு இருந்தான். மணி மூன்று கடந்திருக்கும். தலையில் மரச் சீனிக் கிழங்கு நிரப்பாகத் திணித்து அடுக்கப்பட்ட சாக்கு. ஓடி இறங்கி ஊருக்குள் போனால்தான் நாலு மணிக்காவது தராசும் படியுமாக யாவாரம் தொடங்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்