Monthly Archives: ஜனவரி 2017

எழுத்திலிருந்து ஞானத்துக்கு

This gallery contains 3 photos.

இத்தனைக்கும் மேலாக ஒரு எழுத்தாளனாக அவர் இப்போது செய்துகொண்டிருக்கும் காரியமே தமிழுக்கு அவருடைய முக்கியமான பங்களிப்பாக, அவரது வாழ்நாள் பங்களிப்பாகவும் இருக்கும். இன்றைய நம் தலைமுறை தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழின் மரபிலக்கியங்களை புத்துயிர்த்துத் தருகிற மகத்தான பணியினை அவர் செய்துகொண்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களும், தமிழ் பேராசிரியர்களும் செய்யவேண்டிய சாதனைப் பணியினை அவர் மேற்கொண்டிருக்கிறார். …(எம். கோபாலகிருஷ்ணன்)

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எழுத்தாளனுக்கு திமிர் கூடப் பிறந்தது (1)

This gallery contains 7 photos.

”மனித மனங்களின் உள்ளுணர்வுகளை ஊடுருவிக் கொள்ளும் கலையே உண்மையான இலக்கியம்” என முன்வைக்கிறார் நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

அறியார், அறியார்!

This gallery contains 10 photos.

வணக்கம் கணையாழியில் 2016 இல் வெளிவந்த கட்டுரைகளில் நாஞ்சில் நாடனுடைய  அறியார்,  அறியார்! … கட்டுரை சிறந்த கட்டுரையாகத் தேர்வாகியுள்ளது பரிசளிப்புவிழா 18.2.17 சென்னையில். கலந்துகொள்ள வேண்டுகிறோம் ம.ரா. மற்றும் கணையாழி

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஆதி எனும் சொல்லும் செயலும்

This gallery contains 11 photos.

இந்த சந்தர்ப்பத்தில் வேறு சிலரை எண்ணிப்பார்ப்பது நமக்கு தவிர்க்க முடியாததாகிறது. மயிர்பிளக்கும் முற்போக்கு வாதங்களையும் , நவீனத்துவ-பின்நவீனத்துவ சிந்தனைகளையும் போதித்து , சமூக நீதிக்கு போராடிய சிலர், நல்ல வருவாயுள்ள அரசுப்பணியை, வங்கிப்பணியை துறந்துவிட்டு , களத்தில் துணிவுடன் தீப்பாய்ந்து நமது வியப்பையும் நன்மதிப்பையும் ஒருசேரப் பெற்றனர்.ஆனால் காலம் என்பது கறங்கு போல் சுழன்றது.  விழித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

சிறப்புப் பட்டம்

This gallery contains 1 photo.

‘காவல்துறையில் மட்டும் உயர் அதிகாரிகளின் வீட்டில், கடைநிலை ஊழியக் காவலர்கள் இன்றும் தரை கூட்டிப் பெருக்கித் துடைக்கிறார்கள்; தோட்ட வேலை செய்கிறார்கள்; மீன் சந்தைக்குப் போகிறார்கள்; மேலதிகாரிகளின் சீருடைகளைத் துவைத்து உலர்த்தி தேய்த்து மடிக்கிறார்கள்; காலணிகளுக்குப் பாலீஷ் போடுகிறார்கள்’ என சினிமாக்களில் காட்சி வைக்கிறார்கள். ஒடுக்கப்பட்டோருக்கு உயிர் கொடுக்க என்றே உயிர் வாழும் தலைவர்கள் எவரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மரவள்ளிக் கிழங்கு ருசி… மரணம்வரை போகாது!

This gallery contains 2 photos.

மரவள்ளிக் கிழங்கு ருசி… மரணம்வரை போகாது!’  நாஞ்சில் நாடனின் பால்ய நினைவு! சின்ன வயது ஞாபகங்கள் என்பது நம் எல்லோருக்கும் ரசனையானது. அந்த வரிசையில் தன் சிறு வயது ஞாபகங்களை, நமக்காக தவழ விடுகிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். ” 1955- ஆண்டு வாக்கில் அப்போது திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு நாஞ்சில் நாடு இணைந்து இருந்தது. மொழிவாரியாக … Continue reading

More Galleries | Tagged | 1 பின்னூட்டம்

கும்பமுனியும் தவசிப்பிள்ளையும்

This gallery contains 7 photos.

கும்பமுனி அரசியல், கலை இலக்கியம், உலக நடப்புகள் என எல்லாவற்றையும் அதிரடியாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். அதற்க்கு எதிர்வினைபோல தன்னை விமர்சிக்கவும் தவசிப்பிள்ளையை தாராளமாக அனுமதிக்கிறார். கும்பமுனியை இயக்கும் “ரிமோட்” நாஞ்சி நாடனிடம் இருக்கிறது. தன்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றவற்றைக் கூடுவிட்டு கூடுபாய்ந்து கும்பமுனிக்குள் ஏறிநின்று அவர் பேசுகின்றார் என்றே நான் கருதுகிறேன்  (… கீரனூர் ஜாகிர்ராஜா) உயிரெழுத்து(டிசம்பர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே

This gallery contains 2 photos.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே! நாஞ்சில் நாடன் ———————————————- எம்.எல்.ஏ. மகனா? முந்திச் சென்ற எந்தப் பயலையும் சுட்டுக் கொல்லலாம் சினிமா நடிகனா? நடைபாதை துயிலும் நலிந்த மனிதனை நசுக்கிப்போகலாம்! சின்னத் தலைவனா? எதிர் தொழிற்கூடம் ஊழியரோடும் எரித்து அழிக்கலாம்! கோடிகள் குவித்த அமைச்சன் ஊழலா? நாற்பத்தெட்டாண்டுகள் விசாரணை நடக்கும்! பதினாயிரம் கோடி அரசை ஏய்த்தால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்