Monthly Archives: நவம்பர் 2015

பதவியில் இருப்பவனே சகிப்புதன்மை அற்றவனாகிறான்

This gallery contains 2 photos.

ச. மோகனப்பிரியா தேனியைச் சேர்ந்த எழுத்தாளர் மா.காமுத்துரை எழுதிய ‘புழுதிச்சூடு’ என்ற நூல் வெளியீட்டு விழாவிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தேனி வந்திருந்தார். அவரிடம் சில முன்வைத்தோம். சகிப்புத்தன்மை குறித்து எழுத்தாளராக உங்கள் பார்வை? அமைதியின்மை, பொறுமையின்மை என்கிறது சமூகத்தில் அதிகமாக இருக்கு. மக்களுக்கு இந்த மாதிரியான அழுத்தம் அதிகமா … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

‘கரம் பற்றுதல்’

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ‘கரம் பற்றுதல்’ எனில் நம் மொழியில் ‘வதுவை செய்துகொள்ளுதல்’ என்று பொருள். எளிய தமிழில் சொன்னால், திருமணம் முடித்தல். கைத்தலம் பற்றினான் என்றாலும் கரம் பிடித்தான் என்றாலும் அதுவே பொருள். நாராயணன் நம்பி, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கனாக் கண்ட அன்னவயல் புதுவை ஆண்டாள்,‘மத்தளம் கொட்ட, வரி சங்கம் நின்று ஊத, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பேயென்று – கைம்மண் அளவு 39

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் காஞ்சனை’ என்று புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்று. 1943ல் ‘கலைமகள்’ இதழில் வெளியான பேய்க்கதை. மிகச் சிறந்த சிறுகதைகளில் அதுவும் ஒன்று. அந்தக் கதையை வாசித்துவிட்டு அவரிடம் கேட்டார்களாம், ‘‘பேய், பிசாசு, பூதங்களில் எல்லாம் நம்பிக்கை உண்டா?’’ என்று. அவர் சொன்னாராம், ‘‘நம்பிக்கை இல்லை… ஆனால் பயமாக இருக்கிறதே!’’ பேய் என்றால் எல்லோருக்குமே ஆர்வம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சொல்லுதல் யார்க்கும் எளிய

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் கைம்மண் அளவு 38 ‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பது வினைத்திட்பம் அதிகாரத்துத் திருக்குறள். அதைச் செய், இதைச் செய், அதைச் செய்வேன், இதைச் செய்வேன், அதைச் செய்திருக்கலாம், இதைச் செய்திருக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளிய காரியம். ஆனால் அவர் சொன்னபடி அவரே செய்தல், அவர் எதிர்பார்த்தபடி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

குடி குறித்து மறுபடியும் – கைம்மண் அளவு 37

This gallery contains 12 photos.

நாஞ்சில் நாடன் முந்திய கிழமை மதுவிலக்குக் கொள்கை பற்றி நம் கருத்தைப் பரிமாறினோம். இத்தொடர் எழுதத் துவங்கிய பின்னர், எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தக் கட்டுரைக்கு வாசக நண்பர்கள் எதிர்வினை ஆற்றினார்கள். வாழ்நாளில் ஒருமுறை கூட மோரைத் தவிர வேறெதையும் மோந்து பார்த்திராத நண்பர்கள், ‘‘நீங்கள் பகிர்ந்து கொண்டவை நியாயமான நடுநிலையான கருத்துகள்’’ என்றார்கள். அவ்வப்போதும் … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்