Monthly Archives: நவம்பர் 2020

அன்னக் கொடை

This gallery contains 1 photo.

முத்தாரம்மனுக்குக் கொடை என்றால் அவன் ஊரில் எப்போதும் அது அன்னக் கொடை, சில ஊர்களில் காட்டு என்பார்கள். உணவை ஊட்டுவதால் ஊட்டு. அமர்ந்து உண்ணும் இடம் ஊட்டுப்புரை. சத்தான உணவு ஊட்டம். அதிலிருந்தே ஊட்டச்சத்து. காளியூட்டு, தம்பிரான் ஊட்டு என்று நாஞ்சில் நாட்டில் கோயில் திருவிழாக்கள் உண்டு. உடன்தானே ஊட்டு மலையாளம் என்று தழைந்துவிட்டுப் பெயராதீர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளனின் பார்வை

This gallery contains 1 photo.

ஜெயமோகன் துரதிருஷ்டவசமாக நூல்களிலிருந்து பெற்ற ‘தரவுகளை’ கொண்டு எழுதுவது எழுத்தாளர்களின் வழக்கம் அல்ல. அவர்களுக்கு நேரடி அனுபவம், அதிலிருந்து உருவாகும் உள்ளுணர்வுதான் முக்கியமானது. அதை எழுதத்தான் அவர்கள் இலக்கியம் படைக்கிறார்கள் ஓர் எழுத்தாளன் சாமானியர்களில் ஒருவனாக தன்னை உணர்வுரீதியாக அமைத்துக்கொண்டு எழுதுகிறான். அவனில் வெளிப்படுவது அக்குரல். அக்குரலுக்கு அறச்சார்பான ஒரு முக்கியத்துவம் உண்டு. அது புள்ளிவிபரங்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அரசியலும் எழுத்தாளனும்

This gallery contains 2 photos.

இலக்கியவாதிகளை அவன் எழுத்தினூடாக அவனை அறிபவர்களால் மட்டுமே ஏற்கமுடிகிறது. வாசிக்காத பொதுமக்களுக்கு இலக்கியவாதிகள் மேல் ஒவ்வாமையே உள்ளது. ஏனென்றால் அவர்கள் ஏற்றுக்கொண்டவற்றை அவன் மறுக்கிறான். அவர்கள் போற்றுவனவற்றை ஐயப்படுகிறான். அவர்கள் நம்பும் பொதுவான கருத்துக்களை நிராகரிக்கிறான். அவர்களின் மரபை, அவர்களின் நிகழ்கால வாழ்க்கைப்போக்கை அவன் மறுவரையறை செய்யமுயல்கிறான். அவன் அவர்கள் விரும்புவனவற்றைப் பேசுவதில்லை. அவர்கள் நின்றிருக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

காயம்பூ

This gallery contains 1 photo.

ஆவநாழி நாஞ்சில் நாடன் காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது சித்தர் பாடல், “வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமத்திருப்பார் இச்சரக்கை? என்பது தனிப்பாடல், ஈண்டு காயம் எனும் சொல்லின் பொருள் உடல், காயகல்பம் எனும் சொல் கேள்விப்பட்டிருக்கலாம். நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் பேயாழ்வாரின் மூன்றாம் திருவந்தாதியில் ஒரு பாடல், “படிவட்டத் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

என்னைக் கவர்ந்த இளம் படைப்பாளி வேல்முருகன் இளங்கோ

This gallery contains 1 photo.

காஞ்சிபுரத்து ஜீவா படைப்பகம் இவ்வாண்டு வெளியிட்ட ’மன்னார் பொழுதுகள்’ எனும் நானூறு பக்க நாவல் போனமாதம் வாசிக்க நேர்ந்தது. வேல்முருகன் இளங்கோ எழுதியது. திருவாரூர் மாவட்டத்து வடுவூரைச் சேர்ந்தவர். இருபத்தொன்பது வயதானவர்; பொறியாளர் என்ற தகவல்கள் கடந்து எனக்கு வேறெதுவும் தெரியாது. ‘ஊடறுப்பு’ என்று ஒரு நாவல் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். நான் வாசித்ததில்லை. வேல்முருகன் இளங்கோவை … Continue reading

More Galleries | Tagged , , , | 4 பின்னூட்டங்கள்

வாசிப்புக்கு நேரம் தந்த கொரோனாவுக்கு நன்றி

This gallery contains 1 photo.

தமிழ் நவீன படைப்பிலக்கிய தளத்தில் மிக முக்கியமான படைப்பாளர் நாஞ்சில்நாடன். சாகித்ய அகாடமி விருது பெற்ற பிறகு, அதிக நூல்களை எழுதிய எழுத்தாளர் இவர். சோர்வு இல்லாமல் வாசிப்பதும், எழுதுவதும் இவரது இயல்பு. இந்த ஊரடங்கு காலத்தில் 150க்கும் மேற்பட்ட நூல்களை வாசித்து இருப்பதோடு, கட்டுரைகள், சிறுகதைகள் என சிறிதும் சோர்வின்றி எழுதி தள்ளுகிறார். காரணம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்

This gallery contains 1 photo.

குமரன் கிருஷ்ணன் நன்றி: பதாகை: https://padhaakai.com/2015/04/27/nadhiyin-pizhai/ நீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவ‌ரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய‌ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓசை பெற்று உயர் பாற்கடல்

This gallery contains 1 photo.

கர்நாடக சங்கீதம் என்று பரவலாக அறியப்படுகிற தென்னிந்திய இசையினை முறையாகக் கற்கும் பேறு பெற்றவனில்லை. பள்ளி நேரம் அல்லாத வேளைகளில் வயிற்றுப் பாட்டுக்காகக் கூலி வேலைக்குப் போகிறவன், இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆடும் நோக்கத்துடன் இலக்கங்கள் பல ஆண்டுக்குக் கொடுத்து பயிற்சி பெற முடியாதல்லவா? ஆனை தூறுகிறது என்று ஆட்டுக்குட்டி தூறினால் அண்டம் கீறிப் போகாதா? … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

வல் விருந்து

This gallery contains 1 photo.

வல் விருந்து வாசு பாலாஜி நாஞ்சில் நாடனை முதலில் எப்போது வாசித்தேன் என்பது நினைவில் இல்லை. வாழ்க்கைச் சுழலில் முங்காமல் முழுகாமல் ‘மிதவை ’ பற்றி நீந்தி ‘சதுரங்க குதிரையில்’ ஏறி ‘எட்டுத் திக்கும் மதயானைகளை’ வீழ்த்தி ஆசுவாசமாகி திரும்ப நாஞ்சில் நாடனை கண்டடைந்தபோது வருடங்கள் ஓடியிருந்தன.             புத்தகக் கண்காட்சியில் முதன் முறையாக வாங்கிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உண்டி முதற்றே உலகு!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில சிறுகதைகள், கட்டுரைகள் வாசித்து ஷா நவாஸ் எனும் பெயரை ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது அறுபத்தெட்டாவது வயதில் முதன் முறையாக சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் அழைப்பின் பேரில் திருமதி. சித்ரா ரமேஷ் அவர்களின் விருந்தினராக 2016 மார்ச் மாதம் சென்று சில நாட்கள் தங்கியிருந்தபோதுதான் அவரை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அநேகமாகத் தினமும் சந்தித்து உரையாடினோம். அப்போது எனக்கவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக