Category Archives: எண்ணும் எழுத்தும்

நவம்-எண்வழிக் கட்டுரைகள்

This gallery contains 6 photos.

முறையான தமிழ்க்கல்வி வாய்க்கப் பெறாத காரணத்தால், வள்ளுவர் கூற்றுப்படி சொற்களைக் காமுறத் தொடங்கினேன். முறையான தமிழ்க் கல்வி பெற வாய்த்தவர் எந்த மலையை மறித்தார்கள் என்று என்னைக் கேளாதீர்கள்!.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நவம்- நூல் முன்னுரை

This gallery contains 4 photos.

படைப்பிலக்கியம் என்பது வரிசையில் நில்லாது, ஒழுங்குக்குள் அடங்காது, ஆணைகளுக்கும் பணியாது. எந்த ஒழுங்கில் எழுதப் பெற்றிருந்தாலும், இந்தக் கட்டுரைகள் சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது என் நம்பிக்கை….(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒருமை

This gallery contains 1 photo.

http://solvanam.com/?p=47391 ஒருமைப்பாடு என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். சொல் ஒருமைப்பாடாகவும், செயல் தனிமைப்பாடாகவும் இருக்கிறது. ஒருமை என்றாலே போதும். union, unity எனும் பொருள் வந்துவிடும். வார்த்தைதான் வார்த்தைப் பாடு. கடமைதான் கடப்பாடு, பண்புதான் பண்பாடு, மேன்மைதான் மேம்மாடு. ஒருமைதான் ஒருமைப்பாடு. தேசீய ஒருமைப்பாட்டைக் கட்டிச் செறிவாக்க என்றே, நடுவண் அரசு சில நவீன கல்விக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மும்மை

This gallery contains 1 photo.

http://solvanam.com/?p=46097 ஒன்று, இரண்டு, மூன்று என்பதை ஒருமை, இருமை, மும்மை என்பார்கள். நேரடியாகத் திருக்குறளுக்கு போனால், ‘ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து ‘ என்பது அடக்கமுடைமை அதிகாரத்துக் குறள். ஐந்து உறுப்புகளையும் ஒரே ஓட்டிற்குள் அடக்குகின்ற ஆமை போல், ஐம்பொறிகளையும் அடக்க முடிந்தால், என்றும் அது பாதுகாப்பாகும் என்று பொருள். ஒருமை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

உபநெல்லும் ஊரையும்

This gallery contains 21 photos.

நெல்லைத் தூற்றி, சண்டு சாவி நீக்கினால்தான் அதற்க்கு மரியாதை. சண்டு எனில் பதர் எனலாம். ‘மழை’ பாடலில் பாரதி, ‘வானத்துத் தேவர் செண்டு புடைத்திடுகின்றார்’ என்று பாடுவதன் சரியான பொருள் எவரும் சொல்லுங்கள் ஐயா!மிளகாய் வற்றலில் சண்டு வற்றல் எனத் தரம் குறைந்த அயிட்டம் உண்டு. அது விலை குறைவானது. சாவி என்பதோ உள்ளீடற்றது. மறுபடி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

அஃகம் சுருக்கேல்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் ஔவை எனும் தமிழ்க் கிழவி, ‘அறம் செய விரும்பு’ தொடங்கி ‘ஓரம் சொல்லேல்’ ஈறாக ஆத்திச்சூடி எழுதுகிறார். இந்த ஔவையார் புற நானூறு முதலாம் சங்கப்பாடல்களில் இடம்பெற்ற ஔவையார் அன்று. சங்க கால ஔவை பாடிய பாடல்கள் மொத்தம் 59. அவரால் பாடப்பெற்றோர் 17 மன்னர்களும் மற்றவர்களும். சேரமான் மாரி வெண்கோ, பசும்பூட் பொறையன், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஔவியம் பேசேல் – 2.

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் (முன் பகுதி: ஔவியம் பேசேல்-1 ) இனி ‘கௌ’வுக்கு அடுத்த ஔகார உயிர்மெய் ‘ஙௌ’ பார்க்கலாம், என்றால் ‘ங’கர வரிசையில் லெக்சிகன் ஐந்து எழுத்துக்களே பதிவு செய்துள்ளது. ஙௌ எழுத்தில் பதிவு இல்லை. அடுத்த எழுத்தான சகர வரிசையில், சௌ பற்றிய பதிவுகள் 82. அவற்றுள் சில: சௌ – சௌபாக்கியவதி என்பதைச் சொல்லும் முதலெழுத்துக் குறிப்பு சௌக்கம் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஔவியம் பேசேல்-1

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ஈராண்டு முன்பு நவிமும்பை – பனுவேல் தமிழ்ச்சங்க ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகப் போயிருந்தேன். பத்து முந்நூறு தமிழ்க் குடும்பங்கள். என் தம்பி G.ரவி பிள்ளை தலைவராக இருந்தான். ஆண்டு விழாவில் சிறுவர் சிறுமியர் திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் சொன்னார்கள். பாரதியார் பாடினார்கள். சேவை மனப்போக்குடன், ஞாயிறு தோறும் ஒருவர் குழந்தைகளுக்கு, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நாய் பெற்ற தெங்கம் பழம் (முழுக் கட்டுரை)

This gallery contains 14 photos.

பத்து ஆண்டுகள் கூட வாழும் தகுதியற்ற நாவல்களில் சிறுகதைகளில் கவிதைகளில் இங்கு முனைவர்ப் பட்ட ஆய்வுகள் மாய்ந்து மாய்ந்து நடந்துகொண்டிருக்கின்றன, சாதி பார்த்து, மதம் கணித்து, அரசியல் சார்புகள் ஆய்ந்து இவர்கள் எதைத்தேடி எதைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? எனக்கு வியப்பு ஏற்படுவதுண்டு, எனது எழுத்துக்களில் இதுவரை பத்து டாக்டர் பட்டங்கள் எனும்போது அம்மணக்குண்டியாக ஆற்றுப்பாலத்தில் ஓடலாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – பகுதி 4

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் பிள்ளைத் தமிழ் பிள்ளைத் தமிழ் மிக முக்கியமானதோர் சிற்றிலக்கிய வகை. தமிழே பிள்ளையாக உருவெடுத்து வந்தாற்போல் கவிதைச் செழுமை உடைய நூற்கள் பல இந்த இலக்கிய வகையில் உண்டு. கடவுளை, ஞானியரை, அரசர்களை, குறுநில மன்னர்களைக் குழந்தையாகப் பாவித்துப் பாடும் இலக்கிய வகையே பிள்ளைத் தமிழ் ஆகும். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

துருப்பிடித்த வேலைத் தூர எறி- தொடர்ச்சி

This gallery contains 9 photos.

எந்த எழுத்தாக இருந்தாலும், மனித இனத்துக்கு எதிரான எழுத்து கலையே அல்ல. நமக்கெல்லாம் தெரியும், ஒருகாலத்தில், இலக்கிய திறனாய்வுகளில், கருத்தரங்குகளில், ஓங்கிக் கேட்கும் குரல் ஒன்றிருந்தது. கலை கலைக்காகவா? மனிதனுக்காகவா? அழுத்தந் திருத்தமாக ஈண்டு நான் எடுத்துக் கூற விரும்புவது, தனி மனித சமூகப் பொறுப்பற்ற எந்த எழுத்தும் கலை அல்ல. ……………நாஞ்சில் நாடன் முன்பகுதி:  ”துருப்பிடித்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்-பள்ளும் குறமும் 2

This gallery contains 1 photo.

http://solvanam.com/?p=16827 நாஞ்சில்நாடன்  மத்தியானம் சாப்பிட்ட நெல்லரிசிச் சோற்றின் பெயர் தெரியாமற் போய் விட்டோமே நாம் இன்று? எங்கே போயின இந்த நெல்லினங்கள்? விதையாவது எங்கேயும் கருதப் பட்டிருக்குமா? நெல்வகை போக, மாட்டு வகை சொல்கிறான் பள்ளன். குடைக் கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை குடைச் செவியன் குற்றாலன் கூடு கொம்பன் வடர்ப் புல்லை கரும்போரான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் -பள்ளும் குறமும்

This gallery contains 1 photo.

solvanam.com/ நாஞ்சில் நாடன் முந்தைய பகுதிகளை இங்கே படிக்கலாம் : பாகம் – 1 | பாகம் – 2      பள்ளும் குறமும்   பாட்டியல் நூல்களால் 96 என வரையறுக்கப்பட்டவை சிற்றிலக்கியங்கள். புத்திலக்கியங்களை ‘விருந்து” எனக் குறிக்கின்றது தொல்காப்பியம்.   விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே,  என்பது தொல்காப்பியம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – தூது

This gallery contains 3 photos.

  நாஞ்சில் நாடன் தூது கோவை, உலா இலக்கியங்களைத் தொடர்ந்து நாம் பார்க்க இருப்பது தூது. பிற இந்திய மொழிகளிலும் பல்வகைத் தூதுக்கள் உண்டு. வடமொழியில் இதனை சந்தேசம் என்பர். எடுத்துக்காட்டுக்கு, காளிதாசனின் மேக சந்தேசம். அதாவது மேகத்தைத் தூது விடுவது. திருக்குறளில் 69ம் அதிகாரம் ‘தூது’ பற்றிப் பேசுகிறது. தூதுரைப்பவன் பண்புகள் பேசப்படுகின்றன. அன்புடைமை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மொழி என்னும் அரண்- தொடர்ச்சி

This gallery contains 18 photos.

‘குன்றக் கூறல் மிகைபடக் கூறல் கூறியது கூறல் மாறுகொளக் கூறல் வழுஉச் சொல் புணர்த்தல் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தல் மற்றொன்று விரித்தல் சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை’ என நன்னூல் கூறும் பத்து குற்றங்களில் பலவும் ஏற்கனவே   நான் செய்தாயிற்று. அத்துடன் இதுவும் ஒன்று நாஞ்சில் நாடன் முன் பகுதி: மொழி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பஞ்சம் 1.2

This gallery contains 13 photos.

‘அஞ்சியே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி       அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க் காக ஏகி       அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்       அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்’ என்பது கம்பன் பாடல். நாஞ்சில் நாடன்  முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம்,பஞ்சம்,பஞ்சம் 1.1 

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பஞ்சம் 1.1

This gallery contains 12 photos.

 நாஞ்சிலார் அகல வாசிப்பு, அபார நினைவாற்றல். தமிழுக்கு என்றும் குறைவில்லை……… (கணபதி அண்ணன்) (கவிஞர் திருவேந்தி) சமீப காலத்தில் தமிழில் மிகத்தரமான சமூக, பொருளியல், அரசியல், இலக்கியத் திறனாய்வு, அறிவியல் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இது ஓர் உற்சாகமான நிலை. இன்று மொழி பெயர்ப்புகளும் கட்டுரைகளும் படைப்பிலக்கிய வெளியீடுகளுக்கு சற்றும் பின்தங்கியதாக இல்லை. கட்டுரை எழுதுவதற்கு ஆழ்ந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பஞ்சம்

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன்  முன் பகுதிகள் :அட்டம், சப்தம், அறுமுகம் பஞ்சம் என்பது இவண் ஐந்து எனும் பொருளில் ஆளப்படுகிறது.  வறட்சி எனும் பொருளில் அல்ல. 1876-ம் வருடத்துத் தாது வருடப் பஞ்சம்’ பற்றிப் பின்னாளில் நகை பொங்க எழுதப்பட்ட ‘பஞ்ச லட்சண திருமுக விலாசம்’ எனும் நூலை ஆய்வறிஞர் அ.கா.பெருமாள் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

சூரல் பம்பிய சிறு கான் யாறு

This gallery contains 13 photos.

தலைப்பே வெகுவான கிளர்ச்சியை ஏற்படுத்துவது. சங்க இலக்கிய வரியோ எனும் மயக்கம். சூரல் எனில் மூங்கிலில் ஒரு வகை. பம்பிய எனில் அடர்ந்த, செறிந்த, நெருங்கிய, பின்னிப் படர்ந்த. சிறு கான் யாறு எனில் சிறிய காட்டாறு. தொகுப்பின் ஆசிரியர், எம்.எஸ். ரஜினி பிரதாப் சிங், அந்த வரி எங்கு வருகிறது என இன்னும் தேடிக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அறுமுகம்

  நாஞ்சில் நாடன் அட்டம், சப்தம் என்பனவற்றின் தொடர்ச்சியாக எழுதப்பெறும் கட்டுரை என்பதை  நீங்கள் அறிவீர்கள். உண்மையில் சஷ்டி எனத் தலைப்பு வைத்திருக்கலாம்.      அல்லது அதன் தமிழ் வடிவமாக சட்டி என்று. சட்டி என்பதை மண்சட்டி, கற்சட்டி, இரும்புச் சட்டி எனப் பொருள் கொள மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஸ,ஷ,ஜ,க்ஷ,ஹ, ஸ்ரீ என்று தமிழன் கண்டுபிடித்த … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஙப்போல் வளை ஞமலி போல் வாழேல்

 நாஞ்சில் நாடன்  ஆத்திச்சூடி எழுதும்போது ஒளவையாருக்கு ஒரு சிக்கல் வந்திருக்க வேண்டும்.                                ‘ங’ எனும் உயிர்மெய் எழுத்தைக் கொண்டு எங்ஙனம் வாக்கியம் அமைப்பது என.            மொழி இலக்கணப்படி ஙகரம் மொழி முதலில் வாராது. அதன் சொந்த மெய்யான ‘ங்’ எனும் எழுத்தைத் தொடர்ந்தே வரும். ஙகர மேயோவேனில் உயிரெழுத்துக்களையும் உயிர்மெய் எழுத்துக்களையும் தொடர்ந்துதான் வரும். … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஆயுத எழுத்தும் எழுத்தாயுதமும்

உயிரெழுத்துப் பன்னிரண்டு, மெய்யெழுத்துப் பதினெட்டு, இரண்டும் புணர்ந்த உயிர்மெய் எழுத்தென்ப இருநூற்றுப் பதினாறு. ஆகத் தமிழ் எழுத்துக்கள் இருநூற்று நாற்பத்தாறு. ஆயுத எழுத்தும் சேர்த்து இருநூற்று நாற்பத்தேழு. இன்று வழக்கொழிந்து  வருகிற ஆயுத எழுத்து ஒரு அத்துமீறலா? அது குறிலா, நெடிலா, ஒற்றா, உயிரா, உயிர்மெய்யா என்பதில் எனக்கின்று தெளிவில்லை. ‘ங’ ப்போல் வளைக்க ஆயுத … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், எண்ணும் எழுத்தும், நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக