Category Archives: நாஞ்சில்நாடனின் கதைகள்

படையும் பாடையும்

This gallery contains 2 photos.

தமிழாசிரியர் என்றாலே பலருக்கும் இளக்காரம் என்று மனக்குறுகலுடன் நடந்தார். எல்லோருமா சீட்டுக் கம்பனி நடத்துகிறார்கள், பால் வியாபாரம் செய்கிறார்கள், வட்டிக்கு விடுகிறார்கள், புடவை வணிகம் செய்கிறார்கள், அரசியல்காரர்களுக்கு எடுபிடி வேலை செய்கிறார்கள்? நவீன இலக்கியம் வாசிக்கிற, பயணம் போகிற, மாணவர் நலனில் அக்கறை செலுத்துகிற நல்லாசிரியர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? விருது கிடைத்தால்தான் நல்லாசிரியரா?………(நாஞ்சில்நாடன்) கற்றாரே காமுறுவர்’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஈயார் தேட்டை

This gallery contains 8 photos.

’’நம்ம நாஞ்சிநாடன் பெய வீட்டுக்கு  எதுத்த வீடுதானே பப்படக்காரி பாக்கியத்துக்க வீடு… பத்து பப்படம் வாங்கி குடுத்து விடுண்ணா செய்வான் கேட்டேரா? “ என்றார் கும்பமுனி. ”நீரு சொன்னா செய்ய மாட்டாளா பின்னே? என்ன ஒரு எளவுண்ணா ஒடனே பப்படம் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், நாலடியார், காப்பியங்கள், பன்னிரு திருமுறைகள், திவ்யப்பிரபந்தம், கம்பராமாயாணம் இங்கெல்லாம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நன்றே செய்வாய், பிழை செய்வாய்!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் ஆன்லைனில் கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்தார் கும்பமுனி. ஆதித்திய கரிகாலனைக் கொன்றவரார், கொலையேதானா, தற்கொலையா, விபத்தா, அயல் கண்டத்துச் சதியா, ஹாராக்கிரியா என்ற பிரச்னை ஆழிப் பேரலையாய் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருப்பது. ‘சோத்துக் கவலை இல்லாட்டா சூத்துக் கவலை’ என்பது சொலவம். எத்தனை முண்டிதமோ, மண்சோறோ, குறியறுத்துக் குலதெய்வத்தின் தலைமீது சொரிதலோ! நாடே தீப்பற்றி எரியும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாடகம்

திருவிழாக்காலங்களில் அல்லது கோயில்கொடை நிகழும் பொழுது இன்றைக்கும் நாடகம் என்னும் கலைநிகழ்வு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. நாடகம் என்னும் கலைநிகழ்வு இன்றைக்குப் பலருக்கு பெருவிருப்பை தராவிட்டாலும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே விழாக்களில் இருந்து வருகிறது. நாடகத்தில் இடம்பெறும் குறைபாடுகளை அங்கதத்திற்கு உட்படுத்தி வாசகரை வாசிப்பின்மீது விருப்பு கொள்ளும் வகையில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் ‘நாடகம்’ … Continue reading

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதை “சாப்பிள்ளை”

நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது. நாஞ்சில் நாடனின் “எட்டுத்திக்கும் … Continue reading

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

சாப்பிள்ளை

This gallery contains 4 photos.

நாஞ்சில் நாடன்

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடனின் சிறுகதை உலகம்

புதியமாதவி 1972 நவம்பர் மாதம் நாஞ்சில் மண்ணிலிருந்து எங்கள் மும்பை மண்ணுக்கு வருகிறான் ஓர் இளைஞன். மும்பைக்கு தினம் தினம் கையில் மஞ்சள் பையோடும் கண்களில் கனவுகளோடும் தாதரில் வந்திறங்கிய இளைஞர்களில் ஒருவனாகவே அவனையும் எங்கள் மும்பை அணைத்துக் கொள்கிறது.  1972 முதல் 1989 ஆகஸ்டு வரை தன் பணியின் நிமித்தம் மும்பையில் வாழ்ந்த அந்த … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

நகக்குறி,பற்குறி, மயிர்க்குறி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் நேராக வாசற்படி ஏறி, படிப்புரை கடந்து, திண்ணை உள் நுழைந்தவன் சுற்று முற்றும் பார்த்தான். மங்களா, அரங்கு, சாய்ப்பு, பத்தயப்புரை, அடுக்களை, புழக்கடை எனக் கண்களை ஓட்டிக் காதுகளையும் தீட்டினான். ஆள் அனக்கம் இருக்கிறதா என ஆராய்ந்தான். திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சுபகிருது வருடப் பஞ்சாங்கத்தில் மார்கழி மாதத்தைப் புரட்டிக் கொண்டிருந்தார் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

கோமரம்

This gallery contains 1 photo.

கோமரம் நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாடனின் “அன்றும் கொல்லாது- நின்றும் கொல்லாது” ஒலிக்கதை

ரம்யா வாசுதேவன்

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி

This gallery contains 1 photo.

சுனில் கிருஷ்ணன்  நாஞ்சில் நாடனின் நாவல்களை முன்வைத்து 1, நாஞ்சில் நாடன் 150 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சொல்லாய்வுகள் சார்ந்து தொடர்ந்து முக்கியமான பல கட்டுரைகளை அண்மைய ஆண்டுகளில் எழுதி வருகிறார். தோராயமாக நாநூறு கட்டுரைகளுக்கு மேல் இருக்கலாம் என உரையாடலின்போது கூறினார். முறையே ‘கறங்கு’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV

 

Posted in அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தற்குத்தறம்

This gallery contains 1 photo.

பேசும் புதியசக்தி தீபாவளி மலர் நாஞ்சில் நாடன் காலையில் வெந்தயக் கொழுக்கட்டை அவித்திருந்தார் தவசிப்பிள்ளை கண்ணுபிள்ளை. மாவரைத்துப் பிடித்துக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேகவைத்து எடுப்பதல்ல வெந்தயக் கொழுக்கட்டை. இட்டிலிச் சட்டுவத்தில் வைத்து அவித்து எடுப்பது, சுடச்சுட, நல்லெண்ணெய் விட்டுப் புரட்டிய தோசை மிளகாய்ப்பொடி தொட்டுக் கொண்டு ஆர்வமாக ஏழெட்டுத் தின்ற பிறகும் எழுந்து கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி

This gallery contains 1 photo.

கைவிடப்பட்டவரின் பிரதிநிதி காளிப்ரஸாத்  சற்றே கசப்பு நிறைந்த எழுத்து தன்னுடையது என்றே நாஞ்சில் நாடன் அவர்கள் சுயமதிப்பீடு செய்கிறார். (சூடிய பூ சூடற்க – முன்னுரை). ஒரு வாசகனாக அதைக் கசப்பு என்று என்னால் சொல்ல இயலாது. சீற்றம் என்று சொல்லலாம். அவரது சிறுகதை தொகுப்புகளில் படிப்படியாக அந்த சீற்றம் வளர்ந்து கொண்டே போவதைக் காணலாம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தாலிச் சரண் மறுவாசிப்பு

This gallery contains 1 photo.

தாலிச்சரண்  

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அம்மை பார்த்திருந்தாள் (சிறுகதை)

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இருந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நாடகம்- சிறுகதை- ஒலிக்கதை

கதை சொல்லி: மாலதி சிவா அந்தப் பக்கம் நாடக சீசன். வருக்கை சக்கைப் பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், செங்கை வருக்கை மாம்பழத்துக்கு ஒரு சீசன் இருப்பது போல், வெள்ளரிக்காய்க்கு ஒரு சீசன் இருப்பது போல், நாடகங்களுக் கான சீசன் அது. எல்லா ஊர்களிலும் சரித்திர சமூக நாடகங்கள் கொடி கட்டிப் பறந்தன. யார் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை

கதை சொல்வது: மாலதி சிவராமகிருஷ்ணன்

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஓடும் செம்பொன்னும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, ஊதியூதி, நான்கு அகப்பை அதிகமாகவே குடித்த களைப்பில் இருந்தார். தோய்ந்த கலவி முடிந்த களிப்பும் சோர்வும் தெரிந்தது முகத்தில். ‘கலவியாம், முயக்கமாம், புணர்ச்சியாம், உவப்பாம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உண்டால் அம்ம!

This gallery contains 10 photos.

உண்டால் அம்ம! நாஞ்சில் நாடன் வெறுங்காலுடன் நடப்பது கூசியது. வாழ்க்கையில் முதல் முறை செருப்புப் போட்டதே கல்லூரிக்குப் புறப்பட்ட முதல் நாளில்தான். புதுச்செருப்பு கடிக்கவும் செய்தது. அதுவரை செருப்பு இல்லாமலேதான் ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை வாசித்தது. ஆற்றங்கரை,  குளத்தங்கரை,  வயல் வரப்புகள்,  திரடுகள்,  பொத்தைகள்,  குன்றுகள் என அலைந்தது. நான்காண்டுகள் பம்பாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை

This gallery contains 1 photo.

தெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப்பாட்டா.கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர், அவர் பெயரைத் தென்கிரி முத்து எனத் திருத்துவார்.கிரி எனில் மலை என உரையும் எழுதுவார். எடுத்துக்காட்டாகக் கைலயங்கிரி, சிவகிரி, என்று மேற்கோள் காட்டுவார். தென்கிரி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு

This gallery contains 3 photos.

Sivanantham Neelakandan (நூலறிமுகம், இலக்கிய விமர்சனம், கட்டுரைகள், வரலாற்றாய்வு, மொழியாக்கம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள வாசகர். கரையும் தார்மீக எல்லைகள், சிங்கைத் தமிழ்ச் சமூகம் – வரலாறும் புனைவும் ஆகிய நூல்களின் ஆசிரியர்.) ‘பதாகை’ மின்னிதழ் 2015ஆம் ஆண்டு நாஞ்சில் நாடன் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டது. அப்போது நாஞ்சில் எழுத்துகளில் மிகவும் பைத்தியமாக இருந்த காலம் என்பதால் இதழாசிரியர் என்னிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்