Monthly Archives: மே 2017

வாசிப்பு

வாசிப்பு வாழ்நாள் எழுத்து! பத்து தொகை நூல் வெளியீட்டரங்கம் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் புரட்சி, இமையம், சிகரம் மேடையில் வலிய தொழிலதிபர் முதற்படி பெற்றார் எத்தனைக் கோடி செலுத்தாக் கடனோ! இரண்டாம் மூன்றாம் நான்காம் படிகள் சிறுகடன் பெற்ற சிறு தொழிலதிபர் அரும் பிறப்பெடுத்த ஆறுபேருக்கு அன்பளிப்புப் படிகள் வாசிக்க வேண்டும் அதற்க்கு வாங்கவும் வேண்டும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு வரி… ஒரு நெறி! ‘சிவன் சொத்து குல நாசம்!’

நாஞ்சில் நாடன் http://www.vikatan.com/juniorvikatan/2017-may-10/serial/130995-one-line-one-principle-nanjil-nadan.html சிவன் கோயிலில் தொழுது வலம் வருவோர், சற்று நேரம் கோயில் பிராகாரத்தில் அமர்ந்து எழுந்து செல்வார்கள். எழும்போது, உட்கார்ந்த உடைப் பிரதேசத்தை சற்றுத் தட்டிவிட்டுப் போவார்கள். ‘தூசு தட்டுகிறார்கள்’ என்றுதான் நினைப்போம். ஆனால், சிவன் கோயிலின் சிறு மண்கூட உடலோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடக் கூடாதாம். ஏனெனில், ‘சிவன் சொத்து குல … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஏவல்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் http://www.vikatan.com/anandavikatan/2017-may-03/stories/130735-nanjil-nadan-short-story.html ‘எட்டு, பத்து மாசமாச்சு… இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அடுமனை

This gallery contains 4 photos.

ஏதோ அரசியல் நாகரீகம் தமிழ்நாட்டில் சமீப காலமாகத்தான் கெட்டுப் போயிற்று என்றும், பண்டு புனிதமாகவே இருந்தது என்றும் இறும்பூது எய்துகிறார்கள். அதுபோல் ஏராளம் கேட்டிருக்கிறேன் புழுத்த மேடைப்பேச்சுக்கள். வளர்த்த நன்றியோ என்னவோ, காமராஜரைப் பச்சைத் தமிழன் என்று கொண்டாடியவரின் தாடியைச் செதுக்கினால் இரண்டு திருப்பன் செய்யலாம் என்று பேசவில்லை. அன்று ஊரில் வழங்கிய பழமொழியைப் புதுக்கிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஒருமை

This gallery contains 1 photo.

http://solvanam.com/?p=47391 ஒருமைப்பாடு என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். சொல் ஒருமைப்பாடாகவும், செயல் தனிமைப்பாடாகவும் இருக்கிறது. ஒருமை என்றாலே போதும். union, unity எனும் பொருள் வந்துவிடும். வார்த்தைதான் வார்த்தைப் பாடு. கடமைதான் கடப்பாடு, பண்புதான் பண்பாடு, மேன்மைதான் மேம்மாடு. ஒருமைதான் ஒருமைப்பாடு. தேசீய ஒருமைப்பாட்டைக் கட்டிச் செறிவாக்க என்றே, நடுவண் அரசு சில நவீன கல்விக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சொல்லாழி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் http://solvanam.com/?p=47917 வில்லாளிக்கு அம்பு எத்தன்மைத்ததோ, அத்தன்மைத்தது புலவனுக்கு, எழுத்தாளனுக்கு சொல். சேமிப்பில் சொற்பண்டாரம் இன்றி எழுதப் புகுபவன், கையில் கருவிகளற்றுத் தொழிலுக்குப் போகிறவன். தச்சனோ, கொல்லனோ, குயவனோ, நாவிதனோ, உழவனோ எவராயினும் அது பொருந்தும். அரைகுறையாகக் கருவிகளைச் சுமந்து செல்கிறவன், துல்லியமற்ற, பொருத்தமற்ற கருவிகளைச் சுமந்து செல்கிறவன், திறம்படத் தொழில் செய்ய ஏலாது. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக