This gallery contains 9 photos.
கோடை காலங்களில் எமக்கு இன்று மதிய உணவாகக் கூழுக்குச் சிறப்பிடம். வறுத்த மோர் மிளகாய், சீனி அவரைக்காய் வத்தல், சுண்டை வத்தல், மிதக்க வத்தல், ஆகா!…..“இந்திரர் அமிழ்தம் இவைவதெனினும்” வேண்டேன். எங்கள் வீட்டில் எல்லோருக்கும் கூழ் பிடிக்கும். சின்னவெங்காயம் என்று அறியப்படுகிற, அமெரிக்கர்கள் பேரல் ஆனியன் என்கிற ஈருள்ளி தோலுரித்து அரிந்து கொடுப்பது என் கைங்கார்யம்.