Tag Archives: அந்திமழை

படையும் பாடையும்

This gallery contains 2 photos.

தமிழாசிரியர் என்றாலே பலருக்கும் இளக்காரம் என்று மனக்குறுகலுடன் நடந்தார். எல்லோருமா சீட்டுக் கம்பனி நடத்துகிறார்கள், பால் வியாபாரம் செய்கிறார்கள், வட்டிக்கு விடுகிறார்கள், புடவை வணிகம் செய்கிறார்கள், அரசியல்காரர்களுக்கு எடுபிடி வேலை செய்கிறார்கள்? நவீன இலக்கியம் வாசிக்கிற, பயணம் போகிற, மாணவர் நலனில் அக்கறை செலுத்துகிற நல்லாசிரியர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? விருது கிடைத்தால்தான் நல்லாசிரியரா?………(நாஞ்சில்நாடன்) கற்றாரே காமுறுவர்’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தேவர் அனையர் கயவர்

This gallery contains 6 photos.

என்றாலும் பொறுக்கி என்று அறியப்படுகிற சிலரை சமூகம் கடவுள் என்றும் கொண்டாடுகிறது! கும்பிட்ட கோயில் தலைமேல் இடிந்து விழுந்ததுபோல் இருக்கிறது நமக்கு!……நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

தலைகீழ் விகிதங்கள்: குயிலும் காகமும் புள்ளினமே!

நாஞ்சில் நாடன் நான் பட்டப் படிப்பின் இறுதியாண்டில் இருந்தபோது, நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. திடீரென ஒரு நாள் மாலை, எந்த முன்னறிவிப்பும் இன்றி, என்னை மாப்பிள்ளை பார்க்க வந்தனர் ஐந்து மூத்த ஆண்கள். எனக்கப் போது இருபத்தோரு வயது. இன்னும் படிப்பு முடித்திருக்கவில்லை . வேலை கிடைத்திருக்கவில்லை. அஃதென்றும் பிரச்னை இல்லை என்றும், வேலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கட்டுப்பாடுகளுக்கு இணங்கி கிரா எழுதமாட்டார்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் ……

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தத்து

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் முத்து, வித்து, சொத்து, சத்து, பித்து, மத்து என்பல போல் ஒலிக்கும் இன்னொரு சொல் தத்து. திசைச் சொல்லோ, திரி சொல்லோ, வட சொல்லோ அல்ல. இயற்சொல்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடன் வாழும் செந்தமிழ்ச்சொல். என்றாலும் தமிழ் கற்ற கர்வத்துடன் வினவுகிறேன் ஐயா! தத்து என்றால் என்ன பொருள்? இந்த இடத்தில் கட்டுரை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’

This gallery contains 1 photo.

“வட்டார வழக்கு என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியது  யாரென தேடிக்கொண்டிருக்கிறேன். வட்டார வழக்கு என்ற சொல்லை கெட்டவார்த்தைத் தனமான பிரயோகமென நினைக்கிறேன்” என்று கி.ரா விருது வழங்கும் நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் கூறினார். விஜயா வாசகர் வட்டம் முன்னெடுப்பில் கி.ரா விருது- 2020 நிகழ்ச்சி எழுத்தாளர் கி.ரா.வின் 98-வது பிறந்தநாளான நேற்று (16.09.2020) நடைபெற்றது. இதில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் சிறு பிராயத்தில் ஊரில் பலரையும் தாத்தா, போத்தி, பாட்டா என விளித்திருக்கிறேன். ‘கானாங் கோழிக்குக் கழுத்திலே வெள்ளை, கடுக்கரைப் போத்திக்குப் புடுக்கிலே வெள்ளை’ என்று பாடியும் நடந்திருக்கிறோம். கறுத்த போத்தி, சோளாங்காடிப் பாட்டா, பழவூர்த் தாத்தா என்று, அவர்களின் பிதுரார்ஜிதப் பெயரறியாமல் சுய ஆர்ஜிதப் பெயராலேயே விளித்திருக்கிறோம். ஆனால் சொந்தமாகத் தாத்தா என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தன்னை அறியாமல் தானே கெடுகிறார்

This gallery contains 7 photos.

பேரூந்தில் ஏறி வீடு திரும்பும் வழியில் ஒரே பிரதோஷ சிந்தனை. எந்த சமரசமும் இன்றித் தமிழன் எல்லா வேலைகளையும் எப்படி எந்த மனச் சங்கடமும் இன்றிச் செய்கிறான்? அட்சய திரிதியைக்கு நகைக்கடை வாசலில் வரிசையில் நிற்கிறான். பிரதோஷத்துக்கு  சிவன்கோவில் பிரகாரத்தில் பழி கிடக்கிறான். எத்தனை மெகாத்தொடர் நாடகங்கள் ஆனாலும் தொலைக்காட்சி பெட்டி முன் சலிப்பின்றி அமர்ந்திருக்கிறான். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

மண்டியிட்டு வாழ்வாரே வாழ்வார்

This gallery contains 6 photos.

பேரகராதி குறிக்கிறது, மண்டி என்றால் கால் மடக்கி முழந்தாளில் நிற்பது என. அதைத்தான் மண்டியிடுதல், மண்டி போடுதல் என்கிறோம். நாம் எவரிடமும் மண்டியிட மாட்டோம் என்று வீர வசனம் பேசி , சில நூறு கோடிக்கும் கையளவு  சீட்டுக்கும் மண்டியிடுபவரை நாம் அறிவோம். தமிழ் அரசியல் பண்பாடு பாதாளம் ஏழினும் கீழாய் பாய்ந்து கொண்டிருக்கிறது. மண்டியிட்டால் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

தேடிச் சோறு நிதம் தின்று

This gallery contains 7 photos.

யாவர்க்கும் தெரிந்த பழமொழிதான். “ஆத்துக்குள்ளே நிண்ணு அரகரா என்றாலும், சோத்துக்குள்ளே இருப்பான் சொக்கலிங்கம்,”என்பது அதிகாலை ஆற்றுக்குச் சென்று நீராடி, நெற்றியில் நீறணிந்து, கிழக்கு திக்கும் கதிரவனைப் பார்த்து, கை கூப்பித் தொழுது நின்றாலும் சொக்கலிங்கம் சோற்றுக்குள்ளே தான்  இருப்பான் என்று பொருள்.

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

யாறு நீர் கழிந்தன்ன இளமை!

This gallery contains 7 photos.

என் அம்மை நெடுமங்காட்டுகாரி, என் மனைவி திருவனந்தபுரத்துக்காரி, என் மருமகள் ஸ்ரீகாகுளம், எனக்கு பலமுறை தோன்றுவதுண்டு, என் மகன் என்ன ஜாதி, அவன் முனைஞ்சிப்பட்டியா, வீரநாராயணமங்கலமா, பறக்கையா, நெடுமங்காடா, திருவனந்தபுரமா என்று, எனக்கு நல்ல போத்தியம் உண்டு. எழுத்தாளன் திமிர், உண்மைத்திமிர், நேர்மைத்திமிர் அன்றி, சாதித்திமிர் அல்ல.

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கருப்பட்டியின் கதை

This gallery contains 4 photos.

யானையை அடக்கினேன், புலியைத் துரத்தினேன் என வெற்றுச் சவடால் புள்ளிகள் எங்கும் இருப்பார்கள். அவர்களைப் பற்றிய பேச்சு வந்தால் மக்கள் குறிப்பிடுவது, ‘அவனா? எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கிடுவானே!’ என்று. அவரைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக நமது இனத்தலைவர், மொழித்தலைவர், பண்பாட்டுக் காவலர், நாட்டுத் தலைவர் என்போர் எட்டாயிரம் தங்கக் கருப்பட்டிகளை ஒன்றாக விழுங்க வல்லவர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

இரந்து கோட் தக்க துடைத்து

This gallery contains 3 photos.

பிரபலங்களுக்கு பத்ம விருதுகள் அனைத்தும் வாங்கக் கிடைக்கும். பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு முது முனைவர் பட்டம் வழங்கி இறும்பூது எய்தி உவக்கும். குடியரசு தலைவர், முதன்மை அமைச்சர், முதலமைச்சர் என அமர்ந்து அவர்கள் இரவு உணவு அருந்துவார்கள். பிறந்த நாளுக்கு முன்னணி அரசியல் கொள்ளையர் வாழ்த்துவர்.  இறந்தால் வரிசையில் நின்று மலர் வளையம் வைப்பர். வாரிசுகளின் சிரசில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

சிறுகோட்டுப் பெரும்பழம்

This gallery contains 5 photos.

கேரளம் பெருமிதத்துடன் பலாப்பழத்தை தனது அதிகாரப்பூர்வமான பழம் என்கிறது. நாமும் சொல்லலாம் வாழையை. ஆனால் அத்தகு யோசனைகள் தோன்ற நமக்கெல்லாம் நேரம் எங்கே? வேண்டுமானால் பெரும்பாலும் பிரதான கட்சித் தலைவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்தின் பல்வகை மதுபானங்களை டாஸ்மாக் மூலம் விநியோகிக்கப்படுவதை நமது அதிகாரப்பூர்வமான பானம் என்பார்கள். மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் நமது அதிகாரப்பூர்வமான உணவு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

அடுமனை

This gallery contains 4 photos.

ஏதோ அரசியல் நாகரீகம் தமிழ்நாட்டில் சமீப காலமாகத்தான் கெட்டுப் போயிற்று என்றும், பண்டு புனிதமாகவே இருந்தது என்றும் இறும்பூது எய்துகிறார்கள். அதுபோல் ஏராளம் கேட்டிருக்கிறேன் புழுத்த மேடைப்பேச்சுக்கள். வளர்த்த நன்றியோ என்னவோ, காமராஜரைப் பச்சைத் தமிழன் என்று கொண்டாடியவரின் தாடியைச் செதுக்கினால் இரண்டு திருப்பன் செய்யலாம் என்று பேசவில்லை. அன்று ஊரில் வழங்கிய பழமொழியைப் புதுக்கிச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எழுத்திலிருந்து ஞானத்துக்கு

This gallery contains 3 photos.

இத்தனைக்கும் மேலாக ஒரு எழுத்தாளனாக அவர் இப்போது செய்துகொண்டிருக்கும் காரியமே தமிழுக்கு அவருடைய முக்கியமான பங்களிப்பாக, அவரது வாழ்நாள் பங்களிப்பாகவும் இருக்கும். இன்றைய நம் தலைமுறை தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழின் மரபிலக்கியங்களை புத்துயிர்த்துத் தருகிற மகத்தான பணியினை அவர் செய்துகொண்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களும், தமிழ் பேராசிரியர்களும் செய்யவேண்டிய சாதனைப் பணியினை அவர் மேற்கொண்டிருக்கிறார். …(எம். கோபாலகிருஷ்ணன்)

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

நச்சைத் தின்றால் பித்தம் பெருகும்!

This gallery contains 7 photos.

இந்தியனின் பயன்பாட்டுச் சாதனங்களுக்கான சந்தை என்பது சாமானிய காரியம் அல்ல.  அவர்கள் மனிதர்களா, மந்தைகளா, பன்றிக் கூட்டங்களா என்பதில் அல்ல அவர்களது அக்கறை.  நாம் சுத்தமான பாரதம் என்று கோஷம் போடுவோம். முதலாளிகளின் கணக்கு எத்தனை கோடி மில்லியன், டிரில்லியன் என்பது! அந்த நிறுவனங்களுக்கு ஒரு இந்தியர் தலைவர் என்றால் நம் தோள்கள் விம்மி பூரித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

தாழ்ந்தே பறக்கும் தரித்திரக் கொடி

This gallery contains 6 photos.

அறம், அறச்சீற்றம் என்ற சொற்கள் நீர்த்து, குலைத்து,சவுக்களித்துப் போய்விட்டன சமகாலச் சூழலில்.  அறம், நீதி, ஒழுக்கம் என்று குன்றேறி நின்று கூவுகிற பலர் எழுதும் தலையங்கங்களை வாசித்தால், நாம் கண்ணாடியை மாற்றிப் போட்டிருக்கிறோமோ என்று தோன்றும். “தன் படை வெட்டிச் சாதல்” என்பது எனதோர் கட்டுரைத் தலைப்பு. இங்கு பகைவர் செய்யும் கேடுகளை விட மக்களின் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

வல்வரவு

This gallery contains 1 photo.

‘செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை.’ திருவள்ளுவர் பேசும் குறளின் கூற்றை தலைவியோ தோழியோ மொழிவதை- எம் மொழியில் சொல்வதானால்: ‘வே! நீரு பிரிஞ்சு போகாம இங்கிணயே கெடப்பேருண்ணு உண்டுமானா அதை எனக்கு இப்ப சொல்லும். ஆனா, பிரிஞ்சுபோயி சட்டுண்ணு வந்திருவேன் சொல்லப்பட்ட காரியம் இருக்குல்லா, அதை நீரு வருவேர்ய் வருவேருண்ணு எவளும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்