Monthly Archives: ஜூன் 2020

பூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்

This gallery contains 1 photo.

தான் வாழ தனது நியாங்களுடன் -இரா.சிவசித்து எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பற்றிய நினைவு எனக்கு வரும் போதெல்லாம் அவருடைய “கதை எழுதுவதன் கதை” என்ற சிறுகதையில் வரும் நாஞ்சிலின் பிரத்யோகமான பாத்திரப்படைப்பான கும்பமுனிப் பாட்டாவின் வசனம் ஒன்று நினைவில் வந்தகலும். மூலத் தொந்தரவை பொறுத்துக் கொண்டு தனக்கு வந்த கடிதமொன்றைப் பிரிப்பார் பாட்டா. தீபாவளி மலருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்

This gallery contains 2 photos.

மலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல் சங்க இலக்கியங்கள் எனச் சான்றோர் தனித்து அறிவிக்கும் 41 நூல்களில் பாட்டும் தொகையும் எனப்படும் பத்துப்பாட்டு எட்டுத் தொகையான பதினெட்டு நூல்கள் தொல் தமிழ் வாழ்க்கையின்            சத்தும் சாரமுமானவை. அவற்றின் ஊடாக H. G. Wellsன்Time Machine இல் பயணப் பட்டு தமிழ்த் தொல்மரபின் சாட்சிங்களைக் கண்டடைவது போன்றதொரு அனுபவம், … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

This gallery contains 1 photo.

Kmkarthi Kn‎வாசிப்பை நேசிப்போம் #Reading_Marathon_2020_75 ID #RM091 Book no:- 40/75 நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் தொகுப்பு:- ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ் சொல்லுவதற்கும், படிப்பதற்கும், எழுதுவதற்கும் எத்தனை எளிதான சொல்லாக இருக்கிறது இந்த சிறுகதை எனும் சொல். ஆனால் செயலில் இவைகள் கண்ணிவெடியைப் போன்றவை. அவைகளைத் தீண்டாத வரையிலும் அவைகள் வெடிப்பதேயில்லை. அதிலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிறன் பொருளைத் தன் பொருள் போல

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மாவட்ட மைய நூலகத்தின் தலைமாட்டில் புதியதாகப் பொருத்தப்பட்டிருந்த மின்னணுக் கடிகாரம் தன்பாட்டுக்கு இராப் பகலாக, நாள், கிழமை, நேரம், காற்றின் பதம், அந்நேரத்து வெப்பம் எல்லாம் காண்பித்துக் கொண்டிருந்தது. நேரம் சரியாகப் பிற்பகல் 14-30 என்றும் சூடு 42°c என்றும். ஒரு வேளை மராத்திய மாநிலத்தின் இரண்டாம் தலைநகரான நாக்பூரின் வெயிலைக் காட்டுகிறதோ … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது

This gallery contains 1 photo.

எதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது’ என்பது மிக நூதனமானதோர் புத்தகத் தலைப்பு. எனது கட்டுரை நூல் ஒன்றுக்கு இதுபோன்றதோர் தலைப்பு வைக்க காமுற்றிருப்பேன். இனிமேல் அது கூறியது கூறல் என்று நன்னூலாசிரியர் குறிக்கும் குற்றங்களில் ஒன்றாகிவிடும். பத்தி எழுதுவது என்பது கட்டுரையைக்காட்டிலும் சுதந்திரமான இலக்கிய வடிவம். 2008-2009 காலகட்டத்தில் ‘வார்த்தை ‘ இதழில் வ. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கிருஷ்ணப் பருந்து

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் ஆ. மாதவனின் சிறுகதைகளில் எனக்கு ஈடுபாடு உண்டு. தமிழ்ச் சிறுகதையாசிரியர்கள் என்று யார் பட்டியல் போட்டாலும் அதில் அவர் பெயர் இருக்கும். வைப்பு முறை அவரவர் மனோலயங்களைப் பொறுத்து இருக்கும். இப்போது நினைத்துப் பார்க்கையில், ‘எட்டாவது நாள்’, ‘காளை’, ‘நாயனம்’, ‘புறா முட்டை’, கோமதி’ என்று நாலைந்து கதைகள் நெஞ்சில் நெருடுகின்றன. (தமிழ்ச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தினமணியும் நானும்!

This gallery contains 1 photo.

தினமணி எனும் சொல்லுக்கு முன்னால் நான் எனும் சொல் பொருட்டே இல்லை. அந்தச் சொல்லுக்கே சூரியன் என்று பொருள். அதாவது Sun, ஞாயிறு, பருதி, பகலவன், கதிரவன், அருணன், வெய்யோன், பகலோன் எனப் பல. தமிழ் இலக்கியங்கள் பலவும் சூரியனைக் குறிக்கத் தினமணி எனும் சொல்லை ஆண்டுள்ளன. எனவே தினமணி நாளிதழுக்குத் தினமணி எனப் பெயர் … Continue reading

More Galleries | Tagged , , , , | 5 பின்னூட்டங்கள்

அம்மனும் சித்தரும் அருகிருக்க…

This gallery contains 1 photo.

அம்மனும் சித்தரும் அருகிருக்க… நன்றி: jeyamohan.in  ஒர் ஆசிரியர் தன் கதைமாந்தரில் ஒருவராக ஆவது என்பது அடிக்கடி நிகழ்வது. அல்லது புனைவில் தான் உருவாக்கிக் கொண்ட கதைமாந்தனாக  ஆசிரியன் தானே படிப்படியாக மாறிவிடுவது. இன்னொன்று உண்டு தன்னை பலவாறாக உடைத்து புனைவில் தூவிவிடுவது. சுந்தர ராமசாமி பாலுவாக ஆனது முதல்வகை. பஷீர் தன் நாயகனாக தானே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக