Monthly Archives: ஒக்ரோபர் 2015

விருது – கைம்மண் அளவு 36

This gallery contains 13 photos.

நாஞ்சில் நாடன் Award எனும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக ‘விருது’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறோம். இந்தச் சொல்லுக்கு பட்டம், கொடி, வெற்றிச் சின்னம் எனப் பேரகராதி பொருள்கள் தருகின்றது. ‘வெற்றி’ எனும் பொருளில் விருது எனும் சொல்லைக் கம்பன் ஆள்கிறான். கம்ப ராமாயணத்தில் 7வது படலமான தாடகை வதைப் படலத்தின் பாடல் ஒன்று, … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

இருக்கட்டுமா? கொடுக்கட்டுமா? – சாகித்திய அகாதெமி விருது

எந்த தரப்பாக இருந்தாலும் படைப்பாளிகள் படுகொலையை நான் கண்டிக்கிறேன். அதற்காக எனக்கு அளிக்கப்பட்ட விருதை நான் ஏன் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என் எழுத்துக்காக, 40 வருடங்கள் உழைப்புக்காக, கொடுக்கப்பட்ட ஒரு நியாயமான அங்கீகாரத்தை நான் ஏன் திரும்பக் கொடுக்கவேண்டும்? ……. நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

வெள்ளித் தாம்பளம் சொன்ன கதை

This gallery contains 13 photos.

”ஒமக்குத் தெரியாதா? மலையாளத்திலே வைக்கம் முகம்மது பஷீர்னு ஒரு பேரு கேட்ட எழுத்தாளர், பேப்பூர் சுல்தான்னு பட்டபேரு… ஒரு பேட்டியிலே சொல்லீருக்காரு, வாசல்ல கிடந்த நாயைக் காணிச்சு –இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கியிருக்குண்ணு” “நீரு அப்பம் பீக்குண்டி சுல்த்தானாக்கும்?” தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

மது – கைம்மண் அளவு 35

This gallery contains 6 photos.

நாஞ்சில் நாடன் எனக்கு வாசகர் என்று எவரும் இல்லை. எல்லோரும் நண்பர்களே! இத்தொடரை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களில் பலர் கேட்டுவிட்டனர், ‘மதுவிலக்கு பற்றி வாய் திறக்க மாட்டீர்களா’ என! ஒருவேளை நாம் வாய் திறந்தால் மது மணம் வீசக்கூடும். சிலர் அதை மது நாற்றம் எனலாம். எமக்கதில் மறுப்பு இல்லை. நாற்றம் என்றாலும் தமிழில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

இரவல்- கைம்மண் அளவு 34

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு- ‘புத்தகத்தையும் மனைவியையும் இரவல் கொடுக்காதே’ என்று. போனால் திரும்பாது. புத்தகம் சரி, போனால் வராது. ஆனால் மனைவி எப்படி? அவள் எப்படி இரவல் போகக்கூடிய சாதனம் ஆவாள்? புத்தகம் தானாக கால் முளைத்து நடந்து போகாது; தானாக வரவும் செய்யாது. ஆனால் மனைவி என்பவள் அப்படியா? இரவல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

தரகு – கைம்மண் அளவு 33

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் பத்தாண்டுகளுக்கு முன்பு, கோயம்புத்தூர் ராம் நகர் பகுதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் தயாரித்து விற்பனை செய்யும் இயந்திரங்கள் வாங்க வரும் வாடிக்கையாளரைச் சில சமயம் மதிய உணவுக்கு அழைத்துப் போக நேரும். சிலர் சோறேதான் வேண்டும் என்பார்கள். சிலர் பியரே போதும் என்பார்கள். சிலர் அசைவம் இல்லாமல் உண்பதில்லை என்பார்கள். சிலருக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்