Monthly Archives: ஜூலை 2019

மதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள்

This gallery contains 1 photo.

“மதிப்பெண் மட்டுமே குறிக்கோள் என்ற கடிவாளத்தை தகர்க்கக் கூடியவை புத்தகங்கள். நல்ல குழந்தைகளை உருவாக்க நல்ல பெற்றோர்களை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்குப் புத்தகங்கள் வழிவகை செய்யும். புத்தகக் கண்காட்சிக்கு குழந்தைகளைக் கூட்டி வந்து திருக்குறளும் பாரதியார் கவிதைகளும் வாங்கித்தருவது மட்டும் அல்ல. நாஞ்சில் நாடன் பல்வகை நூல்களையும் அறிமுகம் செய்தல் இன்றியமையாதது. புதிய சொற்களை மக்களிடையே … Continue reading

More Galleries | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

‘வட திசை எல்லை இமயம் ஆக!’

This gallery contains 1 photo.

திருப்பெருந்துறையில் மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணத்தில் இரண்டாவது அடி, ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!’ என்று போற்றுகிறது. இமை தட்டுகிற, இமை கொட்டுகிற, இமை அடிக்கிற, இமைக்கிற நேரம். இமைப் பொழுதும் கூட, என் நெஞ்சத்தில் இருந்து நீங்காமல், நிரந்தரமாக உறைபவனின் திருவடிகள் போற்றி என்பது பொருள். இமைத்தல் என்றாலும் இமை கொட்டுதலே. … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்

நாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம இந்தியச் சூழலில், குறிப்பாகத் தமிழ்ச்சூழலில், நாட்டார் கலை வளர்ச்சி என்பது ஒருவகையில் மறைவாக இருந்த சாதிய மேட்டிமைகளை, பெருமிதங்களை பொதுவில் வெளிப்படுத்த வழிவகுத்தது என்னும் கருத்து குறித்த உங்கள் பார்வை என்ன? மாரி முருகன் மற்ற எக்காலத்தை விடவும் சாதியம் இன்று முனைப்பாக அல்லவா இருக்கிறது? இதற்கு அரசியல் தலைவர்களும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இல்லை, இல்லை, இல்லவே இல்லை!

This gallery contains 1 photo.

மது வேண்டி எவனிடமும் இரந்தேனில்லை எவள் நிதம்ப வாசனைக்கும் விரைந்தேனில்லை கூலிக்காய் எவரையும் நான் புகழ்ந்தேனில்லை சலுகைக்காய் குய்யமெதும் தாங்கவில்லை முன்னுரைக்கும் மதிப்புரைக்கும் அலைந்தேனில்லை தமிழ்த்துறையின் தாழ்வாரம் உருண்டேனில்லை பதிப்பாளர்முன் குனிந்து நின்றேனில்லை விருதுக்காய் பரிசுக்காய் நடந்தேனில்லை சுயசாதி இருக்கைக்காய் நச்சவில்லை சவத்துக்குத் தேசக்கொடி உவந்தேனில்லை எவர்காலும் நக்குவதெம் தமிழும் இல்லை .

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக