Category Archives: பாடுக பாட்டே

பாடுக பாட்டே முன்னுரை

This gallery contains 1 photo.

மெய் கூறுவேன்! இந்த நூலின் தலைப்பு ஒரு சங்க இலக்கியச் சொற்றொடர். குறிப்பாகச் சொல்லப் புகுந்தால், குறுந்தொகையில் ஒளவையாரின் பாடல் வரி. பண்டு நம்மிடம் கவிதை எனும் சொல் இல்லை . பாட்டு, பாடல் அல்லது செய்யுள். கம்பன் தான் ‘சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி’ என்றான். சங்க இலக்கியத்தின் ஆதி நூல்களைப் பாட்டும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பாடுக பாட்டே 10

This gallery contains 4 photos.

”யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என்றாரே கணியன் பூங்குன்றன் தனது 13 வரிப் பாடலில்! “நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ” என்றாரே சங்க கால ஒளவை. “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” என்றாரே, பொன்முடியார்! “உண்டால் அம்ம இவ்வுலகம்”என்றாரே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி! “பசிப்பிணி மருத்துவன்” என்றாரே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்!  “உற்றுழி உதவியும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே 9

This gallery contains 3 photos.

எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், 27 வெளிநாட்டு சொகுசுக் கார்கள் வைத்திருந்தாலும், எங்காவது ஒரு பயணத்தின்போது, டயர் பொத்துக்கொண்டால், எளிமையான ஒரு தொழிலாளியின் கடைமுன் காத்துக்கிடக்க வேண்டும். பங்ச்சர் ஒட்டுபவர் செய்யும் வேலையை, ஊரைச்சுருட்டிச் சேர்த்த, முதலில் வாங்கிய, பல கோடி பெறுமதி உடைய காரில் போகிறவன் செய்ய முடியுமா? பொன் சரிகைப் பட்டுடுத்தி, … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே 8

This gallery contains 6 photos.

1972-ல் பம்பாய்க்குப் போனேன் பிழைப்புத் தேடி. என் தனிமை, வாசிப்பை நோக்கித் தள்ளியது.  வாசிப்பு, பேசத் தூண்டியது. அந்தக் காலத்தில் குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜ., அ.ச.ஞா., பா.நமச்சிவாயம் தலைமைகளில் ஓர் அணியின் கடைசிப் பேச்சாளனாகப் பட்டிமண்டபம் பேசியிருக்கிறேன். நம்புவது நம்பாதது உங்கள் தேர்வு. பணம் ஈட்டும் நெடுஞ்சாலை துறந்து தரித்திரவாச முடுக்குகளைத் தேர்ந்தெடுத்தேன். எனினும் நிறைவு … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

பாடுக பாட்டே 6

This gallery contains 3 photos.

வீட்டை அடுத்திருக்கும் ஆற்றங்கரை அல்லது கடற்கரையில், மரத்தடி நிழலில் உட்கார்ந்திருக்கிறாள். சுற்றிலும் மணல்வெளி. கழக ஆட்சிகள் கால் பதியாத காலம், மணலும் நிறையவே இருந்தது. கண்ணை மூடிக் கொள்கிறாள். ஆள்காட்டி விரலால் மணலில் வட்டம் வரந்து பார்க்க முனைகிறாள். வட்டம் கூடினால் காதலனைக் கூடுவேன். வட்டம் கூடாவிட்டால், நானும் கூடுவதற்கு வாய்ப்பில்லை என்று தனக்குத் தானே … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே! 5

This gallery contains 4 photos.

”புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து”   தம்பி கவிஞர் மகுடேசுவரன் இதற்க்கு இப்படி உரை எழுதுகிறார்- “தனக்காக கண்ணீர் விடுமளவுக்கு ஒருவன் வீரமரணம் அடைந்தால், அந்த சாவு யாசித்தாவது பெற்றுக்கொள்ளக் கூடிய பெருமையுடையது”   நன்றாக நினைவில் கொள்ள வேண்டும், வள்ளுவர் போற்றும் சாவு, தனது தலைவன் அடித்துப் பதுக்கிய ஆயிரக்கணக்கான … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பாடுக பாட்டே (4)

This gallery contains 7 photos.

’ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும்’ கடல்போல் திரண்டுநின்று எலிப்பகை ஆரவாரம் செய்தாலும் என்ன நடந்துவிடும்? ஒரு நாகம் சீற்றத்துடன் எழுந்து நின்றால் போதாதா? இவை எல்லாம் நம் இலக்கியங்கள் பேசும் வீரத்தின் சில துளிகள்… இன்று தேய்ந்த வீரத்தின் கவடாக இதையே மாறுபடப் பொருள்கொள்ள வேண்டி இருக்கிறது. கோடிக்கணக்கான வாக்காள பெருமக்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

பாடுக பாட்டே (3)

This gallery contains 10 photos.

 ‘சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே, நில்லென்று கூறி, நிறுத்தி வழி போனாரே!’ என்கிறாள் ஒரு தலைவி. இன்று அந்த சிக்கல்கள் இல்லை. முகநூல் உண்டு, வாட்ஸ்- அப் உண்டு, இருபால் நண்பர்கள் இருக்கிறார்கள். தொலைக்காட்சி சேனல்கள் உண்டு, அவற்றில் இரவு 10 மணிக்குமேல் ‘ஒன்று போதும்; நின்று பேசும்’ என்று ஊக்க மாத்திரைகள் விற்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே (2)

This gallery contains 7 photos.

தமிழ் இலக்கியத்தில் காதலுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு. “தமிழ் இலக்கியத்தில் காதல்” எனும் பொருளில் இங்கு ஏகப்பட்ட இரண்டாம்தரப் புத்தகங்கள் உண்டு. அறிஞர் என்று அழைக்கப்படுபவர், பேராசிரியர் தவிர்த்துப் படைப்பிலக்கிய நாட்டம் உடைய எவரும் எழுதினால் சிறப்பாக இருக்கும். அந்த வேலைக்கு நான் விண்ணப்பிக்க மாட்டேன்…. (நாஞ்சில் நாடன்.) ’’பாடுக பாட்டே’’ தொடர்  கட்டுரைகளின் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்