Monthly Archives: ஜனவரி 2016

யானை பிழைத்த வேல்- ஆங்காரம் பற்றி நாஞ்சில் நாடன்

This gallery contains 1 photo.

ஏக்நாத் எனும் இளைய நண்பனை ஒரு கவிதைத் தொகுப்பு மூலம் அறிவேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த கவிதைகளுக்குப் பொழிப்புரை எழுதினாற்போன்ற சிறுகதைத் தொகுதி ஒன்றும் வாசித்தேன். மேலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘கெடை காடு’ என்ற அவர் நாவல், எம் புருவத்தை மேலேற்றியது. வாசிப்பு சுவாரசியத்துடனும் நாட்டு மருந்து மணத்துடனும், மக்கள் மொழியின் நுட்பங்களுடனும், … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சிநாடனின் நேர்காணல்கள்

This gallery contains 1 photo.

வாசகர்கள் நினைப்பதுபோல், அரசியல் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கு எழுத்தாளனுக்கு எந்தச் சுதந்திரமும் இல்லை. படைப்பாளி என்பவன் போராளியும் அல்ல. மன்னராட்சி, மொகலாயர் ஆட்சி, ஆங்கில ஆட்சி, இந்நாட்டு மன்னர்களின் மக்களாட்சி எதுவானாலும் கண்ணுக்குப் புலப்படாத அடக்குமுறைக்கு ஆட்பட்டே வாழ்கிறவன் படைப்பாளி… ஒரு எழுத்தாளன் எதிமறையான கருத்தைச் சொன்னால், அவன் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல்தான் இங்கே இருக்கிறது. … Continue reading

More Galleries | Tagged , , , | 1 பின்னூட்டம்

கொன்றால் பாவம், தின்றால் போகும்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் அவனவன் மண்ணில் விளைந்ததைத் தின்றான் மனிதன். அவனவன் காடுகளில் வேட்டையாடியதைத் தின்றான். பச்சை மாமிசம் தின்று, சுட்டுத் தின்று, இன்று தந்தூரி சிக்கனும், சிக்கன் மஞ்சூரியனும், கெண்டகி ஃப்ரைடு சிக்கனும் தின்னும் அளவுக்கு மாறி இருக்கிறான். அவனவன் மண்ணுக்குள்ளே மக்கி உரமாகியும் போனான். நாஞ்சில் நாட்டில் தென்னையும் நெல்லும் வாழையும் பயிர்கள். மானாவாரியாகப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக

This gallery contains 2 photos.

  நாஞ்சில் நாடன் சாப்பாட்டு ராமன்’ என்றும் ‘தின்னிப் பண்டாரம்’ என்றும் நம்மிடம் வசவுகள் உண்டு. ‘‘வயிறா… வண்ணான் சாலா..?’’ என்பார்கள். ‘சால்’ எனில் வெள்ளாவிப் பானை. உணவை சற்று அதிக அளவில் தின்பவரையும் விரும்பித் தின்பவரையும் சாப்பாட்டுக்கு ஆலாப் பறக்கிறவரையும் நோக்கிய வசவு அவை. சரியாகச் சாப்பிடத் தெரியாதவனையும், போதுமான அளவு உண்ணாதவனையும் பார்த்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கொல்

This gallery contains 5 photos.

‘கொல்’ எனும் சொல்லுக்குல் பல பொருட்கள் விவரிக்கும் பேரகராதிகள், கொல் எனும் சொல்லை அசைச்சொல்லாக, இடைச்சொல்லாகப் பயன்படுத்தும்போது, அதற்க்கு நேரடியாகப் பொருள் கூறுவதில்லை. அதுபோன்ற அசைச்சொற்களுக்கு சந்தர்ப்பத்துக்கு ஏற்ற உணர்ச்சிதான் பொருள்….(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்