Monthly Archives: மார்ச் 2021

கலையாகும் கைப்பின் சித்திரம்

This gallery contains 1 photo.

சாம்ராஜ் ·  நாஞ்சில் நாடனின் மிதவை நாவலை முன்வைத்து நாஞ்சில்நாடனின் நான்காவது நாவலான மிதவை 1986இல் வெளிவருகிறது. என் தனித்த வாசிப்பில் ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரைகள்’ மூன்றையும் அடுத்தடுத்து வாசிக்கலாம் என அந்தரங்கமாய்க் கருதுவேன். மூன்றுக்கும் ஒருவித தொடர்ச்சியும் உள்ளார்ந்த ஒரு சரடும் இருக்கின்றன, இன்னும் நுணுக்கமாகப் போனால் மிதவையின் நீட்சியே ‘சதுரங்கக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அச்சமேன் மானுடவா?

This gallery contains 2 photos.

தன் தனிப் பேச்சில் சொல்பவற்றை பகிரங்கமாக எழுதுகிறவர், தான் உலகில் எதிர்பார்க்கும் அறங்களைக் கெடுக்காத வகையில் பெரிதும் வாழ்பவர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். தன்னிடம் கூட தன்னுடைய இதுநாள் வரையிலான வாழ்க்கையின் சுவடுகளால் பாரபட்சம் இருக்கக்  கூடும் என்கிற தெளிவு உள்ளவர். நமக்கும் காழ்ப்புகள் உள்ளன, கட்டுப்படுத்தும் மனச் சாய்வுகள் உள்ளன என்பதை அறிந்தவர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

”மாரி வாய்க்க!”

This gallery contains 1 photo.

“மாரி வாய்க்க!” நாஞ்சில் நாடன் பதிற்றுப் பத்து என்னும் நூலின் எட்டாம் பத்துப் பாடிய புலவர் அரிசில் கிழார் மட்டுமே பாட்டும் தொகையும் எனும் பதினெட்டு சங்க இலக்கிய நூல்களில் தகடூர் எனும் சொல்லை ஆண்டிருக்கிறார். அன்றைய தகடூர்தான் இன்றைய தர்மபுரி என்பதை நான் அறிந்துகொண்டேன். அதை அறிந்துகொள்ளக் காரணமாக இருந்தவர் கால் நூற்றாண்டுக்கு முன்பெனக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

ஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி

This gallery contains 1 photo.

சுனில் கிருஷ்ணன்  நாஞ்சில் நாடனின் நாவல்களை முன்வைத்து 1, நாஞ்சில் நாடன் 150 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சொல்லாய்வுகள் சார்ந்து தொடர்ந்து முக்கியமான பல கட்டுரைகளை அண்மைய ஆண்டுகளில் எழுதி வருகிறார். தோராயமாக நாநூறு கட்டுரைகளுக்கு மேல் இருக்கலாம் என உரையாடலின்போது கூறினார். முறையே ‘கறங்கு’ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கதை பேசலாம் | நாஞ்சில் நாடனின் ‘இடலாக்குடி ராசா’ | UyirmmaiTV

 

Posted in அசைபடம், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக