Monthly Archives: ஒக்ரோபர் 2019

வார்த்தை என்பது வசவு அல்ல!

This gallery contains 1 photo.

இற்றைக்குச் சற்றொப்ப 45 ஆண்டுகட்கு முன்பு, யாம் மும்பையில் வேர் பிடிக்க முயன்று கொண்டிருந்த காலை, ஒரு சனிக்கிழமை பின்மாலையில், அப்போது மும்பையில் வருமான வரித்துறை அதிகாரியாகப் பணி புரிந்த, பின்னாளில் கேரள மாநில கேடர் I.A.S. அதிகாரியான, ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘இராமானுசன்’ ஆகிய திரைப்படங்கள் இயக்கிய, நண்பர் ஞான. ராஜசேகரன், எம்மை B.A.R.C. … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

பாறைமேல் விழுந்த விந்து

This gallery contains 6 photos.

எந்த விருதானாலும் ஏதாகிலும் மனக்குறை எவருக்காவது இருக்கும். அது நியாயமானதாகக்கூட இருக்கலாம். விருது வழங்குதல் எனும் சடங்கில் , நடுநிலை என்ற சொல் 24காரட் தங்கம் அல்ல. அது 18காரட்டுக்கு பழுதில்லாமல் இருந்தால் போதுமானது என்று நினைப்பவன் நான். ஈயமும் பித்தளையும் விருது பெரும்போதுதான்  சங்கடங்கள் ஏற்ப்படுகின்றன. ஈயத்தின், பித்தளையின் செல்வாக்கை அஞ்சியஞ்சி முனகல்களும் கேட்கின்றன.

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிறுவாணி வாசகர் மையம்

This gallery contains 4 photos.

ஐங்குறுநூறு நூலில், ஓரம்போகியார் பாடல்வரி சொல்லும் ‘நன்று பெரிது சிறக்க! தீதில்லாகுக!’ என்று. பொருள் சொல்ல வேண்டும். நன்மை பயப்பவை பெரிதும் ஓங்கட்டும்! தீமை அழிந்து மாயட்டும்!…. (நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சக்கடா

This gallery contains 2 photos.

‘அக்கடா என்றாலும் விடமாட்டேன், துக்கடா என்றாலும் விடமாட்டேன், தடா! உனக்குத் தடா!’ என்றொரு உயர்தனிச் செம்மொழித் தமிழ்ப்பாடல் கேட்டது நினைவிருக்கலாம். எனது மேற்கோளில் பிழையும் இருக்கலாம். தமிழில் பெயர் வைத்த சினிமாவுக்கு வரி விலக்குத் தந்து மொழி வளர்க்கும் உத்தமத் தலைவர்கள் வாழும் தேயம் இது. நேயமற்று நாம் பேசலும் ஆகா! அன்றே மனதில் தோன்றிய … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக