Monthly Archives: மே 2020

வாசிப்போம் தமிழ்இலக்கியம் வளர்ப்போம்

This gallery contains 1 photo.

Suresh Subramani விசும்பின் துளி – நாஞ்சில் நாடன் ~~~~ புகழ்பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குறித்த அறிமுகம் வாசகர்களுக்கு தேவையில்லை.அந்தளவிற்கு படைப்புலகில் பிரபலம் பெற்றவர் அவர். ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், நேர்காணல்கள் என தமிழிலக்கியப் பரப்பில் அவரின் இலக்கியப்பணி பரந்து விரிந்து உள்ளது. இது இவரின் பதிமூன்றாவது கட்டுரை நூல். இவரின் கட்டுரைகள் … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாடன் குறித்து கார்த்திக் புகழேந்தி

This gallery contains 1 photo.

கார்த்திக் புகழேந்தி இப்போ சமீபத்தில் தான், அதுவும் திருநெல்வேலியில் வைத்து ஒரு மேடையில் சொன்னார் நாஞ்சில் நாடன், “என் மூதாதையர்களுக்குப் பூர்வீகம் திருநெல்வேலிதான். எங்களுக்கு சாஸ்தா கோயில் இந்தத் ‘தெய்வம்’ தான் என்று. அதுவரை நாஞ்சில் நாடன் என்றால் நாகர்கோவிலும் மும்பையும் கோவையும் நினைவுக்கு வந்து கொண்டிருந்த எனக்கு ‘அட!’ என்று ஆச்சரியமாக இருந்தது. [அப்போ … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

முனகல் கண்ணி

This gallery contains 1 photo.

கொத்தமல்லி, மிளகாய் வத்தல், நெற்றுத் தேங்காய்த் துருவல் எல்லாம் வறுத்து, நல்ல மிளகு, காயம், கடுகு, ஓமம், பூண்டு, சின்ன உள்ளி, கருவேப்பிலை, சுக்கு எல்லாம் வெதுப்பி, தனித்தனியாக அரைத்து குழம்பு கூட்டிவைத்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து, புளி ஊற்றாமல், மொளவச்சம் வைக்கலாம் என்ற கணக்கில் வாசல் படிப்புரையில் உட்கார்ந்து உள்ளியும் பூண்டும் உரித்துக் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

மற்றை நம் பாவங்கள் பாற்று!

This gallery contains 1 photo.

தினமும் காலையில் கண்விழித்ததும் ஐம்பது அறுபது வாட்ஸ் ஆப் செய்திகள் கண்ணுறலாம். எனக்கென்றில்லை, யாவர்க்கும். ஈசன் அடி போற்றும், எந்தை அடி போற்றும், நேசன் அடி போற்றும், சிவன் சேவடி போற்றும், நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றும், மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றும், தேவார-திருவாசக மற்றும் சைவத் திருமுறைகளின் பாடல்கள் வரும். விதவிதமான சிவ மூர்த்தங்களும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஊருண்டு, காணியுண்டு, உறவும் உண்டு!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் சிறு பிராயத்தில் ஊரில் பலரையும் தாத்தா, போத்தி, பாட்டா என விளித்திருக்கிறேன். ‘கானாங் கோழிக்குக் கழுத்திலே வெள்ளை, கடுக்கரைப் போத்திக்குப் புடுக்கிலே வெள்ளை’ என்று பாடியும் நடந்திருக்கிறோம். கறுத்த போத்தி, சோளாங்காடிப் பாட்டா, பழவூர்த் தாத்தா என்று, அவர்களின் பிதுரார்ஜிதப் பெயரறியாமல் சுய ஆர்ஜிதப் பெயராலேயே விளித்திருக்கிறோம். ஆனால் சொந்தமாகத் தாத்தா என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்