Monthly Archives: ஜூன் 2018

உத்தமர் உறங்கினார்கள், யோகியார் துயின்றார்!

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் தி இந்து’ குழுமம் வெளியிடும் ‘காமதேனு’ வார இதழில் ‘பாடுக பாட்டே!” எனும் தலைப்பில் தொடர் ஒன்று எழுத முனைந்தேன். ஒரு அத்தியாயத்தில் புற நானூற்றில் வீரை வெளியனார் பாடல் ஒன்றை விரிவாக எழுதினேன். பாடலின் முதல் இரண்டு வரிகள், ‘முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தல் வேண்டாப் பலர் தூங்கு நீழல்’ … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே 8

This gallery contains 6 photos.

1972-ல் பம்பாய்க்குப் போனேன் பிழைப்புத் தேடி. என் தனிமை, வாசிப்பை நோக்கித் தள்ளியது.  வாசிப்பு, பேசத் தூண்டியது. அந்தக் காலத்தில் குன்றக்குடி அடிகளார், கி.வா.ஜ., அ.ச.ஞா., பா.நமச்சிவாயம் தலைமைகளில் ஓர் அணியின் கடைசிப் பேச்சாளனாகப் பட்டிமண்டபம் பேசியிருக்கிறேன். நம்புவது நம்பாதது உங்கள் தேர்வு. பணம் ஈட்டும் நெடுஞ்சாலை துறந்து தரித்திரவாச முடுக்குகளைத் தேர்ந்தெடுத்தேன். எனினும் நிறைவு … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

விடம்பனம் – மதிப்புரை

This gallery contains 2 photos.

‘விடம்பனம்’ என்ற சொல் மூன்று மாதங்கள் முன்புவரை எனது சொற் கிடங்கில் சேமிதமாகி யிருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பக வெளியீடான சீனிவாசன் நடராஜனின் நாவல் தலைப்பாகத்தான் விடம்பனம் குறுக்கிட்டது. சற்று நேரம் யோசித்துப் பார்த்தும் திக்கும் தெரியவில்லை லெக்கும் புலப்படவில்லை. தமிழ்ச் சொல்லா, வட சொல்லா என்று பிரித்தறிய இயலா எழுத்தமைப்பு. எவரிடம் சென்று கேட்பது? தமிழாசிரியர்களிடம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

”அசரீரி” வாசகர் கடிதம்

This gallery contains 1 photo.

..

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் பதித்த நல்வயிரம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் டோக்கியோவில் முழுமதி அறக்கட்டளையின் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தில் பெப்ரவரி 3-ம் நாள் கலந்து கொண்டு, மறுநாள் சற்றே அகல இருந்த இரு சிறு நகரங்களில் இரண்டு கலந்துரையாடல்களிலும் பங்கேற்று, ஜப்பான் தேசீய அருங்காட்சியகம், கடல் முகம், புத்தர் கோயில்கள், உலகின் உயரமான கட்டிடமான டோக்கியோ டவர் மரம், புஜி சிகரம், கடற்கரை, கடலுக்குள் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாடுக பாட்டே 7

This gallery contains 3 photos.

‘சாதி இரண்டு ஒழிய வேறில்லை என்றதுவும் இந்த ஒளவையே! அவையென்ன இரண்டு சாதிகள் என்றால் அடுத்தவர்களுக்குக் கொடுத்துஉதவுபவர் மேலானவர். உதவாதவர் கீழானவர். இன்றோபல்லாயிரக்கணக்கில் கோடிப் பணம் வைத்திருப்பவன் எவன் ஆனாலும் அவன் தொழுது ஏத்த வேண்டிய உயர்ந்த மனிதன், ரேஷன் கடையில் பாமாயிலுக்கு வரிசையில் நிற்பவன் எளிய மனிதன் என்றாகிவிட்டது.

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

பாவி போகும் இடம் பாதாளம்

This gallery contains 4 photos.

“இதுல பத்துல ஒன்னு மந்திரிக்குப் போயிரும் பெருசு… இன்னொரு பங்கு அதிகாரிக்கும் போயிரும்…” “அதெப்பிடி தம்பி?” “நூறு உதிரி பாகம் வாங்கனும்னு வைங்க… டயர், ட்யூப், கியர், கிளட்ச் மாதிரி… நூறுக்கு ஆர்டர் போடுவானுக அறுபது தான் டெம்போக்கு வரும்… பில்லு நூறுக்கும் வந்திரும்.. மிச்சம் காசாட்டுப் போயிரும்…” “அப்பம் பஸ் ஓட்டுகது… பழசிலே நல்லதாப் … Continue reading

More Galleries | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

இரந்து கோட் தக்க துடைத்து

This gallery contains 3 photos.

பிரபலங்களுக்கு பத்ம விருதுகள் அனைத்தும் வாங்கக் கிடைக்கும். பல்கலைக்கழகங்கள் அவர்களுக்கு முது முனைவர் பட்டம் வழங்கி இறும்பூது எய்தி உவக்கும். குடியரசு தலைவர், முதன்மை அமைச்சர், முதலமைச்சர் என அமர்ந்து அவர்கள் இரவு உணவு அருந்துவார்கள். பிறந்த நாளுக்கு முன்னணி அரசியல் கொள்ளையர் வாழ்த்துவர்.  இறந்தால் வரிசையில் நின்று மலர் வளையம் வைப்பர். வாரிசுகளின் சிரசில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

வன்னி

This gallery contains 1 photo.

திரும்பவும் சொல்கிறேன், சொல்லின் தீ போதாது. சிந்தையில் தீ வேண்டும். இருந்தால் நம்மை இரண்டாந்தர இந்தியனாக, கறுப்பனாக, தமிழன் தானே என்று இளப்பமாக எவரும் கருத மாட்டார். நமது மொழியும், மரபும், பண்பும் இம்மாநிலத்து எவரும் நமக்கு இட்ட பிச்சையில்லை. உரிமை. காவலர் எனக் கருதும் எந்தக் கோவலரும் இதைக் காக்க மாட்டார்கள். மரபையும், பண்பையும், மொழியையும் காப்பதாகப் பேசுவார்கள். செயலில் வைப்பாட்டிகளின் வாரிசுகளுக்கும், பத்துத் தலைமுறைக்குச் சொத்துச் சேர்ப்பார்கள்.  நாஞ்சில் நாடன் பஞ்ச பூதங்கள் என்பர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

சிறுகோட்டுப் பெரும்பழம்

This gallery contains 5 photos.

கேரளம் பெருமிதத்துடன் பலாப்பழத்தை தனது அதிகாரப்பூர்வமான பழம் என்கிறது. நாமும் சொல்லலாம் வாழையை. ஆனால் அத்தகு யோசனைகள் தோன்ற நமக்கெல்லாம் நேரம் எங்கே? வேண்டுமானால் பெரும்பாலும் பிரதான கட்சித் தலைவர்கள் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனத்தின் பல்வகை மதுபானங்களை டாஸ்மாக் மூலம் விநியோகிக்கப்படுவதை நமது அதிகாரப்பூர்வமான பானம் என்பார்கள். மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் நமது அதிகாரப்பூர்வமான உணவு … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்