Monthly Archives: ஜூன் 2014

”ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?”

This gallery contains 1 photo.

விகடன் மேடை – நாஞ்சில் நாடன் பதில்கள் வாசகர் கேள்விகள் அ.குணசேகரன், புவனகிரி….‘‘ஓர் எழுத்தாளனுக்கு இருக்கவேண்டிய தகுதி என்ன? இருக்கக் கூடாத பண்புகள் எவை?” ”உண்மையான எழுத்தாளன் என்று கேட்பதால், நானும் உண்மையாகப் பேச வேண்டும். இருக்க வேண்டியவை… அற உணர்வு, கூர்த்த நோக்கு, அனுபவச் செழுமை, வலி உணரும் மனது, தேர்ந்த வாசிப்பு, மொழிப்புலமை, … Continue reading

More Galleries | Tagged , , , , , | 6 பின்னூட்டங்கள்

வல் விருந்து

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார் என்றும் உரை எழுத முடியாது. மற்ற நாட்களில் உருக்குத் தேங்காய் நெய். உண்மையில் எள்+நெய் தானே எண்ணெய்? எனவே வாரந்தோறும், சனிக்கிழமையில், எள் நெய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மன்னுபுகழ்க் கெளசலை தன் மணிவயிறு வாய்த்தவளே!

This gallery contains 17 photos.

 இறையோ, அரசிளம் குமரோ,செல்வச் சீமானோ, சீமாட்டியோ, எல்லாத் தாய்மாருக்கும் தன் குழந்தை அதுவேயாம். எந்தத் தாயும் கோசலைதான், அவள் குழந்தை மணிவயிறு வாய்த்த மகவேதான். எனதம்மைக்கு, மன்னுபுகழ் சரசுவதியின் மணிவயிறு வாய்த்தவன் தானே நானும்! எனில் நீங்களும், உங்கள் தாயாருக்கும் புகழ் மணிவயிறு வாய்த்தவர் தாமே! ……….நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

“பயனற்றச் சொற்களைப் பேச, எழுத வேண்டாமே!”

This gallery contains 1 photo.

விகடன் மேடை – வாசகர் கேள்விகள், நாஞ்சில் நாடன் பதில்கள் ஜெகந்நாதன், திருவொற்றியூர்….”தமிழ்ப் படைப்புலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்ற உங்கள் பட்டியல் பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு, பத்திக்கிச்சே வேய்..?” ”அஃதோர் பட்டியல் அல்ல; வகை மாதிரிக்காகச் சில பெயர்களைச் சொல்கிறேன் என்று அந்தப் பதிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதாவது ஒரு SAMPLE SURVEY. மூத்த எழுத்தாளர்கள் சிலரைக் கேட்டிருந்தால், எவர் … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

பெண்கள் சதைப் பிண்டங்களா??

This gallery contains 12 photos.

பெண்கள் சதைப் பிண்டங்களா?? இலக்கிய உலக சர்ச்சை! நக்கீரன் சிறப்புக் கட்டுரை  

More Galleries | 2 பின்னூட்டங்கள்

உபநெல்லும் ஊரையும்

This gallery contains 21 photos.

நெல்லைத் தூற்றி, சண்டு சாவி நீக்கினால்தான் அதற்க்கு மரியாதை. சண்டு எனில் பதர் எனலாம். ‘மழை’ பாடலில் பாரதி, ‘வானத்துத் தேவர் செண்டு புடைத்திடுகின்றார்’ என்று பாடுவதன் சரியான பொருள் எவரும் சொல்லுங்கள் ஐயா!மிளகாய் வற்றலில் சண்டு வற்றல் எனத் தரம் குறைந்த அயிட்டம் உண்டு. அது விலை குறைவானது. சாவி என்பதோ உள்ளீடற்றது. மறுபடி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

”எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்?”

This gallery contains 1 photo.

விகடன் மேடை -வாசகர் கேள்விகள்.. நாஞ்சில் நாடன் பதில்கள்  லெனின்.கார்த்திகேயன், துபாய்.: – ”எதன் அடிப்படையில் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்ய வேண்டும்?” ”எந்த முன்முடிவும் இருக்கக் கூடாது. பிறர் சொல்லி ஓர் எழுத்தாளன் மீது நமக்கு ஏற்படும் விருப்பு வெறுப்புகள் குறுக்கிடக் கூடாது. ஒரு துறையை விரும்பி வாசிக்கிறவர், அதைத் தொடர்ந்து மேலே போகலாம். தேர்ந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நுப்போல் வளை

This gallery contains 13 photos.

எக்காலத்தும் அன்பும் வெறுப்பும் மானுட இயல்பு, நல்லவர்க்கும் கெட்டவர்க்கும். பங்காளி, தாயாதிச் சண்டைகள் உணரப்பட்டதும் உள்வாங்கப் பட்டதும்தான். அன்றும் உண்டு, இன்றும் இருக்கிறது. ஆசாபாசங்கள் என்றும் அடர்நிறங்கள் கொண்டவை. ஆனால் இன்று உறவுகள் அவற்றின் இயல்பான அந்நியோன்மைத் தன்மையும், ஆவலாதியும் இழந்து வருகின்றன. முதல்சுற்று உறவுகள் தாண்டி, இரண்டாம் சுற்று உறவுகள் பெரும்பாலும் கல்யாண வீடுகளிலும், … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடன் பட்டியல்- ஜெயமோகன்

This gallery contains 1 photo.

ஜெயமோகன் ஆனந்த விகடனில் நாஞ்சில்நாடன் போட்ட இளம் படைப்பாளிகளின் பட்டியலைப் பார்த்தேன். இணையத்தில் தேடி அதை எடுத்துக் கொடுத்திருக்கிறேன். அதில் யாரைச் சேர்க்கலாம் சேர்க்கக் கூடாதென்றெல்லாம் வழக்கம்போல விவாதங்கள். நான் இப்படத்தை இங்கே அளிப்பது தமிழில் எழுதவந்துள்ள புதிய தலைமுறை படைப்பாளிகளை இவ்வகையில் அறிமுகம் செய்வது உற்சாகமளிக்கிறது என்பதனாலேயே. அதன்மூலம் அவர்கள் மேலும் பரவலாக வாசகர்களைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நம்பிக்கை நட்சத்திரங்கள்! விகடன் மேடை…

This gallery contains 1 photo.

நம்பிக்கை நட்சத்திரங்கள்! விகடன் மேடை… நாஞ்சில் நாடன் பதில்கள் கேள்விகள் இங்கே.. பதில்களை இந்தவார விகடனில் படிக்கலாம். பார்வதி, திருநெல்வேலி.:-  ”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?” ”இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன். ஈழத்து இளைஞர்களில் சயந்தன், தமிழ்நதி, இளங்கோ. தமிழகத்தில் குமாரசெல்வா, வா.மு.கோமு, மு.ஹரிகிருஷ்ணன், ஜே.பி.சாணக்யா, கே.என்.செந்தில், எஸ்.செந்தில்குமார், பா.திருச்செந்தாழை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும்

This gallery contains 1 photo.

4 ஜூன் 2014 விகடன் மேடை – வாசகர் கேள்விகள்… நாஞ்சில் நாடன் பதில்கள்- அனைத்தும் ஷாஜகான், ஆம்பூர். ”வாழ்வின் இளமையான காலங்களை, மக்கள் நலப் போராட்டங்களுக்காக வீதிகளிலும் சிறைகளிலும் கழிப்பவர்கள் எந்த அடையாளமும் இல்லாமல் கடந்துசெல்கிறார்கள். ஆனால், எழுத்தா ளர்கள் தங்களின் ஒவ்வோர் சொல்லுக்கும் அங்கீ காரத்தை எதிர்பார்ப்பதும் அங்கலாய்ப்பதும் கூச்சலி டுவதும், சுயநலத்தையே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

தமிழ்மணி கலாரசிகன்- எப்படிப் பாடுவேனோ ?

1-06-2014 தினமணி- தமிழ்மணி பகுதியில்  நாஞ்சில்நாடனின் ‘எப்படி பாடுவேனோ?’ கட்டுரை தொகுப்புக்கு கலாரசிகனின் மதிப்புரை

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் | Tagged | 2 பின்னூட்டங்கள்