Monthly Archives: ஜூன் 2015

நாஞ்சில்நாடன் vs ஜெயமோகன் – ஆறு வித்தியாசங்கள்

This gallery contains 1 photo.

by RV நாஞ்சில்நாடனோடு ஊர் சுற்றியதைப் பற்றி எல்லாம் பக்ஸ் விலாவாரியாக எழுதிவிட்டான். சரி என் பங்குக்கு ஜெயமோகன் நாஞ்சில்நாடன் இருவருக்கும் உள்ள ஆறு வித்தியாசங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன். ஜெயமோகனோடு பேசும் எங்களைப் போன்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று ஜெயமோகனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் காது கொடுத்துக் கேட்கவில்லை என்றால் அவருக்கு கோபம் வந்துவிடும். நாஞ்சிலாருக்கும் அது தெரியும், இருந்தாலும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ரெண்டிலே ஒண்ணு – கைம்மண் அளவு -19

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் ‘ரெண்டுல நீ ஒண்ணைத் தொடு மாமா’ என்றொரு திரை இசை சாகித்தியம் உண்டு தமிழில். நேரான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப் பிரயத்தனப்பட வேண்டும். ஆட்காட்டி விரலுக்கு ஒன்றை நினைத்துக் கொண்டு, நடுவிரலுக்கு எதிர்மறையான இன்னொன்றை நினைத்துக் கொண்டு, தனது எதிர்பார்ப்பை உறுதி செய்துகொள்ள, முன்னால் நிற்கும் தோழன் அல்லது தோழியிடம் கேட்டுக்கொள்வது, ‘ரெண்டுல … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ராஜவீதி

This gallery contains 2 photos.

ராஜவீதி அ முத்துலிங்கம் ரொறொன்ரோ விமானக்கூடத்தில் 2013ம் ஆண்டு, வெப்பமான கோடைகால மாலை ஒன்றில் நானும் சில நண்பர்களும் விமானத்துக்காக காத்திருந்தோம். ஏற்கனவே சாகித்திய அகதெமி விருது பெற்ற நாஞ்சில் நாடன் கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறுவதற்காக வந்துகொண்டிருந்தார். விமானக்கூடத்தில் அவரை வரவேற்க வந்தவர்களில் ஒருவர்கூட அவரை நேரில் கண்டவர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீரின்றி அமையாது உலகு – கைம்மண் அளவு 18

This gallery contains 5 photos.

நாஞ்சில்நாடன் அடுத்த உலகப் பெரும் போர் தண்ணீருக்காகவே நடக்கும்’ என்கிறார்கள் வரலாற்றை முன்மொழிபவர்கள். தமிழ்த் திரைப்பட வெளியீட்டுக்கான சினிமாக் கொட்டகைகளுக்காகவும் அது நடக்கலாம். ஊழல் பணம் பங்கு வைப்பதிலும் நடக்கலாம். ‘யாருடைய கடவுள் பெரிய கடவுள்’ என்பதற்காகவும் நடக்கலாம். இருந்து காணும் தீப்பேறு பெற்றவர்கள் காண்பார்களாக..! இந்திய தேசத்தின் மாநிலங்களுக்கு இடையில் தற்சமயம் நீதிமன்றங்களில் போர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

காலம் பொன் போன்றது – கைம்மண் அளவு17

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் ‘நேரம் பொன் போன்றது’ என்பார்கள் பெரியோர். Time is money என்பார்கள் ஆங்கிலத்தில். அதாவது, காலம் என்பது செல்வம் எனும் பொருளில். காலத்தைச் சேமித்தல் என்பது செல்வம் சேர்த்தல். பொன்னும் பணமும் போனால் தேடிக்கொள்ளலாம். ஆனால் தொலைந்த காலத்தைத் தேடிக் கண்டடைய இயலாது. அது போனால் போனது தான். அது கடந்த காலம்; … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

காவலன் காவான் எனின் – கைம்மண் அளவு 16

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் அண்மையில் கடலூர் சென்று வந்தேன். 2013 ஜூன் மாதம், வாழ்நாள் சாதனைக்கான, கனடா இலக்கியத் தோட்டத்தின் ‘இயல் விருது’ பெறுவதற்காக கனடா சென்றிருந்தபோது திரு.மதிவாணன் குடும்பத்தினருடன் 25 நாட்கள் றொறன்ரோ நகரில் தங்கி இருந்தேன். இந்தியா வந்திருந்த மதிவாணன் மூலம் அவர் குடும்பத்தினருக்குச் சில புத்தகங்கள் அனுப்ப வேண்டிய காரியம் இருந்தது. சித்திரைப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கைம்மண் அளவு 15- பேரூந்து காமம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் இந்த வயதிலும் மாதம் மூவாயிரம் கிலோ மீட்டர் சராசரியாகப் பேருந்துப் பயணம் எமக்குப் பிழைப்பு. சென்னையும் சென்னை கடந்த ஊர்களும் என்றால் ரயில் மார்க்கம். நம்மையும் இலக்கியவாதி என்று எவரும் கருதினால், தூர தேசப் பயணங்களுக்கு வான்வழி. சொந்தச் செலவில் எங்கு போவதானாலும் பேருந்துதான்.  சொகுசுப் பேருந்துக்கு மாற்றாக, சற்று காசு மிச்சமாகுமே … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்