Category Archives: வழுக்குப் பாறை கவிதைகள்

வழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் http://solvanam.com/?p=40353 சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர், சொல் ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், மரபிலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இன்னொரு முகமாக  கவிஞர் என்பது திகழ்கிறது என்பதைப் பலர் அறிய வாய்ப்பில்லை. அண்மையில் வெளிவந்த இதுவரை அவர் எழுதிய கவிதைகளின் முழுத்தொகுப்பான ”வழுக்குப் பாறை” யின் முன்னுரையில் அவரே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பித்தப்பூ

This gallery contains 1 photo.

பித்தப்பூ பங்கயப் பூ நாறும் நயந்து இனித்த சுண்டு அதனில் பதியாத முத்தப்பூ மூச்செறிந்து சொல் களைந்து வாடாது காற்றில் பித்தப் பூவாய் கலந்து அலையும் …………………………………………………………நாஞ்சில்நாடன்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

இறையும் மறையும்

This gallery contains 2 photos.

சரஞ்சரமாய் பூத்து இலை உதிரக் காத்து மஞ்சட் பாறையாய்த் தெளிந்து சரக்கொன்றை கண்பட்ட தருணம் கொன்றை அணிந்தானை நினைவூட்டிற்று கங்கை ஆற்றைப் புனைந்தானும் அம்புலியின் கீற்றை அணிந்தானும் மேனி நெடுக கீற்றை வரைந்தானும் வல்லரவின் ஆரம் சுமந்தானும் கற்றைவார்ச் சடைமேல் பனி மெளலி கவித்தானும் கயிலையில் மட்டுமே இருக்கக் கட்டுரை இல்லை. நெருஞ்சியும் தும்பையும் அரளியும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழினம் – கவிதை

  தமிழினம் வெள்ளூமத்தைப் பூ நிமிர்ந்து சூரியனில் விடாய் அடங்கும் பாதம் பதியாமல் பார்த்துப்போம் சிறுமியரை மஞ்சட் சிறுநெருஞ்சி காதில் அணிந்து போகக் கொஞ்சும் பெரும்பித்தன் சடைமரத் தவமியற்றும் வெள்ளெருக்கு அதன் நீல நிறப் பங்காளி ஏளனமாய் சற்றுச் சிரிக்கும் தங்கரளி வெள்ளரளி செவ்வரளி மாதர் சூடிக் கொடுக்காத தெனினும் சுடர்கொடிகள் பூச்சிமுள்ளின் ஊதா மலர்க்குழலில் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், வழுக்குப் பாறை கவிதைகள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக