Monthly Archives: ஒக்ரோபர் 2016

வையாசி 19- நகரத்தார் வாழ்க்கைப் பின்னம்

This gallery contains 4 photos.

கடல் கடந்து தன வாணிகம் செய்யப்போன நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் வாழ்க்கைச் செழிப்பையும், இடர்பாடுகளையும் விவரிக்கிறது இந்த நாவல். இதுவரைக்கும் இத்தனை விரிவாக அவர்களது வாழ்க்கையை வேறு எவராலும் பேசப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை.                    (….நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

அட்டைப்பட வரலாறு… சூடிய பூ சூடற்க

This gallery contains 1 photo.

நானும்(ஜெயமோகன்), நாஞ்சில் நாடனும், வசந்தகுமாரும், நண்பர் மதுரை சண்முகத்தின் காரில் கர்நாடகா, மகாராஷ்டிரா பக்கமாக சென்றோம். சிவாஜி வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட கோட்டைகளை எல்லாம் பார்ப்பது திட்டம். பிஜப்பூர் கோட்டையை பார்த்தோம். “கோல் கும்பாஸ்” என்னும் மாபெரும் மசூதியின் கும்மட்டத்திற்க்குள் மையத்தில்  இருந்து சாதாரணமாக பேசினாலும்  அனைத்துப் பகுதிகளுக்கும் தெளிவாக கேட்க்கும்படி ஒலியமைப்பு இருப்பதை கண்டு வியந்தோம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

எட்டுத்திக்கும் வழிகாட்டி

This gallery contains 5 photos.

ஆனால் பெரும்பாலான தமிழருக்குக் கற்றுத்தருவது அத்தனை எளிதான காரியம் அல்ல. அவருக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை. பண்டொரு தமிழ்ச் சினிமாவில், எதைச் சொன்னாலும் திருப்பிச் சொல்லும் வசனம் ஒன்று உண்டு. “அதான் எனக்குத் தெரியுமே” என்று. தெரியாத ஒன்றைச் சொல்லி வியப்பு ஏற்படுத்துவது தமிழனிடம் செல்லுபடியாகாது. அவன் தன்னை மொழிக் களஞ்சியம், கலைக் களஞ்சியம், சமூக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

கறங்கு

This gallery contains 1 photo.

  சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ? சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்