Monthly Archives: மார்ச் 2019

கருத்த வாவு

This gallery contains 8 photos.

சென்ற கிழமை காலையில் வெங்கடாசலபதி விளித்தார். அப்போது அவருக்கு பின்னிராக்காலம். “ஒரு சந்தேகம்! அமாவாசைக்குத் தமிழ்ச் சொல் என்ன? எட்டாவது வாசிக்கும் என் மகள் கேட்கிறாள்!” இது உரையாடலின் சாரம். மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. கானடாவில் வசிக்கும் சிறுமிக்குத் தோன்றியது, கல்லுக்குழியில் கால்நீட்டி உட்கார்ந்திருக்கும் நமக்குத் தோன்றவில்லையே என்று நாணமாகவும் இருந்தது.

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

சில்லறை

This gallery contains 6 photos.

கிழமையில் நாலைந்து முறை கோவைப்புதூர் வ.உ.சி.நகரில் இருந்து நகரத்து மையமான மணிக்கூண்டு போவேன். வ உ சி நகர் எனும்போது அது வ.உ.சிதம்பரனார் நகர் எனக் கொளல் வேண்டும். அவர் கப்பலோட்டிய தமிழன் என்று சொல்லல் வேண்டுமோ! வ.உ.சி என்பதில் நடுநாயகமான ‘உ’ எனும் குறிலெழுத்து குறிப்பது உலகநாத பிள்ளை என்ற அவர் தகப்பனார் பெயர். … Continue reading

More Galleries | Tagged , , , , | 4 பின்னூட்டங்கள்

எங்ஙனம் ஆளும் அருள்!

This gallery contains 2 photos.

உட்பகை, தன்படை வெட்டிச் சாதல் எனும் தன்மைகள் உணர்ந்த கோவூர்கிழார், இரு மன்னருக்கும் சேர்த்துக் கூறினார் ’அடுத்தவன் சிரிக்கும்படியா வீணாக அடிச்சிக்கிட்டு சாகாதீர்கள்! உங்களில் எவர் தோற்றாலும் தோற்பது உங்கள் குடிதானே!’ என்று.

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

வல்லினம் தமிழ் சொல்லினம்

This gallery contains 9 photos.

எனது பார்வையில், வாசிப்பினால் கிடைத்த தெளிவில், நெருக்கடியான சூழலிலும் சமகால மலேசியா எழுத்து, ஈழத்தமிழ் இந்தியத் தமிழ் எழுத்துகளுடன் ஒப்பீடு தரத்தில் இருப்பதை அறிய முடிகிறது. வல்லினம் இணைய இதழ் அதற்க்கொரு முக்கியப் பங்காற்றி உள்ளது.  

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நெஞ்சிலே நிறுத்து!

This gallery contains 1 photo.

எனவே சற்றே இரக்கமுடையவராய் இரும்! பழிபாவம் அஞ்சும், ஆண்டவனையும் அறத்தையும் எண்ணும்! கலப்படத்தில் ஊழலில் ஊழியத்தில் மலையில் காட்டில் மணலில் கனிமத்தில்  சாராயத்தில் வைத்தியத்தில் கல்வியில் தரகில் அடித்து மாற்றியது போதுமென்று ஆறு மனமே! சற்றே தேறு மனமே!   கண்மணிகாள்! உடன் பிறப்புகளே! இனமானச் சொந்தங்களே! ஒன்றை நீ நெஞ்சில் நிறுத்து!   பத்தாயிரம் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

புந்தியும் சிந்தையும்

This gallery contains 5 photos.

”கம்பலை” எனும் தலைப்பில் தற்போது தொகுப்பாகும் கட்டுரைகள் இருபத்து நான்கும், மிகச் சமீபத்தில், 2017-18 காலகட்டத்தில் எழுதப் பெற்றவை. என்னைத் தொடர்ந்து வாசிப்பவர் அறிவார் சொல், மொழி என சீராக எனது எழுத்து தீவிர கதிப்பட்டிருப்பதை. உண்மையில் இந்த வகையிலான கட்டுரைகள் மற்றெவரும் தடம் பதித்திராத களம் என்பதையும் உணர்வார்கள். ஆடுகளமா, அமர்க்களமா, படுகளமா என்பதையும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இரட்டையர்

This gallery contains 5 photos.

உலக வரலாற்றில் இரட்டையர் எனப் பலர் இருக்க்கூடும். அத்தகு இரட்டையரில், தமிழ்க் கவிப்புலத்தில் புதைந்து கிடப்பவர் இருவர். இவர்கள் Twins அல்லர். ஒருதாய் மக்களும் அல்லர். இவர்கள் பெயரில் தனிப்பாடல் திரட்டில் 12 பாடல்கள் கிடைக்கின்றன. இரட்டையர் இருவரும் முது சூரியர் மற்றும் இளஞ்சூரியர் என வழங்கப்பெற்றுள்ளனர்.  இவை அவரின் புனைப் பெயர்களாக இருக்கலாம். இருவரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உழுதுண்டு வாழ்வார்

This gallery contains 4 photos.

இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து, தலைவர் வாழ்க கூச்சல் போட்ட கூட்டம் ஓய்ந்தபின், என்னிடம் கேட்டார் ஐயன். “இப்ப எதுக்கு ஜாங்கிரி குடுக்குறாங்க…” ‘எதுக்கு குடுப்பானுக? கொலைக் கேசுல விடுதலை ஆனா, சொத்துகுவிப்பு வழக்கிலே தண்டனை பெற்று வெளியே வந்தா, ஊழல் வழக்கிலே தப்பிச்சு வெளியே வந்தா…”

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சோறும் கறியும்

This gallery contains 9 photos.

எனது எண்பது சிறுகதைகளின்  தொகுப்பான ‘நாஞ்சில் நாடன் கதைகள்’ நூலுக்கு முன்னுரை எழுதிய எம் கோபாலகிருஷ்ணன் ‘புளிமுளம்’ என்பது நாஞ்சில் நாடனின் கதாநாயகி எனக் குறிப்பிட்டார். உண்மையில் ஒருகாலத்தில் புளிமுளம் என்ற சொல் கேட்ட உடனேயே நாவூறி நிற்பேன்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

எவ்வுருவோ நின்னுருவம்

This gallery contains 4 photos.

கேரளம் பலாப்பழத்தை தனது மாநிலப் பழமாக அறிவித்ததைத் தொடர்ந்து இன்றைய செய்தி சொன்னது அன்னாசிப் பழத்தை திரிபுரா மாநிலம் அறிவித்துள்ளதாக, பண்டு எனும் மாம்பழத்தை தெலுங்கானா தனது மாநில பழமாக அறிவித்துள்ளது. மராத்திய மாநிலம் அல்போன்ஸா என்றும் ஆப்புஸ் என்றும் வழங்கப்பெறும் மாங்கனியைஅறிவித்துள்ளது. கர்னாடகமும் ஆந்திரமும்  ஏற்கனவே ஏதேனும் ஒரு கனியை அறிவித்திருக்கலாம், அல்லது அறிவிக்கலாம். … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நாமமும் நாஞ்சில் என்பேன்!

This gallery contains 6 photos.

தமிழ் வாழ்க என உரத்தும் நீட்டியும் முழங்கியும் பேசிச் சில்லரை சேர்த்து , மொழிக்கும் இனத்துக்கும் நாமம் சாத்தியவர்களை மட்டும் தனித்து இனம் கண்டு கொண்டால் போதும். இதைக் கூறுபவன் நாமமும் நாஞ்சில் என்பேன்! …(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

எங்க குலசாமி

This gallery contains 8 photos.

ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படிச்சாச்சு. முற்போக்கு சிந்தனைகள், மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்காரியம்,தமிழ் எல்லாம் படிக்கிறோம். ஆனாலும் கொடையின்போது தலை குனிஞ்சி நிண்ணு பைரவன் சாமி கொண்டாடி என் நெற்றியில் விபூதி பூசும்போது என் கண்ணு கலங்கி கண்ணீர் வரும். இது மனித சம்பவமா, தெய்வ சம்பவமா என்றெல்லாம் பகுத்துப் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு உணர்ச்சியைத் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

இங்கு எவரும் கல்புர்கியும் இல்லை: கெளரிலங்கேஷும் இல்லை

This gallery contains 15 photos.

கும்பமுனியை எவரால் என்ன செய்ய இயலும்? நாஞ்சில்நாடானைத்தான் எவரால் ஏது செய்ய இயலும்? சுயநலம் சுமந்தலையும் சிலர் சொல்லாம், கும்பமுனி பிற்போக்குவாதி, பாஸிசவாதி என்றெல்லாம். அவர்கள் கும்பமுனியை அறிய மாட்டாதவர். நாம் தெய்வமும் அல்ல, தெய்வாம்சம் பொருந்தியவரும் அல்ல. சராசரி மாந்தர். ஆனால், கொள்கைக் குன்றேறி  நின்று அயோக்கியருக்கு இச்சகமும் பேசுவது கும்பமுனி இயல்பு அல்ல. … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக