Monthly Archives: ஜூலை 2015

விளம்பரம் – கைம்மண் அளவு 23

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் தான் தற்புகழ்தல் தகுதி அன்றே’ என்கிறது பன்னரும் சிறப்பின் பவணந்தி இயற்றிய நன்னூல். ‘தானே தன்னைப் புகழ்ந்துகொள்வது தகுதியுடையவர் செயலல்ல’ என்பது பொருள். எனில் காசு கொடுத்தும், காரியங்கள் நடத்திக்கொடுத்தும் பிறரைக் கொண்டு புகழச் செய்தல் தகுதியானவர் செயலா? அப்படிப் பார்த்தால், தகுதியானவர் என்று பகலில் விளக்கு கைக்கொண்டு தேடினாலும் வெகு சிலர்கூட … Continue reading

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்

புலவர் பாடாது ஒழிக என் நிலவரை (ஜெயமோகன் குறித்து)

This gallery contains 9 photos.

நான் சொல்ல வந்த விடயம் அதுவல்ல. தேனீர் பருகியபின் உரையாடல்போல தொடங்கி மிகக் கடுமையான மொழியில் என்னை விமர்சனம் செய்தார். அவர் பேச்சின் சாரம் ஐம்பதுக்குப் பிறகு வாய்க்கும் அனுபவமும், தேர்ச்சியும், படைப்பு எழுச்சியும் கொண்ட காலத்தை நான் வீண் செய்து கொண்இருக்கிறேன் என்பது. இறுதியில் கேட்டார், Are you going to settle down … Continue reading

More Galleries | Tagged , , , , , | 5 பின்னூட்டங்கள்

தமிழாய்வு – கைம்மண் அளவு 22

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் உவப்பானவற்றைப் பேசிவிட்டு, துவர்ப்பானதைப் பேசாமல் போவது எழுத்தாளனின் அறம் அல்ல. தமிழ் கற்றார்க்கு கல்வித் தந்தையர் செய்யும் அநீதி பற்றிப் பார்த்தோம். தமிழ் கற்பிப்பவருக்கும் சில நீதி சொல்வது நமது கடமையாகும். அவர் அதைக் கைக்கொள்வதும் தள்ளுவதும் அவர்களது மனவார்ப்பு. பல்கலைக்கழக வளாகங்களும்,கல்லூரி வளாகங்களும் தமிழ் கற்போருக்கு தமிழைச் சரிவர போதிக்கின்றனவா, போதிப்பதைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சிலின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டுவிழா

Posted in அனைத்தும் | 1 பின்னூட்டம்

தமிழாசிரியர்- கைம்மண் அளவு 21

This gallery contains 2 photos.

  நாஞ்சில் நாடன் சில ஆண்டுகள் முன்பு, கோவையின் இலக்கிய மேடையில் சிலம்பொலி செல்லப்பனார் ஒரு சம்பவம் சொன்னார். அவரை எனது பம்பாய் நாட்களில் இருந்தே அறிவேன். அப்போது அவர் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை தனி அலுவலராக இருந்தார். கோடை விடுமுறையில், குடும்பத்துடன் பம்பாயில் இருந்த அவரது இஸ்லாமிய நண்பர் வீட்டில் வந்து தங்குவார். … Continue reading

More Galleries | Tagged , , , , , | 7 பின்னூட்டங்கள்

தெரிந்த நாவல்-தெரியாத கதை | என் தாத்தாதான் கந்தையா நாஞ்சில் நாடன்

This gallery contains 3 photos.

நான் எழுதிய நாவல்கள் ஆறு. அதில் ஐந்து நாவல்கள் என்னுடைய சொந்த அனுபவம் மற்றும் அதன் நீட்சி. ‘மாமிசப் படைப்பு’ எனது சொந்த அனுபவம் அல்ல. என்னுடைய மூதாதையரின் கதையைப் படைப்பாக்கினேன். அதில் வரும் முக்கிய கதாபாத்திரமான கந்தையா, என்னுடைய அப்பா தாத்தா. அவர் பெயர் சுப்பிரமணிய பிள்ளை. அவர் என்னுடைய அப்பாவுக்குத் திருமணம் ஆவதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

பழமொழி- கைம்மண் அளவு 20

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் பழமொழி, சொலவம், சொலவடை யாவும் ஒரு தாய் மக்கள். அவை மக்கள் மொழியின் நயமும் சுவையும் ஆழமும் கூட்டுபவை. ஒன்றைச் சொல்லி, மற்றொன்றைப் புரிய வைப்பவை. விரிவான பொருளைத் தேடிப் போகப் பணிப்பதே அவற்றின் பண்பும் பயனும் ஆகும். தமிழ் இலக்கணம் பேசும் குழூஉக் குறி, இடக்கர் அடக்கல், மங்கல வழக்கு யாவற்றுக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில்நாடன் சிறுகதைகளில் அங்கதம்

This gallery contains 2 photos.

முனைவர் ந.பாஸ்கரன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர்-1 .Added: January 13th, 2014 நாஞ்சில்நாடனின் படைப்புகளுள் ஓர் உயிர்ப்பு இயங்கிக்கொண்டே இருப்பதை வாசிப்பாளர்கள் நுண்மையாக உணரமுடியும். அதற்கு முதன்மைக்காரணமாக இருப்பது அவரின் மண் ஒட்டிய வார்த்தைகள்தான். ஒவ்வொரு கதையிலும் வாசிப்பாளனின் வாசிப்பை உந்துசக்தியாக இருந்து இயக்கி செல்வது கதையாடலில் அவர் பயன்படுத்தும் அங்கதம் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்

This gallery contains 2 photos.

வளவ. துரையன் http://solvanam.com/?p=40353 சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், சிறந்த கட்டுரையாளர், சொல் ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், மரபிலக்கியங்களில் ஆழங்கால் பட்டவர் என்று பன்முகத்தன்மை வாய்ந்த நாஞ்சில் நாடனுக்கு இன்னொரு முகமாக  கவிஞர் என்பது திகழ்கிறது என்பதைப் பலர் அறிய வாய்ப்பில்லை. அண்மையில் வெளிவந்த இதுவரை அவர் எழுதிய கவிதைகளின் முழுத்தொகுப்பான ”வழுக்குப் பாறை” யின் முன்னுரையில் அவரே … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக