Category Archives: நாஞ்சில்நாடனின் கவிதைகள்

நாஞ்சில் நாடன் கவிதைகள்

This gallery contains 5 photos.

ஆவநாழி இதழ் 22, பிப்ரவரி-மார்ச் 2024

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பாழ் நிலப் படுவம்

This gallery contains 1 photo.

காலாழ் களர் என்பார் குறளாசான்புதை சேறு என்றுரைக்கும் அகராதி படுவம் என்போம் யாம்…….நாஞ்சில் நாடன் காலாழ் களர் என்பார் குறளாசான்புதை சேறு என்றுரைக்கும் அகராதி படுவம் என்போம் யாம்சந்தைப் பரத்தையைப் பெருங்கடனாளியைப்படுவம் என்பது குழூஉக்குறிகாலாழ் களர் வயற்காட்டைப்படுவப் பத்து என்னும் நாஞ்சில் தமிழ்எப்பெரும் படுவமும் சுக்காம் பாறையால்கற்குவியலால் மண்ணால் தூரும்அரசியல் அதிபர்கள் ஆழ்மனப் படுவமோதூர்ந்தே போகா தூர்க்கவும் ஆகாபாதாளம் ஏழினும் கீழ் சொல் அழியும் இடத்தில்அவர்தம் படுவம் … Continue reading

More Galleries | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

அல்லல் என் செயும் அருவினை என் செயும்?

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் ஊடகத்தார் படும் இன்னல்உரைக்க ஒண்ணாதுஅல்லில்லை பகலில்லை அலுப்பொன்றில்லைபெற்றோர் மனையாள் தம்மக்கள்தறுகண் நினைப்பில்லைஅவனன்றி ஓரணுவும் அசையாதுஎன்பது போல் எவ்விடத்தும்நீக்கமற நிறைந்திருக்கும் பணிகொங்கைஶ்ரீ உண்டது செரிக்காமல்மூன்றாம் முறை வெளிக்குப் போனால்அங்கே இருக்கணும்!தலைவனின் வைப்பாட்டி மகளின்மாமியார் ஓட்டுநர் நாக்கில் புண்ணாம்அங்கே நிற்கணும்!மந்திரி கொழுந்தியாள் நாத்தனார்அம்பலம் சென்று பொங்கல் வைத்தால்அங்கே கிடக்கணும்!ஶ்ரீகோதண்டம் மைத்துனர் விரல் நகம்பெயர்ந்து வைத்தியம் பார்க்கஅமெரிக்க … Continue reading

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

குருணைக்கஞ்சி நாளிதழ்

This gallery contains 4 photos.

More Galleries | பின்னூட்டமொன்றை இடுக

நோய் முனைதல்

This gallery contains 1 photo.

விடாக்காய்ச்சலுக்கு மருந்து கண்டாயிற்று! விலை, வினியோகம், இருப்பு, தரகு, யாவும் தீர்மானித்தாயிற்று! அரச குலங்களின் பங்கு உரைத்தாயிற்று! அறுவடை நடக்கும் கம்பலை இன்றி! இனி நோய் பரப்புதல்… நாயோ, காகமோ, பகல் கொசுவோ காற்றோ, நீரோ, மாசுத் தூசோ உத்தேச மார்க்கம் உறுதிபடல் வேண்டும்! ………………………………………………………..நாஞ்சில் நாடன்..2019

More Galleries | 1 பின்னூட்டம்

அச்சமேன் மானுடவா?

This gallery contains 2 photos.

தன் தனிப் பேச்சில் சொல்பவற்றை பகிரங்கமாக எழுதுகிறவர், தான் உலகில் எதிர்பார்க்கும் அறங்களைக் கெடுக்காத வகையில் பெரிதும் வாழ்பவர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். தன்னிடம் கூட தன்னுடைய இதுநாள் வரையிலான வாழ்க்கையின் சுவடுகளால் பாரபட்சம் இருக்கக்  கூடும் என்கிற தெளிவு உள்ளவர். நமக்கும் காழ்ப்புகள் உள்ளன, கட்டுப்படுத்தும் மனச் சாய்வுகள் உள்ளன என்பதை அறிந்தவர். … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இது நம் நாடு!

This gallery contains 1 photo.

மக்களே! குளம் தூரெடுங்கள், வீடு பெருக்குங்கள், சாலை செப்பனிடுங்கள், சாக்கடை தள்ளுங்கள், பேருந்துப் பழுது நீக்குங்கள், மருத்துவமனை கழுவுங்கள், பள்ளி இடிபாடு செப்பனிடுங்கள், மாணவருக்கு வகுப்பெடுங்கள், நெரிசலை நெரிப்படுத்துங்கள், இருட்டில் விளக்கேற்றுங்கள், இருட்டை  கண்காணியுங்கள், பழுதான பாலம் பராமரியுங்கள், கோயில் பேணுங்கள், கடவுள் சிலை காவல் செய்யுங்கள், தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் தீர்ப்பெழுதுங்கள்! அரசு என் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கையறு நிலை

This gallery contains 1 photo.

மாக்கடல் யாவும் பாலை ஆயின இமையம் சரிந்து சரளையாய்க் குவிந்தது கங்கை முதலாம் நதிகள் வறண்டன காயல் ஏரி கிணறெலாம்  தூர்ந்தன தமிழ்த்தாய் ஆனவள் முழங்கால் மடக்கி மண்டியிட் டமர்ந்து கொடுவாள் செருகித் தற்கொலைப் பட்டாள்

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அகர முதல…

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

இல்லை, இல்லை, இல்லவே இல்லை!

This gallery contains 1 photo.

மது வேண்டி எவனிடமும் இரந்தேனில்லை எவள் நிதம்ப வாசனைக்கும் விரைந்தேனில்லை கூலிக்காய் எவரையும் நான் புகழ்ந்தேனில்லை சலுகைக்காய் குய்யமெதும் தாங்கவில்லை முன்னுரைக்கும் மதிப்புரைக்கும் அலைந்தேனில்லை தமிழ்த்துறையின் தாழ்வாரம் உருண்டேனில்லை பதிப்பாளர்முன் குனிந்து நின்றேனில்லை விருதுக்காய் பரிசுக்காய் நடந்தேனில்லை சுயசாதி இருக்கைக்காய் நச்சவில்லை சவத்துக்குத் தேசக்கொடி உவந்தேனில்லை எவர்காலும் நக்குவதெம் தமிழும் இல்லை .

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நெஞ்சிலே நிறுத்து!

This gallery contains 1 photo.

எனவே சற்றே இரக்கமுடையவராய் இரும்! பழிபாவம் அஞ்சும், ஆண்டவனையும் அறத்தையும் எண்ணும்! கலப்படத்தில் ஊழலில் ஊழியத்தில் மலையில் காட்டில் மணலில் கனிமத்தில்  சாராயத்தில் வைத்தியத்தில் கல்வியில் தரகில் அடித்து மாற்றியது போதுமென்று ஆறு மனமே! சற்றே தேறு மனமே!   கண்மணிகாள்! உடன் பிறப்புகளே! இனமானச் சொந்தங்களே! ஒன்றை நீ நெஞ்சில் நிறுத்து!   பத்தாயிரம் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

அசரீரி

This gallery contains 1 photo.

அசரீரி (நாஞ்சில் நாடன்) சாவகம், புட்பகம், இமய வரம்பு எல்லாம் கடந்த எம் தாதையர் முது சொம் வேலி இல்லை, காவல் இல்லை பயிர்கள் இல்லை, விளைச்சலும் இல்லை நெருஞ்சி, அருகு, எருக்கு, குருக்கு கள்ளி, காரை, பாதாள மூலி பல்கிப் படர்ந்தன நாகம் ஊர்ந்தது, சேரை விரைந்தது அரணை, ஓணான், எலிகள் ஓடின அவயான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

வாகீசமும் வயிற்றுப் பாடும்!

This gallery contains 1 photo.

சாதிச் சங்கங்கள் தத்தெடுக்கின்றன தம் படைப்பாளரை முற்போக்கு முகாமெலாம் தத்தம் உறுப்பையே முன்மொழிகின்றன மதவாத எழுத்தும் மதங்களின் அரணில் மகிமைப்படுவன நட்புக் குழாம் எலாம் தன்னினம் பார்த்தே பல்லக்கு சுமக்கும் உன்னத மானுடப் பண்பெலாம் பேசி கட்சித் தலைவர் காலடி மண்ணை நெற்றியில் நீறென நீளப் பூசுவர் இச்சகம் உரைக்கும் பங்குதாரரை வாராது வந்த மாமணி … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்வில் ஒரு பகுதி

This gallery contains 2 photos.

விமான தளத்தில் இரயில் நிலையத்தில் பேரூந்து முனையத்தில் தலமைச் செயலகத்தில் ஆட்சியர் வளாகத்தில் தலைவர் வீட்டில் காவல் நிலையத்தில் நீதி மன்றத்தில் சாலை சிக்னலில் கோயில் முன்றிலில் மருத்துவமனையில் மின் மயானத்தில் டாஸ்மாக் கடையில் உணவு விடுதியில் கொட்டகை வாசலில் ரேஷன் கடையில் ஏ.டி.எம் வரிசையில் எப்போதும் ஒரு கூட்டம் காத்துக்கிடக்கிறது வாழ்நாளில் ஒரு பகுதி. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வாசிப்பு

வாசிப்பு வாழ்நாள் எழுத்து! பத்து தொகை நூல் வெளியீட்டரங்கம் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் புரட்சி, இமையம், சிகரம் மேடையில் வலிய தொழிலதிபர் முதற்படி பெற்றார் எத்தனைக் கோடி செலுத்தாக் கடனோ! இரண்டாம் மூன்றாம் நான்காம் படிகள் சிறுகடன் பெற்ற சிறு தொழிலதிபர் அரும் பிறப்பெடுத்த ஆறுபேருக்கு அன்பளிப்புப் படிகள் வாசிக்க வேண்டும் அதற்க்கு வாங்கவும் வேண்டும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே

This gallery contains 2 photos.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே! நாஞ்சில் நாடன் ———————————————- எம்.எல்.ஏ. மகனா? முந்திச் சென்ற எந்தப் பயலையும் சுட்டுக் கொல்லலாம் சினிமா நடிகனா? நடைபாதை துயிலும் நலிந்த மனிதனை நசுக்கிப்போகலாம்! சின்னத் தலைவனா? எதிர் தொழிற்கூடம் ஊழியரோடும் எரித்து அழிக்கலாம்! கோடிகள் குவித்த அமைச்சன் ஊழலா? நாற்பத்தெட்டாண்டுகள் விசாரணை நடக்கும்! பதினாயிரம் கோடி அரசை ஏய்த்தால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பித்தப்பூ

This gallery contains 1 photo.

பித்தப்பூ பங்கயப் பூ நாறும் நயந்து இனித்த சுண்டு அதனில் பதியாத முத்தப்பூ மூச்செறிந்து சொல் களைந்து வாடாது காற்றில் பித்தப் பூவாய் கலந்து அலையும் …………………………………………………………நாஞ்சில்நாடன்

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

இறையும் மறையும்

This gallery contains 2 photos.

சரஞ்சரமாய் பூத்து இலை உதிரக் காத்து மஞ்சட் பாறையாய்த் தெளிந்து சரக்கொன்றை கண்பட்ட தருணம் கொன்றை அணிந்தானை நினைவூட்டிற்று கங்கை ஆற்றைப் புனைந்தானும் அம்புலியின் கீற்றை அணிந்தானும் மேனி நெடுக கீற்றை வரைந்தானும் வல்லரவின் ஆரம் சுமந்தானும் கற்றைவார்ச் சடைமேல் பனி மெளலி கவித்தானும் கயிலையில் மட்டுமே இருக்கக் கட்டுரை இல்லை. நெருஞ்சியும் தும்பையும் அரளியும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழினம் – கவிதை

  தமிழினம் வெள்ளூமத்தைப் பூ நிமிர்ந்து சூரியனில் விடாய் அடங்கும் பாதம் பதியாமல் பார்த்துப்போம் சிறுமியரை மஞ்சட் சிறுநெருஞ்சி காதில் அணிந்து போகக் கொஞ்சும் பெரும்பித்தன் சடைமரத் தவமியற்றும் வெள்ளெருக்கு அதன் நீல நிறப் பங்காளி ஏளனமாய் சற்றுச் சிரிக்கும் தங்கரளி வெள்ளரளி செவ்வரளி மாதர் சூடிக் கொடுக்காத தெனினும் சுடர்கொடிகள் பூச்சிமுள்ளின் ஊதா மலர்க்குழலில் … Continue reading

Posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள், வழுக்குப் பாறை கவிதைகள் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வழுக்குப் பாறை – முன்னுரை

This gallery contains 4 photos.

நூறுதரம் முன்பே கூவிச் சொன்னதுதான், ‘முதலில் நான் கவிதை வாசகன்’ பத்து பன்னிரண்டு பிராயத்தில் மோந்த வாசனை, செவிப்பட்ட இசை, நாப்பட்ட ஏழாம் சுவை கவிதை அனுபவம்…… (நாஞ்சில்நாடன்)

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஊர்தி

This gallery contains 2 photos.

  பள்ளிப் பருவத்தில் கால் நடை இறைஞ்சினால் ஏற்றும் பார வண்டி கல்லூரி போய் வர பொடி நடையும் நகரப் பேருந்தும் – வழித்தடம் 33 பதினெட்டு ஆண்டுகள் பம்பாயில் மின் தொடர் வண்டி மாற்றாலாகி வந்த கோவையில் சின்னாள் 1A, 1C, 1E நெடுநாள் 43, 43A, S-18 அதன் பின் 95, 114, … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

கூற்றம் (கவிதை)

This gallery contains 2 photos.

தொல் கடலின் வேங்கைச் சுறா ஆழம் அறியும் வேழம் அறியும் கானில் பூத்த புளிய மரம் கொடுங்காற்றின் குலப்பாடல் கூளம் அறியும் வல்லரவின் உட்செவிகள் மேளம் அறியும் கோளும் அறியும் கொல் கூற்றின் கொக்கரிப்பு நீயறிய மாட்டாயோ உடன் பிறப்பே ! ரத்தத்தின் ரத்தமே ! தோழனே ! தொண்டனே ! தலைவன் யார் கயவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக