This gallery contains 7 photos.
நான்கு தமிழ்ச் சொற்கள் கொண்டது இந்தக் கட்டுரைத் தலைப்பு. பண்டு, அன்று, பட்டினம், காப்பு என்பவை அவை.
This gallery contains 7 photos.
நான்கு தமிழ்ச் சொற்கள் கொண்டது இந்தக் கட்டுரைத் தலைப்பு. பண்டு, அன்று, பட்டினம், காப்பு என்பவை அவை.
This gallery contains 1 photo.
இற்றைக்குச் சற்றொப்ப 45 ஆண்டுகட்கு முன்பு, யாம் மும்பையில் வேர் பிடிக்க முயன்று கொண்டிருந்த காலை, ஒரு சனிக்கிழமை பின்மாலையில், அப்போது மும்பையில் வருமான வரித்துறை அதிகாரியாகப் பணி புரிந்த, பின்னாளில் கேரள மாநில கேடர் I.A.S. அதிகாரியான, ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘இராமானுசன்’ ஆகிய திரைப்படங்கள் இயக்கிய, நண்பர் ஞான. ராஜசேகரன், எம்மை B.A.R.C. … Continue reading
This gallery contains 6 photos.
எந்த விருதானாலும் ஏதாகிலும் மனக்குறை எவருக்காவது இருக்கும். அது நியாயமானதாகக்கூட இருக்கலாம். விருது வழங்குதல் எனும் சடங்கில் , நடுநிலை என்ற சொல் 24காரட் தங்கம் அல்ல. அது 18காரட்டுக்கு பழுதில்லாமல் இருந்தால் போதுமானது என்று நினைப்பவன் நான். ஈயமும் பித்தளையும் விருது பெரும்போதுதான் சங்கடங்கள் ஏற்ப்படுகின்றன. ஈயத்தின், பித்தளையின் செல்வாக்கை அஞ்சியஞ்சி முனகல்களும் கேட்கின்றன.
This gallery contains 4 photos.
ஐங்குறுநூறு நூலில், ஓரம்போகியார் பாடல்வரி சொல்லும் ‘நன்று பெரிது சிறக்க! தீதில்லாகுக!’ என்று. பொருள் சொல்ல வேண்டும். நன்மை பயப்பவை பெரிதும் ஓங்கட்டும்! தீமை அழிந்து மாயட்டும்!…. (நாஞ்சில் நாடன்)
This gallery contains 2 photos.
‘அக்கடா என்றாலும் விடமாட்டேன், துக்கடா என்றாலும் விடமாட்டேன், தடா! உனக்குத் தடா!’ என்றொரு உயர்தனிச் செம்மொழித் தமிழ்ப்பாடல் கேட்டது நினைவிருக்கலாம். எனது மேற்கோளில் பிழையும் இருக்கலாம். தமிழில் பெயர் வைத்த சினிமாவுக்கு வரி விலக்குத் தந்து மொழி வளர்க்கும் உத்தமத் தலைவர்கள் வாழும் தேயம் இது. நேயமற்று நாம் பேசலும் ஆகா! அன்றே மனதில் தோன்றிய … Continue reading
This gallery contains 4 photos.
புகழ்பெற்ற நடிகர் எவரும் இறந்து போகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் எத்தனை கோடிகள் கருப்புப் பணம் வாங்கி இருப்பார்? எத்தனை கோடிகள் வரி ஏமாற்று செய்திருப்பார்? எத்தனை ஒழுக்கக் கேடுகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்திருப்பார்?. ‘அந்த நாள் இந்தியாவுக்கு இருட்டாக விடிந்தது’ என்று தலைப்புச் செய்தி போடும் நாளிதழ்கள். ‘இந்திய வானில் நேற்றிருந்த வயிரத் தாரகை … Continue reading
This gallery contains 7 photos.
கவிதையொன்று வாசித்தேன்! தன்பலம் கொண்டு நடமாடித் திரிகிற நிலமை கெட்டு முதுமை வந்து குறுகி, காலன் கண்முன் நின்று சொடக்கு போடும் பருவத்தில், பெற்ற பிள்ளைகளும் கட்டிய மனைவியுமே முகம் சுளிப்பார்கள். வெற்றிலை பாக்கை உரலில் போட்டு இடித்து, வாயில் ஒதுக்கி குதப்பிக் கொள்வது இருக்கட்டும், இரண்டு இட்லியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கரண்டியில் கோரி … Continue reading
This gallery contains 1 photo.
இமயம் குறித்த என் கட்டுரை வாசித்த ‘சொல்வனம்’ வாசகர் மீனாட்சி பால கணேஷ், ஐயம் ஒன்று எழுப்பினார். மலயம் என்று எழுதுவது தானே சரி! ஏன் சிலர் மலையம் என்று எழுதுகிறார்கள் என்பது ஐயத்தின் மையம். மய்யம் என்றும் எழுதுவதைத் தமிழ் இலக்கணம் அனுமதிக்கிறது. மலை எனும் தமிழ்ச்சொல், மலை+அம் ஆகும்போது மலையம் என்ற சொல் … Continue reading
This gallery contains 8 photos.
நாம் ஏன் ஒரு மிகப்பெரும் பொக்கிஷத்திலிருந்து எடுத்து செலவழிக்க இப்படி கஞ்சத்தனம் செய்கிறோம்? இந்தக் கேள்விதான் இந்தக் கட்டுரைத் தொகுப்பில் நாஞ்சில் நாடன் நம்மை நோக்கி வீசிடும் முக்கியமான, அடிப்படையான கேள்வி. ஒரு கவிதையில் தமிழ்க் கவிஞனை சோற்றுக்கு செத்தாலும் , சொல்லுக்கு சாகாதே என்று எழுதியவர் அவர். நாய் பெற்ற தெங்கம் பழம்போல நம்மிடம் … Continue reading
This gallery contains 5 photos.
பெண்ணழகை வியப்பது, எம்மொழியிலும், எக்கலையிலும், எப் பண்பாட்டிலும், மரபு, சொற்களால், ஓவியங்களால், சிற்பங்களால், அழகு விதந்தோதப்பட்டிருக்கிறது. இன்றைய பெண்ணியப் போக்கின் பார்வையில் அன்றைய கலைமனத்தை புரிந்துகொள்ள முயல்வதில் சிரமங்கள் உண்டு. பெண்ணழகைப் போற்றியதை இன்றைய விடுதலை பெற்ற மனம் விரும்பவில்லை என்பதை நாமறிவோம். என்றாலும் பெண் விடுதலைப் போராளிகளால் இன்றும் திரைப்படங்களிலும், அச்சு ஊடகங்களிலும், … Continue reading
This gallery contains 7 photos.
பேரூந்தில் ஏறி வீடு திரும்பும் வழியில் ஒரே பிரதோஷ சிந்தனை. எந்த சமரசமும் இன்றித் தமிழன் எல்லா வேலைகளையும் எப்படி எந்த மனச் சங்கடமும் இன்றிச் செய்கிறான்? அட்சய திரிதியைக்கு நகைக்கடை வாசலில் வரிசையில் நிற்கிறான். பிரதோஷத்துக்கு சிவன்கோவில் பிரகாரத்தில் பழி கிடக்கிறான். எத்தனை மெகாத்தொடர் நாடகங்கள் ஆனாலும் தொலைக்காட்சி பெட்டி முன் சலிப்பின்றி அமர்ந்திருக்கிறான். … Continue reading
This gallery contains 1 photo.
மாக்கடல் யாவும் பாலை ஆயின இமையம் சரிந்து சரளையாய்க் குவிந்தது கங்கை முதலாம் நதிகள் வறண்டன காயல் ஏரி கிணறெலாம் தூர்ந்தன தமிழ்த்தாய் ஆனவள் முழங்கால் மடக்கி மண்டியிட் டமர்ந்து கொடுவாள் செருகித் தற்கொலைப் பட்டாள்
This gallery contains 1 photo.
திருப்பெருந்துறையில் மாணிக்க வாசகர் அருளிய சிவபுராணத்தில் இரண்டாவது அடி, ‘இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!’ என்று போற்றுகிறது. இமை தட்டுகிற, இமை கொட்டுகிற, இமை அடிக்கிற, இமைக்கிற நேரம். இமைப் பொழுதும் கூட, என் நெஞ்சத்தில் இருந்து நீங்காமல், நிரந்தரமாக உறைபவனின் திருவடிகள் போற்றி என்பது பொருள். இமைத்தல் என்றாலும் இமை கொட்டுதலே. … Continue reading
நாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம இந்தியச் சூழலில், குறிப்பாகத் தமிழ்ச்சூழலில், நாட்டார் கலை வளர்ச்சி என்பது ஒருவகையில் மறைவாக இருந்த சாதிய மேட்டிமைகளை, பெருமிதங்களை பொதுவில் வெளிப்படுத்த வழிவகுத்தது என்னும் கருத்து குறித்த உங்கள் பார்வை என்ன? மாரி முருகன் மற்ற எக்காலத்தை விடவும் சாதியம் இன்று முனைப்பாக அல்லவா இருக்கிறது? இதற்கு அரசியல் தலைவர்களும், … Continue reading
This gallery contains 1 photo.
மது வேண்டி எவனிடமும் இரந்தேனில்லை எவள் நிதம்ப வாசனைக்கும் விரைந்தேனில்லை கூலிக்காய் எவரையும் நான் புகழ்ந்தேனில்லை சலுகைக்காய் குய்யமெதும் தாங்கவில்லை முன்னுரைக்கும் மதிப்புரைக்கும் அலைந்தேனில்லை தமிழ்த்துறையின் தாழ்வாரம் உருண்டேனில்லை பதிப்பாளர்முன் குனிந்து நின்றேனில்லை விருதுக்காய் பரிசுக்காய் நடந்தேனில்லை சுயசாதி இருக்கைக்காய் நச்சவில்லை சவத்துக்குத் தேசக்கொடி உவந்தேனில்லை எவர்காலும் நக்குவதெம் தமிழும் இல்லை .
This gallery contains 6 photos.
பேரகராதி குறிக்கிறது, மண்டி என்றால் கால் மடக்கி முழந்தாளில் நிற்பது என. அதைத்தான் மண்டியிடுதல், மண்டி போடுதல் என்கிறோம். நாம் எவரிடமும் மண்டியிட மாட்டோம் என்று வீர வசனம் பேசி , சில நூறு கோடிக்கும் கையளவு சீட்டுக்கும் மண்டியிடுபவரை நாம் அறிவோம். தமிழ் அரசியல் பண்பாடு பாதாளம் ஏழினும் கீழாய் பாய்ந்து கொண்டிருக்கிறது. மண்டியிட்டால் … Continue reading
This gallery contains 4 photos.
இப்படித்தான் தமிழ் சொன்னார்கள் எம்புலவர்கள். அவர்கள் தம்மைக் கவிக்குடியரசுத் தலைவர் என்று அழைத்துக் கொள்ளவில்லை. நெருப்புடா என்றும், கொளுத்துடா என்றும், சிங்கம்டா என்றும் ஊதிப் பெருக்கிக் கொள்ளவும் இல்லை. சொல்லப் போனால் அவர் பெயர் போலும் அறிய மாட்டோம் நாம்!.
This gallery contains 2 photos.
ஜெயமோகன் “ஏல, அம்பத்தாறு ராச்சியத்து அரமனையும் காக்கைக்க குண்டிக்க கீள தானலே?” டீ குடிக்கப்போன இடத்தில் ஒரு குரல். ஆளைப் பார்க்க விழிகளைச் சுழற்றினேன். வயதான வாட்ச்மேன் கையில் கம்புடன் நின்றிருந்தார். “அப்பச்சி, அப்பம் காவல் நிக்கப்பட்ட எடத்திலே பீயைப் போட்டுவைக்கது நீருதானா?” என்றார் ஆட்டோ ஓட்டுநர். புன்னகையுடன் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். ஆ, கும்பமுனியும் தவசுப்பிள்ளையும் … Continue reading
This gallery contains 9 photos.
இன்று நான் ஆண்டுக்கு குறைந்தது 50,000 மாணவருக்கு உரையாற்றுகிறேன். எட்டுலச்சம் மாணவர், ஆண்டுக்கு சராசரியாகத் தமிழ் பயில்வோர், துணைப்பாடத்தில் , என் சிறுகதை ஒன்றினை வாசிக்கிறார்கள், இருபத்திரண்டு ஆண்டுகளாக. அரசினர் ஆரம்பப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் , தமிழ் வழியில் கற்றவன் நான். நான் வாங்கிய விருதுகள், சுற்றிய வெளிநாடுகள், என் புத்தகங்களில் … Continue reading
This gallery contains 10 photos.
குள்ளமாக, சற்றுக் கனமாக, மீசை இல்லாத வட்ட முகத்துடன் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் நிர்வாகக் குழு அறைக்கும் அலுவலக அறைக்கும் என நடந்து கொண்டிருந்தார். என் முகத்துத் திகைப்பை கண்டாரோ, அல்லது அவரது இயல்போ, ஏறிட்டுப் பார்த்து, முகம் மலர்ந்து, ‘வாங்கோ’ என்றார். பின்னர் அறிந்து கொண்டேன் அவர்தான் பெரியவர் S கந்தசாமி என்றும், … Continue reading