அச்சமேன் மானுடவா?

தன் தனிப் பேச்சில் சொல்பவற்றை பகிரங்கமாக எழுதுகிறவர், தான் உலகில் எதிர்பார்க்கும் அறங்களைக் கெடுக்காத வகையில் பெரிதும் வாழ்பவர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள். தன்னிடம் கூட தன்னுடைய இதுநாள் வரையிலான வாழ்க்கையின் சுவடுகளால் பாரபட்சம் இருக்கக்
 கூடும் என்கிற தெளிவு உள்ளவர். நமக்கும் காழ்ப்புகள் உள்ளன, கட்டுப்படுத்தும் மனச் சாய்வுகள் உள்ளன என்பதை அறிந்தவர். அந்த அறிவே அவருக்கு உண்மையினின்று பிறழாமல் போக வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வையும், அப்பாதைக்கான வெளிச்சத்தையும் அளிக்கிறது.
இக்கவிதைகள் எல்லாம் பிரசாரம் செய்கின்றன. இதுதான் நடக்கிறது, இது நடக்க வேண்டும் என்று இரண்டையும் சொல்கின்றன. இன்றைய நிலையை சமரசங்கள் இன்றி, தன்னுடைய லாப நஷ்டக் கணக்குப் பார்க்காமல் சித்தரிக்கிற இவற்றின் ஒட்டுமொத்த ரசமாகக் கசப்பும், மற்றும் அனைவரின் மீட்சிக்கான கவலை தோய்ந்த அக்கறையும் உள்ளார்ந்த பொறுப்பும் இவற்றில் தெரிகின்றன.
வ. ஸ்ரீநிவாசன்

 

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக