ஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை

எப்போதுமே,,,நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தில் ஒரு அங்கதம் இருக்கும்,,, !
அது,,சமயத்தில் குத்தாலத்துச் சாரல் மழை போல,,பெய்யும்,,,!
ஏன்யா,,,திப்பரப்புன்னு சொல்ல மாட்டியளோ ? என்னு கேட்டிராதிய,,,

சில சமயத்துல,,,,இப்ப,,கன்னியாரி மாவட்டத்துல பெய்த,,கோடை மழையாட்டம்,,,அடிச்சுப் பொழிக்கும்,,,
அடிச்சிப் பொழிக்கிற ஆட்டத்துல,,,,
அங்கதத்துக்கே அங்கதம்,,,,வந்து,,சன்னதம் வந்துரும்,,,,
சாமீ கொண்டாடியாட்டு ஆராசனை வந்து ஆடுக ஆட்டத்தைப் பார்த்தா ? என்னய்யா? மனுசன்,,இந்த கிழிகிழிக்கானே ?
எவனும்,, எந்த அரசியல் வியாதியும்,,, ,நேர்ல ஏசுனா மாதிரியும்,, தெரியலேயேன்னு,,,தோணும்,,,!

ஆனா,,,
நேர்ல ஏசாத பயக்க,,,எல்லாம்,,குறுக்குல கத்தியச் சொருவ்விட்டான்னும்,,
முதுகுல,,,ஈட்டியை எறக்கிட்டான்னும்,,,
அவரோட,,எழுத்தைப் படிக்கும்,,போதே,,,தெரிய ஆரம்பிச்சிரும்,,,

அங்கதமுன்னு,,சொன்ன்னியே,,,?
ஆதாரு,,,,
அங்கதன்,,வாலிக்க,,மவனா ? ந்னு,,கேட்ட்ராதிய,,,?

அங்கதமுன்னா,,,,,
வேண்டாம்,,,,
தமிழ்,,எலக்கணக் கிளாசு,,எடுத்தாலும்,,பிரயோசனமில்லேன்னு,,,தெரிஞ்சதுக்கு அப்புறமும்,, ஆன் லைன்லயாவது,,கிளாஸ் ,,எடுத்தே,,,தீருவேன்னு,,நின்னா,,,? அப்பூரம்,,எனக்கெல்லாம்,,வக்காலத்து வாங்க,,,எந்த வக்கிலும்,,வர மாட்டா,,

செரி,,,
இப்ப,,,எதுக்கு,,,
கழுத்தைச் சுத்தி,,,மூக்கைத் தொடுகன்னு,,சொல்லும்,,பிள்ளாய்,,ன்னு,,கேட்குதியளோ ?

ஆவநாழி,,,,ன்னு,,ஒரு,,,இதழ் படிச்சேன்,,,
இதழுன்னா? கடிக்கணும்,,பிள்ளாய்,,, என்கிற குரலும்,,கேக்கு,,கேக்கு,,,
செத்த நேரம்,,பேசாம,,,குறுக்குச்சால் ஓட்டாம,,இருந்தா,,,,நானும்,,,
நாஞ்சில் நாடனோட,,,தமிழைப் பத்தி,,,நாலு வார்த்தைச் சொல்லிருவேன்,,,

எப்பொழுதும்,,,,
தான் சொல்ல நினைப்பதை,,,,ஒவ்வொரு எழுத்தாளனும்,,,ஏதாவதொரு கதாபாத்திரத்தின் வழியாகச் சொல்லுவார்கள் ! சொல்லி விடுவார்கள் !
அதே போலத்தான்,,,,,,,
வீராணமங்கலத்து மூடிப் பொதிஞ்ச வாழக் குலை போல வாழ்கிற கும்பமுனியும்,,,,நாஞ்சில் நாடனுக்கு,,,,,

ஒரு ஏழை எழுத்தாளனாக,,,,கும்பமுனி,,இருந்தாலும்,,,,
குத்தல்,குசும்பில்,,அவரை விஞ்ச,,,நாஞ்சி நாட்டுல,,ஆள்,,கெடையாது,,,
அதனாலேயே,,,,,
எந்த அரசாங்கங்களின் பதக்கங்களும், பொற்கிழிகளும்,அவருக்கு வாய்க்காமலேயே,,,?
ஆனால்,,
அதற்கெல்லாம்,,அஞ்சுகிற மனுசனுமில்ல,,, கும்பமுனி,,,

ஒவ்வொரு எழுத்தாளனின் எழுத்திலும்,,,அந்த எழுத்தாளன்,,,ஏதாவதொரு கதாபாத்திரத்திற்குள் ஒளிந்து கொண்டிருப்பான்,, !
அப்படி,,,,
நாஞ்சில் நாடன் எழுத்துக்களில்,,கும்பமுனி,,, ஒளிந்து கொள்ளவில்லை,,,வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

பண்டு நடந்த நிகழ்வுகளைச் சொல்லுவதாகட்டும்,,,
தற்சமயம் நடக்கிற நிகழ்வுகளைச் சொல்வதாகட்டும்,,,? அங்கங்கே,,அங்கதச் சொல்லாடல் மலிந்து கிடக்கும்,,,
கண்டோருக்குச் சொர்க்கம்,,! மற்றோர்க்கு,,,,,,,, ?

தற்போதைய கொரானா,,நிகழ்வுகள்,,கூட,,,
தனக்கு தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன்,,,கையைத் தொட்ட,,,அச்சானியம்,,அவரை வாட்ட,,,, பக்கத்து வீட்டு,,மொளவடி இடிச்ச,,காந்தலும்,,,அதன் வெளைவா ,,,வந்த தும்மலும்,,, அவரைப் பாடாப்படுத்துகு,,,

ஊரெல்லாம்,,,தமிழ் வளக்குறோமின்னு,,சொல்லி,,,தன்னை வளர்க்கிற ,,,, வளர்த்துக் கொள்கிற அவலங்கள்,,,,,
சிற்றிலக்கியமென்றால்,,சிறுமை + இலக்கியம்,,என்கிற துறைத் தலைவர்கள் உள்ள பல்கலைக்கழகங்களை,,
உப்பு சப்பு பெறாத காரியத்துக்கு விசாரணை கமிஷன் எல்லாம் வச்சு ,,,சர்க்கார் காசைக் கரியாக்குகிற கூத்து,,, எல்லாம்,,பார்த்த பரிதவிப்பு,,,,,,,,,
அந்த கிழவனுக்கு !

போற போக்குல,,கிழவன்ன்னு,,,சொல்லிட்டீரு பார்த்தியா ? ந்னு சொல்லிராதீங்கப்பு,,,
கிழவன் என்றால்,,,, உரிமையாளன்,,,தலைவன்,,என்றெல்லாம்,,பொருளுண்டு மக்களே,,,
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண்பெருங் கானத்துக் கிழவன்
தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே

மோசி கீரன் பாடிய பாட்டு,,,,
ஒற்றை வார்த்தையச் சொல்லிட்டு,,, அதுக்கு விளக்கமும்,,கொடுக்கிற,,பாரூ,,,,?
எல்லாம்,,,பூவோடு சேர்ந்த நாரும்,,,மணக்கணுமில்லா ? அதான்,,,

இன்றைய நாட்டு நடப்பு,,தெரிந்தும், தெரியாதவராக,,, ? கும்பமுனி,,தன் உதவியாளர் கண்ணு பிள்ளை மூலம்,,தெரிந்து கொள்வதாக,,,,
கும்ப முனி என்னும்,,எழுத்தாள ஏமரா மன்னனுக்கு இடித்துரைக்கும்,, இடிப்பாராக,,கண்ணு பிள்ளை,,,,,,
அவரின் கேள்விகள்,,,தான்,,,, கும்ப முனியையும்,,பதற வைக்கும்,,,
சில நேரங்களில்,,பதில் சொல்ல,,இயலாத நிலையில்,,,, நாணுவார்,, அந்த நாணத்தை,,மறைக்க,,,வாலில்லை,,, கால்களுக்கிடையில் நுழைக்க,,,? என்றபடி,,நாணுவார்,,, அந்த நாணமே,,,, அவரின் பலமும்,,கூட,,,,

இத்தகைய தமிழ் புலம்,,,!
இல்லையில்லை,,தமிழ்ப் பலம்,,கொண்ட,கும்ப முனியை ஆரிய சங்கரன் என்கிற நூத்தைக் கெடுத்த குறுணியாக, ஊரையான்,,, செம்மொழிப் பாதுகை விருது பெற சிபாரிசுக் கடிதம்,,, வேண்டி வருகிறார்.

கும்ப முனிக்கு பத்திக் கொண்டு வருகிறது,,,
பணத்தால் வீழ்த்தி விட முடியுமென்கிற மனிதர்கள் மலிந்த தேசத்தில்,,,, தான் அப்படியாப்பட்டவன்,,இல்லை,,என்கிறார்,,

அதெல்லாம்,,இங்கெ கிடைக்காது,,வே,,,,,நாலு கடை தள்ளிக் கேட்டுப் பாரும்,,,,, கெடைச்சாலும்,கிடைக்கலாமென்கிறார்.

ஆரிய சங்கரன் என்கிற கரை வேட்டி ஆரிய சங்ஹாரன் என்கிற தன் பேருக்கான செயலை,,எப்படிச் செய்வதென நினைக்கவாரம்பிக்கிறார்…

ஒரு சின்ன துளியைப் பற்றிக் கொண்டு,,நாட்டு நடப்பை,,
ஊர் நடப்பை,,, உள்ளூர் அரசியலை,,,நாட்டு அரசியலை,, கொஞ்சம்,,புண்னைக் கிள்ளுவது போல,,கிள்ளி விட்டு,,,ஆற வைக்கிற சொக்குப் பொடி வைத்தியராக,,,, நாஞ்சில் நாடன்,,மிளிர்கிறார்..

நாட்டு நடப்பினைக் கவனித்தோர்க்கெல்லாம்,,,,
நாஞ்சிலின் எழுத்து ருசிக்கும்,,, ! அடிக்கரும்பா,,,? நுனிக்கரும்பா ? என்பதெல்லாம்,,,
நாம,,எப்படி,,?
நாட்டு நடப்பைக் கவனிச்சோம்,,,, என்பதனைப் பொறுத்தது,,
எனக்கு,,,
ஆவநாழியின் ஆரிய சங்கரன் அடிக்கரும்புச் சுவை,,,, !
அந்த சுவையின் லயிப்பில்,,,, சிந்திய சொற்கள்,,,இங்கே,,

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், கும்பமுனி and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக