நாஞ்சில் நாடன்
..
அங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.
’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;
ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி!’
எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
S.i.சுல்தான்
தலைப்பில் ‘உண்ணற்க்க கள்ளை’ என்று இருக்கிறது. உண்ணற்க கள்ளை என்பதே சரி என்று நினைக்கிறேன்
இந்த பதிவுடன் நான் நூறு சதமானம் ஒத்துப்போகிறேன்.தமிழ் நாட்டில் குடிப்பது ஒரு கேவலம்தான். ஆனால் வாஙக சார் பாண்டிச்சேரிக்கு!. சுததமான சரக்கு! நல்ல மரியாதை!.வெறும் சரக்குக்கு உண்டான காசும் மற்றும் பருப்பு அல்லது பொட்டலம் பின்னே தண்ணீர்/ சோடா இதற்குண்டான காசிருந்தால் போதும்,சரவணபவனில் பொங்கல் வடை காபி சாப்பிட்டு வருவது போல் திருப்ப்ப்ப்ப்தியாய் வரலாம்.ஆனாலும் நான் குடிப்பது வீட்டில் தான் தற்சமயம். கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என் குடி அனுபவம்,விரைவில் விட்டு விட நிர்பந்திக்கும் என் உடல் நிலை! ஆகவே விரைவில் குடியிலிருந்து ஓய்வு பெறவுள்ளேன் என்பதை மகிழ்வுடன் மற்றும் வருத்ததுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.
சிந்திக்க வேண்டிய விடயங்கள்
இதை மக்கள் உணரவென்டும்,இத பின் உள்ள அரசியலை அறியவெண்டும்
அன்புள்ள நாஞ்சில் சார்
நேற்று மதுபானக் கடை என்ற திரைப்படம் கண்டேன். அதன் இறுதியில் உங்களது இக்கட்டுரையை அடிப்படையாகக் கொண்டே அத்திரைப்படம் எடுக்கப்பட்டது என்று அறிந்தேன். ‘ சாராயமும், கள்ளும் எங்க கொலசாமிடா. அதக்குடிக்க உடாம பண்ணிட்டீங்க. உங்க நாத்தத்தச் சுத்தம் பண்ணத்தான் இந்த நாத்தத்தைக் குடிக்கிறோம்’ என்று அந்தச் சகோதரன் வெகுண்டெழும்போது அழுது விட்டேன்.
அறச்சீற்றம் என்பார்களே , அதை ஏற்படுத்தியது உங்கள் கட்டுரை. மது விலக்கை அமல்படுத்த விருப்பமோ, வலுவோ அற்ற அரசுகள், எளிய குடியானவனின் அடிப்படை உரிமையாக உள்ள உற்சாக பானமான கள்ளை அவனுக்கு மறுத்தல் எங்கனம் நியாயம்? அரசை எதிர்த்து வழக்குத் தொடர முடியாதா இவ்விஷயத்தில்?
உங்களை விஷ்ணுபுரம் விழாவில் சந்தித்தது மறக்க முடியாத மகிழ்வான நிகழ்வு.