சலோ சென்னை…

.
நாஞ்சில் நாடன்
.
.
பொந்தும் உடைப்பும் அந்த சாலை
பிய்ந்த இருக்கையும் துருப்பிடித்த தகரமும்
ஒழுகலும் இல்லா
தாள் தள ,சொகுசு , தொடர் , குளிர் பதன
விரைவு , நகர்ப் பேருந்து
.
கசரும் குபையும் சாய்க்கடைத் தேங்கலும்
தவணையில் சாகும் கத்திருப்பும்
முற்றல் நோய் மாந்தரும் அற்ற
பொது மருத்துவமனை வளாகம்
.
மலக்குடல் நீள் புழு மிதப்பும்
உள்ளாடையில் துள்ளி விழும் தெறிப்புழுவும்
வெருட்டாத பொதுக் கழிப்பிடம்
.
அல்லில் ஆறு பகலில் ஆறுமாய்
பன்னிரு மணிக்கூர் மின் தடை அவல
சாபம் இலாத
நாழிகைக்கும் குறைவான மின் தடை
.
 உயர்கல்விச் சாலை
தமிழின் உயிர் காக்கும்
திரைத் தொழிற் கூடம்
யாவும்
இனிதே
அருளப் பெற
எனதருமைக் கிராமத்து மானுடனே
சலோ சென்னை…
.
.
.
ஆற்றில் வரத்தில்லை
கால்வாயில் கசிவில்லை
குளத்தில் இருப்பில்லை
கிணற்றின் ஊற்றுக்கண் திறப்பில்லை
.
விவசாயம் நாளும் சுயக்கொலை நடத்தும்
விதைத் தானியம்
இராக் கஞ்சி வெந்து கொண்டிருக்கும்
.
விளைச்சல் இல்லை
விளைந்தாலும் விலையில்லை
சிறுதொழில் தொடர வாய்ப்பில்லை
.
விசைத்தறி , குறுதொழில் , பட்டறை
காலால் மிதித்தோ
கையால் சுழற்றியோ
ஓட்டலாம் உடப்பில் தெம்பிருந்தால்
வருவாய் இல்லாமையால் வணிகமும் இல்லை
சாணம் இலாமையால் முன்றில் தெளிப்பும்
இல்லை மாதோ!
.
பிச்சை புகினும் வயிற்றுத் தீ
அணைக்க
சுவரும் கூரையும் அற்ற
நடைபாதை வாழ
.
சலோ சென்னை…
தருமமிகு சென்னைக்கு
தமிழ் வளர்க்கும் சென்னைக்கு
அறம் செழிக்கும் சென்னைக்கு
.
சலோ பாய்!
ஜல்தி சலோ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
.
.
.
குறிப்பு: கவிதையின் தலைப்பு தமிழில் இல்லாத காரணத்தால் , இதற்கு வரிவிலக்கு மறுக்கப்படுகிறது.
.
.
நன்றி: தட்டச்சு உதவி….பாலா.. சிங்கப்பூர்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to சலோ சென்னை…

  1. Arun சொல்கிறார்:

    கவிதையின் தலைப்பு தமிழில் இல்லாத காரணத்தால் , இதற்கு வரிவிலக்கு மறுக்கப்படுகிறது.
    kalakal

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s