ஏ. கோபால்
‘ஒரு விழாவை கல்யாணம் போல் செய்தான்” என்பார்கள் எங்கள் பக்கம்.
கல்யாணத்தை சங்கமமாக அமையப்பெற்றது யாம் பெற்ற பாக்கியம்!
எம் ஆசான் நாஞ்சில் நாடன் புதல்வி சௌ.சங்கீதாவின் திருமணம், திருமணம் என்றும் உணரப்பட்டது. ஆசான் எழுத்துக்களில் தொனிக்கும் வன்மை பழகுவதில் புலப்படும் மென்மையாய் ! நாகர்கோயில்,நவம்பர் 12,13 தேதிகளில் சொல்லேர் கலைஞர்களின் கோவிலாய் மாறியது எம்மைப் போன்ற வாசக வட்டம் கண்டிராதது.
இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு
என்ற வள்ளுவன் மொழிவழி திருமதி.நாடனுடன், ஆசான் அனைவரையும் முகமலர வரவேற்றார். உடல் உள்ள உபாதைகள் எவர்க்கும் எக்காலத்தும் உண்டு எனினும் சோர்வையும் மீறிய களி, அவர்தம் மக்களை, எழுத்தாள சுற்றத்தை வரவேற்கும் தொனியில் தொரிந்தது. ஒவ்வொரு சிறிய தேவையும் தமிழகத்தின் பல பகுதிகள், ஏன் நாட்டின் பல பகுதியில் இருந்து வந்த விருந்தினர்களின் தேவையை அவர் பூர்த்தி செய்த பாங்கு எம் தலைமுறை மக்களுக்கு விருந்தோம்பலில் ஒரு பாடம்.
ஒரு எழுத்தாளன், தன் சொல், செயல் சிந்தனையில் ஒரு புள்ளியில் செயலாற்றும் போது ஒரு தலைவனாகும் நிலை எய்துகிறான். ஐயா நாடனின், இளைய தலைமுறையைப் பேணும் பாங்கு மனதுக்கு மகிழ்ச்சியையும், பெருமையையும் ஒருசேர அளிப்பது. மனம்போல் இருதினங்களும் திருமண மண்டபம் நிறைந்து வழிந்தது.
முதல்நாள், திருமணம் வரவேற்பில் தொரிசனங்கோப்பு ஆயுர்வேத மருத்துவர் எல். மஹாதேவன் ஏற்பாட்டில், காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான்களான நாதசுர இசைமாமணிகள், சின்னமனூர், எ.விஜய் கார்த்திகேயன் இடும்பாவனம் யு.விஇளையராஜாவின் நாதசுர ஓசையில் (நாத) தேவன் வந்து பாடினான் என்பது மிகையல்ல. சிறப்புத்தவில் கலையரசு இடும்பாவனம் கே.எஸ்.கே.மணிகண்டன், மற்றும் தவில் சாம்ராட் மலைக்கோட்டை எஸ்.செந்தில்குமாரிரின் தவிலோசை மென் கிண்கிணி நாதமாய் துவங்கி கோடையிடி எனப் பாடலுக்கேற்ப சஞ்சாரித்தது. ‘என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்!” என்று டி.எம்.எஸ் அண்ணா குழைந்தது நாதசுர ஒலியில் ரிரிங்காரித்தது. ‘சிங்கார வேலனே தேவா” பாடல் நாதசுரத்தில் சிகரம் தொட்டது.
ஒரு புறம் இசைவெள்ளம், மறுபுறம் இலக்கிய நய வெள்ளம். நெல்லை கண்ணன் ஐயாவின் தமிழ்த் தண்மை எம் போன்றவர்களுக்கு நேரடி அனுபவம். ஐயாவின் ‘சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா” என்ற பாரதி பாடலுக்கான விளக்கம் அருமையிலும் அருமை. நெல்லை ஐயாவும், பாரதி மணி சாரும் அவைக்கு அணி சேர்த்தனர்.
இயற்கைப் பூங்காவாக வடிவமைக்கப்பட்ட மேடையில் மணமகள், (சங்கீதா) மணமகன் (விவேகானந்தன்) திருமண வரவேற்பில் அனைவரையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்றனர்.
நாஞ்சில் அவர்களும், அவர்தம் மனைவியும் புன்னகை மாறாது இரவு பத்தரை மணிவரை விருந்தோம்பினர்.
மறுநாள் முகூர்த்தம். மண்டபம் திமிலோகப்பட்டது. மக்கள் அலையென தலைகள் (மண்டபம் சிறியதா ஐயாவின் நட்பு சுற்றம் குழாம் பொரியதா! நாஞ்சில் நாட்டு அந்நாளைய வழக்கம் போல மோட்டுக் காமணம் போட்டு ஒரு பொரிய மைதானத்தில் செய்திருந்தால் என்ன என்று எமக்குத் தோன்றியது) நாதசுர நாயகர்கள் கூட்டத்தை மகுடி நாகம் போல் கட்டுக்குள் வைத்ததை யாரும் மறுக்கவியலாது. அவர்கள் வாசித்த ‘எந்தரோ மகானுபாவுலும்” கூட்டத்தில் அமர்ந்த அவர்தம் துறை நாயகர்களுக்கு வந்தனம் செய்வதாய் அமைந்தது. நாடன் அவர்கள் தம் சமூக வழக்கப்படியும், மணமகன் தரப்பு தஞ்சை வழக்கப்படியும், திருமணத்தை ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செவ்வனே நிறைவேற்ற அவருடைய தம்பியர் குழாமும், நெருங்கிய சுற்றமும், நட்பும் தோள் தந்தது இனிமையிலும் இனிமை. நாடன் அவர்களின் மகன் கணேஷ் பொறுப்புடனும், பொறுமையுடனும், பெற்றோருக்கு தோள்கொடுத்தார்.
திருமண விருந்து! ஆஹா! உப்பும், உறைப்பும், புளிப்பும், இனிப்பும், துவர்ப்பும், கசப்பும், அறுசுவையும் ஒரு மணி குன்றாமல் விருந்தை முழுமையாக்கின.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் விருந்து அட்டவணை, அப்படியேப் பின்பற்றப்பட்டது, சிறிதும் எதிர்பாரா இன்ப அதிர்ச்சி!
‘அவியல் பொரியல் துவையல் தீயல்
பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி
சாம்பார் கூட்டுத் தயிர்புளி சோரி
சேனை ஏத்தன் சேர்த்தொரிசோரி
பருப்புப் பப்படம் பாயசம் பிரதமன்
பழமிவை யொரு போளியும் பருப்பு வடையும்”
‘ஐயா, இரு வயிறோடு மூன்று வகை பாயசம் பருகவேண்டும். நார்த்தப்பச்சடியும், மாங்காய் பச்சடியும் இன்னும் நாவில் நடம் புரிரிகின்றன” என ஒரு முதிய மாது கூறக்கேட்டது இன்னும் என் காதில் ஒலிக்கிறது. விருந்தில் பாரிமாறியவை, உப்பு, துவட்டல், மாங்காய் கொத்சு, இஞ்சி பச்சடி, நார்த்தங்காய் பச்சடி, மிளகாய் பச்சடி, தயிர் கிச்சடி, அன்னாசி ஜாம், அவியல், எரிரிசோரி, சேனை சாப்ஸ், பொரிரிச்ச கூட்டு, பருப்பு வடை, பப்படம், கற்கண்டு சாதம், பருப்பு, நெய், அன்னாசி புளி சோரி, ரசம், சம்பாரம், சிறு பயறு பிரதமன், சக்கை பிரதமன், பால் பிரதமன், போளி, ரசகதலி பழம், மற்றும் தயிர்.
எதை ரசிப்பது, எதை ருசிப்பது என திணறித்தான் போனோம். ‘கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் இது நாஞ்சில் வீட்டு பிரசாதம் இதுவே எமக்கு போதும்” என மாயபஜார் ரங்காராவ் தோரணையில் பாட்டு பாட தோன்றியது.
நள பாகத்தை செவ்வனே மேற்க்கொண்ட நாகர்கோயில் ஆரிய பவன் உரிரிமையாளர், திரு.ரமேஷ் பண்ணையார் பொரிதும் பாராட்ட தகுந்தவர். திருமண அடியந்திர வைப்புக்காரர் திரு.தாழக்குடி நீலகண்டனும், தம் பங்கை சிறப்பாக செய்தார். (அடுத்த முறை நோரில் சந்திக்கும் போது சக்கை பிரதமன் வைத்த கைகளுக்கு மோதிரம் அணிவிக்க வேண்டும் என்று நாங்கள் ஊர் திரும்புக்கால் பேசிக்கொண்டோம். திருமண அடியந்திரத்திற்கு எத்தனை செம்பு அரிசியாயிற்று? கூட்டம் அலைமோதியதே)
எம் போன்ற கலா ரசிகர்கள் முதன்முறை நட்சத்திர எழுத்தாளர்கள் படையெடுப்பைத் தாங்க முடியாதது உண்மை!
எழுத்தாளர் ஜெயமோகன், மிகவும் இயல்பாகப் பழகியது, 
சௌந்தர் வல்லத்தரசு அண்ணாவின் காருண்யம்,
பாரதி மணி ஐயாவின் ரசனை இவையனைத்தும் எமக்கு ஒருசேர வேறெங்குக் காணக் கிடைக்கும். நாதசுர மணிகளைப் பாராட்டி, பாரதி மணி ஐயா பொன்னாடை போர்த்தியது முற்றிலும் இனிமை!
ஐயாவின் ரசனை, ஊக்குவிக்கும் பாங்கு, மனித நேயம் புரிரிந்தது.
இயல், இசை நாடகம் ஒருசேர சங்கமித்த விழா, நாஞ்சில் நாடனின் இல்லத்திருமண விழா.
மணம், மகளுக்கு,
விழாநாயகர்களோ இயலிசை நாடகத் துறையினர்.
நாஞ்சில் இலக்கிய சங்கமத்தில் கோர்க்கப்பட்ட முத்துக்கள் எண்ணற்றவை இருக்கலாம்.
எமக்குக் காணக் கிடைத்தவர்கள் சிலரே!
உச்ச நீதிபதி திரு மு ஆ விஜயன், ஐயா நெல்லை கண்ணன்,கல்யாண்ஜி வண்ணதாசன், எழுத்தாளர் ஜெயமோகன், ட்ராட்ஸ்கி மருது, இயக்குநர் தங்கர் பச்சான், ஞான ராஜசேகரன், பாரதி மணி,கே.எம்.விஜயன், இயக்குன, நடிகர் அழகம்பெருமாள், கண்மணி குணசேகரன், கோபால கிருஷ்ணன், குமார செல்வ, என்.டி.ராஜ்குமார், ஷாஜஹான், ஆ.மாதவன், சு.வெங்கடேசன், தமிழ்ச்செல்வன், கீரனூர் ஜாகிர் ராஜா, கவிதாயினி சக்திஜோதி, சா.விஜயலட்சுமி, தி.பரமேசுவாரி, பாதசாரி, விஜய வேலாயுதம், க்ருஷி, ஓவியர் வள்ளி, ஓவியர் ஜீவா, கனகதூரிகா, மரபின் மைந்தன் முத்தையா, இசைக்கவி ரமணன், நா.ஜெயபாஸ்கரன்,
தமிழினி வசந்தகுமார்,கவிஞர் தேவ தேவன்,அ.கா.பெருமாள் ,கா.மோகனரங்கன்,கவிஞர் வேனில், லஷ்மி சரவணகுமார், கவிஞர் தாணு பிச்சையா, காலச்சுவடு கண்ணன், கொடிக்கால் அப்துல்லா, பொன்னீலன், வேதசகாயகுமார், சுபாஷிணி, மதுமிதா, சிரில் அலெக்ஸ், சிபிச் செல்வன், முருகேச பாண்டியன், சுதிர் செந்தில், கவிஞர் சுகுமாரன், சு. வேணுகோபால் மற்றும் எஸ்ஐ சுல்தான் அவர்கள். (விடுபட்டவர்கள் மன்னிக்க)
இலக்கிய நாயகனாய் சாகித்ய அகாடமிக்கு மாண்பு சேர்த்த திரு.நாஞ்சில் நாடன் அவர்கள், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பழகுபவர். இலக்கியத்திற்காக, நட்புக்காக அகலாது, அணுகாது படைப்பாளிகள் அனைவரையும், அறிமுக எழுத்தாளர் முதல் ஜாம்பவான்கள் வரை தம் அன்பெனும் பாசவலையில் கட்டுண்ணப் பண்ணியவர் என்பது அவர்தம் மகளின் மணவிழாவில் நிதர்சனமாகத் தெரிந்தது. வெவ்வேறு கூடாரங்களைச் சேர்ந்த படைப்பிலக்கிய வாதிகளை ஒரு குடையின் கீழ் கொணர ஆசான் நாடனைத் தவிர வேறு யாரால் இயலும்?
ஐயா இறைவனே! உமக்கு நன்றிகள் பல. இத்துணைத் திறம் வாய்ந்த இலக்கிய சங்கமம், அன்பால் அறிவால், உணர்வால் ஓர் குடும்பம் என கட்டுண்டது தான் எம் ஆசானின் மணிமகுடம் !
நாஞ்சில் நாடனின் இலக்கியப் பேரரசு! எழுது கோலின் செங்கோல் !
……………
THE COMMENTARY IS LIKE A SKETCH OF A FUNCTION,WHICH INCITES OUR IMAGINATION,LIKE THE NOVELS OF Thi..JANAKIRAMAN, AS THE FONCTION IS TAKING PLACE BEFORE OUR EYES
விருந்தும் எழுத்தும் பல்லாயிரம்
மயில்களுக்கு அப்பாலும் மணக்கிறது !
வாழ்க .
மனப்பூர்வ வாழ்த்துகள்.
தயிர் என நினைத்து பால் பாயசத்தை வேண்டாம் என்று சொன்ன சோக கதையை எழுத மறந்து ( மறைத்து ) விட்டீர்களே?
புகைப்படங்கள் அனைத்தும் என் கேமராவால் எடுக்கப்பட்டவை மட்டுமே. ஒரிஜினல் கல்யாண ஆல்பம் கிடைத்திருந்தால் ஒவ்வொருவரையும் பதிப்பித்திருக்கலாம்