எட்டுத் திக்கும் மதயானை…..2.1

நாஞ்சில் நாடன்
முன்கதை: எட்டுத் திக்கும் மதயானை
வண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தது வானில் விடுதலைப் பந்து.  தேசீய நாட்களில் விமானங்கள் தலைவர் தலைகளில் பூவிதழ்க் குவியல்கள் சொரிந்தவாறிருந்தன.
          கல்யாண மண்டபங்களில் விருந்து முடிந்தபின் சேரும் எச்சிச் சோற்றைச் சேகரித்து விழா எடுத்து ஏழைகளுக்கு விநியோகிக்கலாம். இலவச வேட்டி,  சேலை, ஐந்து கிலோ அரிசி வழங்குவதைப் போல. 
          இரவு ஒன்பது மணி தாண்டி விட்டது. 
          உறக்கம் கிறக்கிக் கொண்டு வந்தது. இரண்டாம் வகுப்புப் பயணிகளின் ஓய்வறை நோக்கிப் போனான். இருக்கைகள் எல்லாம் நிரம்பி இருந்தன. சிலர் தரையில் துணி விரித்து தலைக்குப் பெட்டி வைத்துப் படுத்திருந்தனர். ஒரு துண்டாவது வாங்கிக் கொண்டிருக்கலாம்.  யாரோ உபயோகித்து மடக்கி போட்ட தினசரித் தாள்கள் கிடந்தன. அதை நீள வாக்கில் பரத்தி சுவரோரம் முடங்கிக் கொண்டான். உறக்கம் அள்ளிக் கொண்டு போயிற்று. அளவான குளிர், அலைந்தலைந்து கடித்த கொசுக்கள், எதுவும் உறைக்கவில்லை. 
          தலைவிரி கோலமாய் அம்மா பேய் பிடித்து ஆடிக் கொண்டிருந்தாள். நான்கு பேர்கள் பிடித்து நிறுத்த முடியவில்லை. மூசுமூசு என மூச்சு வாங்கியது. ஒப்பாரிப் பாடலொன்று நெஞ்சின் ஊற்றைக் கிளம்பியது. பிணம் போலக் கிடத்தி இருந்தார்கள் பூலிங்கத்தை, வடக்குப் பார்த்து. பூசைக்கும் வடக்கு முகம். பிணத்துக்கும் வடக்கு முகம். போசனத்துக்கு தெற்கு முகம். நெற்றியில் குழைத்துப் பூசிய திருநீறு. தலைமாட்டில் எரியும் நிலை விளக்கின் தீபம். ஊதுபத்திக் கட்டுப்புகை. கழுத்தில் பிச்சிப்பூ மாலை. சிவந்தி ஆரம். கண்களிலிருந்து மாலைமாலையைக் கண்ணீர் வழிந்தவாறிருந்தது. வாசலில் கொமரத்தாடியின் காற் சலங்கையின் குலுங்கல் ஓசை. இடுப்பில் சல்லடம் கட்டி, மேலே கச்சை கட்டி, தோள்களில் இருந்து குறுக்காக இறங்கிய பாச்சக்கயிறு கிண்ணென்று இழுபட, தலையில் கட்டிய குஞ்சமும் செருகிய தாழை மடல்களும், கையில் ஓங்கிய வெள்ளி வெட்டுக் கத்தியுமாய் தெய்வநாயகம் பிள்ளை
       “ம்… கொண்டா அவனை… கரும்பு கொண்டா…. ஓயேவ்….”        
        முரசு காத்து மடல்களைச் சிதைத்துக் கொண்டிருந்தது.
          முன் தள்ளிய வயிறும் தளர்ந்த நடையுமாக சுசீலா கொமரத்தாடியிடம் திருநீறு வாங்கிக் கொள்ளக் குனிந்து நிற்கிறாள். கொப்பரையின் திருநீற்றைத் தலையில் தூவி, நெற்றியில் பூசி… தலைப்பிள்ளைச் சூலியின் விகசித்த முகம். பூசாரி கெண்டியின் தண்ணீரைச் சுசீலாவின் தலையில் தெளித்தார். கும்மென்று உயர்ந்து இறங்கியது தீவட்டி வெளிச்சத்தில் பளீரிடும் வெள்ளிவாள்
தொடரும்…
தட்டச்சு உதவி : பிரவீன்

About S i Sulthan

Phone: 9443182309 Nellai Eruvadi
This entry was posted in அனைத்தும், இலக்கியம், எட்டுத் திக்கும் மதயானை, நாஞ்சில்நாடனின் கதைகள் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to எட்டுத் திக்கும் மதயானை…..2.1

  1. N.Rathna Vel சொல்கிறார்:

    அருமையாக இருக்கிறது.
    நாடோடி வாழ்க்கையின் அவலம் புரிகிறது.
    நன்றி ஐயா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s