எக்காலத்தும் அன்பும் வெறுப்பும் மானுட இயல்பு, நல்லவர்க்கும் கெட்டவர்க்கும்.
பங்காளி, தாயாதிச் சண்டைகள் உணரப்பட்டதும் உள்வாங்கப் பட்டதும்தான். அன்றும் உண்டு, இன்றும் இருக்கிறது. ஆசாபாசங்கள் என்றும் அடர்நிறங்கள் கொண்டவை.
ஆனால் இன்று உறவுகள் அவற்றின் இயல்பான அந்நியோன்மைத் தன்மையும், ஆவலாதியும் இழந்து வருகின்றன.
முதல்சுற்று உறவுகள் தாண்டி, இரண்டாம் சுற்று உறவுகள் பெரும்பாலும் கல்யாண வீடுகளிலும், இழவு வீடுகளிலும் மட்டுமே இன்று சந்தித்துக் கொள்கிறார்கள். எச்சரிக்கை உணர்வுடன் இருக்கிறார்கள், வேவு பார்க்கிறார்கள், முற்றிலும் சம்பிரதாயமானதோர் மொழியில் உரையாடுகிறார்கள்.
—– நாஞ்சில்நாடன்