என்றாலும் முயற்சி என்பது தேவதூதர்கள், அரசிளம் குமரர்கள், பாரம்பரிய பண்டித வம்சாவளியினர் என்பவர்க்கு மட்டும் உரிமைத்தானது அல்ல.
நான் கட்டை விரலை இழக்க விரும்பாத ஏகலைவன்.
இது என் எளிய முயற்சி. பண்டிதற்க்கும், கம்பனில் கற்றுத்துறை போகியவருக்கும் பேராசிரியர்களுக்கும் இதில் மூழ்கி முத்தெடுக்க எதுவும் இல்லாமற் போகலாம்.
அது எனக்குப் பொருட்டில்லை.
எனது இலக்கு, கம்பனைப் புதிதாய்க் கற்க்க ஆர்வமுள்ள தீவிர இலக்கிய வாசகர்கள், இளம் படைப்பாளிகள், என் எழுத்துக்களோடு ஏற்கனவே உறவுடையவர்கள்.
…… நாஞ்சில் நாடன்.