விடாக்காய்ச்சலுக்கு மருந்து கண்டாயிற்று!
விலை, வினியோகம், இருப்பு, தரகு,
யாவும் தீர்மானித்தாயிற்று!
அரச குலங்களின் பங்கு உரைத்தாயிற்று!
அறுவடை நடக்கும் கம்பலை இன்றி!
இனி நோய் பரப்புதல்…
நாயோ, காகமோ, பகல் கொசுவோ
காற்றோ, நீரோ, மாசுத் தூசோ
உத்தேச மார்க்கம்
உறுதிபடல் வேண்டும்!
………………………………………………………..நாஞ்சில் நாடன்..2019
நன்றி