Tag Archives: nanjilnadan

செத்த பிணம் தொழும் சாகும் பிணங்கள்

This gallery contains 8 photos.

பம்பாயில் இருந்தோ, கோவையில் இருந்தோ, ஒவ்வொரு சாவுக்கும் துட்டி கேட்டு போவது எண்ணியும் பார்க்க இயலாதது. பெத்த அப்பா இறந்தபோது, பம்பாயில் இருந்த நான், 1976ல், கையில் காசில்லாத காரணத்தால் , காடேற்றும் கழிந்து சாம்பலும் கரைத்த பிறகே சென்று சேர்ந்தேன். பெற்ற தகப்பனின் முகத்தைக் கடைசியாகக் காணக் கொடுத்து வைக்காது போனதன் காரணம் நான் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

எழுத்திலிருந்து ஞானத்துக்கு

This gallery contains 3 photos.

இத்தனைக்கும் மேலாக ஒரு எழுத்தாளனாக அவர் இப்போது செய்துகொண்டிருக்கும் காரியமே தமிழுக்கு அவருடைய முக்கியமான பங்களிப்பாக, அவரது வாழ்நாள் பங்களிப்பாகவும் இருக்கும். இன்றைய நம் தலைமுறை தொலைத்துக்கொண்டிருக்கும் தமிழின் மரபிலக்கியங்களை புத்துயிர்த்துத் தருகிற மகத்தான பணியினை அவர் செய்துகொண்டிருக்கிறார். பல்கலைக்கழகங்களும், தமிழ் பேராசிரியர்களும் செய்யவேண்டிய சாதனைப் பணியினை அவர் மேற்கொண்டிருக்கிறார். …(எம். கோபாலகிருஷ்ணன்)

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

எழுத்தாளனுக்கு திமிர் கூடப் பிறந்தது (1)

This gallery contains 7 photos.

”மனித மனங்களின் உள்ளுணர்வுகளை ஊடுருவிக் கொள்ளும் கலையே உண்மையான இலக்கியம்” என முன்வைக்கிறார் நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஆதி எனும் சொல்லும் செயலும்

This gallery contains 11 photos.

இந்த சந்தர்ப்பத்தில் வேறு சிலரை எண்ணிப்பார்ப்பது நமக்கு தவிர்க்க முடியாததாகிறது. மயிர்பிளக்கும் முற்போக்கு வாதங்களையும் , நவீனத்துவ-பின்நவீனத்துவ சிந்தனைகளையும் போதித்து , சமூக நீதிக்கு போராடிய சிலர், நல்ல வருவாயுள்ள அரசுப்பணியை, வங்கிப்பணியை துறந்துவிட்டு , களத்தில் துணிவுடன் தீப்பாய்ந்து நமது வியப்பையும் நன்மதிப்பையும் ஒருசேரப் பெற்றனர்.ஆனால் காலம் என்பது கறங்கு போல் சுழன்றது.  விழித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

சிறப்புப் பட்டம்

This gallery contains 1 photo.

‘காவல்துறையில் மட்டும் உயர் அதிகாரிகளின் வீட்டில், கடைநிலை ஊழியக் காவலர்கள் இன்றும் தரை கூட்டிப் பெருக்கித் துடைக்கிறார்கள்; தோட்ட வேலை செய்கிறார்கள்; மீன் சந்தைக்குப் போகிறார்கள்; மேலதிகாரிகளின் சீருடைகளைத் துவைத்து உலர்த்தி தேய்த்து மடிக்கிறார்கள்; காலணிகளுக்குப் பாலீஷ் போடுகிறார்கள்’ என சினிமாக்களில் காட்சி வைக்கிறார்கள். ஒடுக்கப்பட்டோருக்கு உயிர் கொடுக்க என்றே உயிர் வாழும் தலைவர்கள் எவரும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கும்பமுனியும் தவசிப்பிள்ளையும்

This gallery contains 7 photos.

கும்பமுனி அரசியல், கலை இலக்கியம், உலக நடப்புகள் என எல்லாவற்றையும் அதிரடியாக விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். அதற்க்கு எதிர்வினைபோல தன்னை விமர்சிக்கவும் தவசிப்பிள்ளையை தாராளமாக அனுமதிக்கிறார். கும்பமுனியை இயக்கும் “ரிமோட்” நாஞ்சி நாடனிடம் இருக்கிறது. தன்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றவற்றைக் கூடுவிட்டு கூடுபாய்ந்து கும்பமுனிக்குள் ஏறிநின்று அவர் பேசுகின்றார் என்றே நான் கருதுகிறேன்  (… கீரனூர் ஜாகிர்ராஜா) உயிரெழுத்து(டிசம்பர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே

This gallery contains 2 photos.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே! நாஞ்சில் நாடன் ———————————————- எம்.எல்.ஏ. மகனா? முந்திச் சென்ற எந்தப் பயலையும் சுட்டுக் கொல்லலாம் சினிமா நடிகனா? நடைபாதை துயிலும் நலிந்த மனிதனை நசுக்கிப்போகலாம்! சின்னத் தலைவனா? எதிர் தொழிற்கூடம் ஊழியரோடும் எரித்து அழிக்கலாம்! கோடிகள் குவித்த அமைச்சன் ஊழலா? நாற்பத்தெட்டாண்டுகள் விசாரணை நடக்கும்! பதினாயிரம் கோடி அரசை ஏய்த்தால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மனிதம்தான் எல்லாமும்

This gallery contains 3 photos.

நான் எதிலும் ஒரு ஒழுங்கை, நேர்த்தியை எதிர்பார்ப்பவன். அது காய்கறிகளை நறுக்குவதாக இருந்தாலும் சரி, துணி துவைத்து உலர வைப்பதாக இருந்தாலும் சரி எல்லாவற்றிலும் அதே நேர்த்தியை கடைபிடிப்பவன். நூல் வாசிப்பு இல்லாத நாள் எனக்கு கிடையாது. இப்படிப்பட்ட குணங்களோடு நான் இருப்பதால், என்னைப்பார்த்தே வளர்ந்த என் குழந்தைகளும் இப்பண்புகளை தங்களது இயல்புகளாக்கிக் கொண்டனர். அது … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மும்மை

This gallery contains 1 photo.

http://solvanam.com/?p=46097 ஒன்று, இரண்டு, மூன்று என்பதை ஒருமை, இருமை, மும்மை என்பார்கள். நேரடியாகத் திருக்குறளுக்கு போனால், ‘ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்புடைத்து ‘ என்பது அடக்கமுடைமை அதிகாரத்துக் குறள். ஐந்து உறுப்புகளையும் ஒரே ஓட்டிற்குள் அடக்குகின்ற ஆமை போல், ஐம்பொறிகளையும் அடக்க முடிந்தால், என்றும் அது பாதுகாப்பாகும் என்று பொருள். ஒருமை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

துறந்தார், எல்லாம் துறந்தாரில்லை.

This gallery contains 6 photos.

பங்குச்சந்தையில் குறிப்பிட்ட கம்பெனிகளின் பங்குகளை வாங்கி, விற்று கொள்ளையாக பணம் சம்பாதிக்க சில துறவிகள் டிப்ஸ் தருகிறார்களாம். காலைப் பலகாரத்துக்கு மல்லிகைப் பூப்போன்றே இட்லியையும், எள்ளு மிளகாய்ப் பொடியையும், நாட்டுச்செக்கு நல்லெண்ணையையும்கூட துறக்காதவர் மனிதகுலத்துக்கு என்ன மாண்பும், மகிமையும் சேர்த்துவிடப் போகிறார்கள்? உதிர்ந்த மயிரைக்கூட அவர்களால் ஒட்டவைக்க இயலாது! கோடி ரூபாய் நன்கொடை செய்பவனுக்கு என்று … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

கறங்கு

This gallery contains 1 photo.

  சுடலைமாடனுக்கு நெஞ்செரிச்சலும் வயிற்றுப் பொருமலுமாகி புங்குபுங்கென்று கோபமும் வந்தது. ஒரு புல்லும் தன்னைப் பொருட்படுத்துவதில்லை என்ற ஆங்காரம் வேறு. முன்னொரு காலம் பட்டப்பகலில், நட்டநடு வெயில் கொளுத்தும்போது, அந்த வழி நடக்கும் ஆடவர், அவர் திசைப்பக்கம் திரும்புவதில்லை அச்சத்தால். பெண்டிர் பற்றி பேசல் வேண்டுமோ? சுடலையின் பின்பக்கம், ஆற்றங்கரையோரம் நிற்கும் இரண்டு நெட்டைத் தெங்குகளில் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 8 பின்னூட்டங்கள்

அம்மா

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடனின் தாயார் 16-09-2016   வெள்ளிகிழமையன்று இறைவனடி   சேர்ந்தார்கள். 17 சனிக்கிழமை பிற்ப்பகல் 4 மணியளவில் ஈமச்சடங்குகள் வீர நாராயண மங்கலத்தில் நடைபெற்றது. நாஞ்சில்நாடன்: 9443057024

More Galleries | Tagged , , , | 10 பின்னூட்டங்கள்

நச்சைத் தின்றால் பித்தம் பெருகும்!

This gallery contains 7 photos.

இந்தியனின் பயன்பாட்டுச் சாதனங்களுக்கான சந்தை என்பது சாமானிய காரியம் அல்ல.  அவர்கள் மனிதர்களா, மந்தைகளா, பன்றிக் கூட்டங்களா என்பதில் அல்ல அவர்களது அக்கறை.  நாம் சுத்தமான பாரதம் என்று கோஷம் போடுவோம். முதலாளிகளின் கணக்கு எத்தனை கோடி மில்லியன், டிரில்லியன் என்பது! அந்த நிறுவனங்களுக்கு ஒரு இந்தியர் தலைவர் என்றால் நம் தோள்கள் விம்மி பூரித்து … Continue reading

More Galleries | Tagged , , , , , | 4 பின்னூட்டங்கள்

அவர் கடன் பணி செய்து கிடப்பது

This gallery contains 7 photos.

இனம், மதம், அரசியல் சார்பு என்ற எந்த ஒன்றும் தடையில்லை, அவருடன் நேசம் பூண்டு ஒழுகுவதற்க்கு. தொண்டு அவர் நோக்கம், ஆதாயம் அல்ல. தமிழ்ச் சூழலில், அபூர்வமாகிப் போனதோர் அவலம் இது. இன்று அரசியலும் சமூகத் தொண்டும் கார்ப்பரேட் மயமாகிவிட்ட காலையில், இது முக்கியமானது……..(நாஞ்சில் நாடன்)

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

விசும்பின் துளி (1)

This gallery contains 7 photos.

 ”ஆறலைக் கள்வர்” என்பார் வழியில் திரியும் வழிப்பறிக் கள்வர்களை. இன்று கல்வி, மருத்துவ வணிகக் கள்வர்கள் பெருவழியில் High Wayயில் அலைகிறார்கள். அரசியல்காரர்களும், அதிகாரிகளும் தங்க நாற்கரச் சாலைகளில் பறக்கிறார்கள். ஆறலை என்றால் வழிப்பறி என்கிறது பிங்கலம்…. நாஞ்சில்நாடன். தொடரும்….

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் நாஞ்சில் நாடன் உரை

This gallery contains 1 photo.

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் நாஞ்சில் நாடன் உரை (ஆமருவி தேவநாதன்). ‘எழுத்தாளன் வாழ்வில் புத்தக வெளியீடு என்பது மாபெரும் கொண்டாட்டம்,’ என்று துவங்கினார் நாஞ்சில் நாடன் இன்றைய வாசகர் வட்ட ஆண்டு விழாவில். தனது 42 நூல்களில் இரண்டே வெளியீட்டு விழா கண்டவை என்று சொன்னவர் பின்னர் ‘தமிழும் அதன் சொற்களும்’ என்கிற பொருளில் ஆழ்ந்த உரை … Continue reading

More Galleries | Tagged , , , , | 2 பின்னூட்டங்கள்

சிங்கப்பூரில் நாஞ்சில் நாடன்

This gallery contains 14 photos.

சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஆண்டுவிழா நிகழ்ச்சியில் சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக்கழகத்தின் திரு அருன் மகிழ்நனுடன் திரு நாஞ்சில் நாடன் அவர்கள்,   சிங்கப்பூர்  தொலைக்காட்சி பேட்டியில் திரு சதக்கத்துல்லா மற்றும் திரு பொன் மகாலிங்கத்துடன் நாஞ்சில்  நாடனுக்கு நினைவுப்பரிசு வழங்குபவர்கள் எம். கே . குமார் ,ஷா நவாஸ் ,பால பாஸ்கரன் ,மற்றும் வாசகர் வட்ட … Continue reading

More Galleries | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தொடர்ச்சி – பொய் நெல்லைக் குத்திப் பொங்க நினைத்தவன்…

This gallery contains 6 photos.

பக்கத்து ஊர் வி.ஓ.விடம் விண்ணப்பம் போயிற்று. அவருக்குத் தெரியும் கும்பமுனி சள்ளை பிடித்த எழுத்தாளர் என்று. தலைத்தட்டு வரை பிடி உள்ளவர் என்பதும் தெரியும். மேலும் எங்காவது நேர்காணலில் வில்லங்கமாகப் பேசிவைத்து அது மாவட்ட ஆட்சியாளர் கவனத்துக்குப் போய், களியந்தட்டு விளைக்கு மாற்றல் செய்தால் என்னவென்று எங்கு சென்று முறையிடுவது? மறுபடி ஒரு இடமாற்றத்துக்கு சந்தை … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில்நாடன் கதைகள்

This gallery contains 3 photos.

மனித உணர்ச்சிகளும், அவன் எண்ணங்களும் செயல்பாடுகளும் வெவ்வேறு மாதிரியிருக்கும். அவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், பொதுவாக வாழ்க்கையையும்  ஒவ்வொரு மாதிரி எதிர்கொள்கிறான். பல்வேறு சந்தர்ப்பங்களை பலரும் எதிர்கொண்டிருப்பார்கள். அதை பல எழுத்தாளர்களும் பல்வேறு கோணங்களில் எழுதியிருக்கிறார்கள். நாஞ்சில் நாடனும் தான் சந்தித்த மனிதர்கள், தன்  வாழ்க்கையில் தன்னை பாதித்த சம்பவங்களை கொண்டுதான் இந்த சிறுகதை தொகுப்பை எழுதி … Continue reading

More Galleries | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

வெள்ளித் தாம்பளம் சொன்ன கதை

This gallery contains 13 photos.

”ஒமக்குத் தெரியாதா? மலையாளத்திலே வைக்கம் முகம்மது பஷீர்னு ஒரு பேரு கேட்ட எழுத்தாளர், பேப்பூர் சுல்தான்னு பட்டபேரு… ஒரு பேட்டியிலே சொல்லீருக்காரு, வாசல்ல கிடந்த நாயைக் காணிச்சு –இது ஸ்டேட் சாகித்ய அகாதமி, செண்ட்ரல் சாகித்ய அகாதமி, ரெண்டு பட்டயத்தாலயும் எறி வாங்கியிருக்குண்ணு” “நீரு அப்பம் பீக்குண்டி சுல்த்தானாக்கும்?” தவசிப்பிள்ளை போட்ட லெக் ஸ்பின் கும்பமுனி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

அஃகம் சுருக்கேல் – வாழ்த்துரை

This gallery contains 1 photo.

’அஃகம் சுருக்கேல்’ எனும் தலைப்பில் எனது கட்டுரைகள் சில தெரிவு செய்யப்பட்டு இங்கே தொகுப்பாகிறது. இஃதோர்  பன்முகத் தன்மை கொண்ட தொகுப்பு. எனது கட்டுரைகளில் சில மறுபடியும் வாசகர்களைச் சென்றடைவதில் எனக்கு மகிழ்ச்சி…… (நாஞ்சில்நாடன்)

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கோவையும் வாசிப்பு மரபும்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் சபரிமலைக்கான சரண கோஷம் ஒன்றுண்டு. ‘கட்டும் கட்டும் சாமிக்கே! கதலிப் பழமும் சாமிக்கே!’ என்று. அதுபோல ‘மெட்ரோ ரயிலும் சென்னைக்கே, மோனோ ரயிலும் சென்னைக்கே, புறவழிச் சாலையும் சென்னைக்கே, வளையச் சாலையும் சென்னைக்கே!’ இரண்டு வழித்தடங்களில் சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அரசுகள் 14,600 கோடிகள் செலவு செய்துள்ளன என்கிறார்கள். ஏன் கோவைக்கு, … Continue reading

More Galleries | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக