Tag Archives: பச்சை நாயகி

மன்னுபுகழ்க் கெளசலை தன் மணிவயிறு வாய்த்தவளே!

This gallery contains 17 photos.

 இறையோ, அரசிளம் குமரோ,செல்வச் சீமானோ, சீமாட்டியோ, எல்லாத் தாய்மாருக்கும் தன் குழந்தை அதுவேயாம். எந்தத் தாயும் கோசலைதான், அவள் குழந்தை மணிவயிறு வாய்த்த மகவேதான். எனதம்மைக்கு, மன்னுபுகழ் சரசுவதியின் மணிவயிறு வாய்த்தவன் தானே நானும்! எனில் நீங்களும், உங்கள் தாயாருக்கும் புகழ் மணிவயிறு வாய்த்தவர் தாமே! ……….நாஞ்சில் நாடன்

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

காமம், காமம் என்ப…

This gallery contains 1 photo.

. . நாஞ்சில் நாடன் . காரைக்கால் அம்மையின் தடத்தில் நடக்கப் பேயுருவல்ல நம்முரு பன்னாட்டுப் பித்துரு  . காமம் கனிந்தது அம்மை தேடல் காமம் நனைந்தது நமது நாடல்  . காமம் என்பது செம்பியன் ஏற்றை கருமுக மந்தி இன்று நமக்கு  . பொருந்தாக் காமம் போதாக் காமம் திருந்தாக் காமம் தீவிரக் காமம்- … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கால முதல்வன்

This gallery contains 1 photo.

பொருட்டின்றிக் கடந்து போயிற்று தொடர்ந்தேகினேன் தொலையாத் தூரம் காலத்தைத் தாண்டுதல் சாலுமாவெனப் பொருள் விடிந்தபோது பொருட்டற்றுப் போயிற்று எனக்கும் எனினும் பின்னால் தொடர்ந்தோடி வருகுவதென் கால முதல்வனே! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~நாஞ்சில்நாடன்  ஓவியம்: ஜீவா தட்டச்சு : பாலா. சிங்கப்பூர்

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மொழியும் சைகையும்

This gallery contains 1 photo.

உள்ளும் புறமும் கரிய வராக நிறம் அதிகாரம் பணம் பதவி கண்ட வாலின் சுழி இனக்குணம் வறண்ட மலம் Staple Fiber food  . குறிஞ்சி கருங்குவளை நீலம் சங்குபுட்பம் நீலாம்பல் கருநொச்சி கருந்துளசி நீலஊமத்தை எனக் கபிலன் குறித்த , குறிக்க மறந்துபோன யாவும் சட்டியில் வளரும் குரோட்டன்  . அருங்காட்சியகங்களில் உருவம் நட்டு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தன்னிரக்கப் பா

This gallery contains 1 photo.

நடந்த தடமெல்லாம் தேடிக் களைக்கிறேன் உலர்ந்த பூச்சரம் உதிர்ந்த கொலுசுமணி களைந்த கேசச்சுருள் வெட்டிய நகப்பிறை காட்சிப் படாதாவென  . காலை அரும்பிப் பகலில் போதாகி மாலை மலர்ந்த நோய் இரவு ஏன் ஈட்டியால் எறிகிறது  . உற்றாரை வேண்டாது ஊராரும் சாராது கற்றாரைக் காணாது கற்றனவும் முன்மறந்து பொற்பாதம் தேடிப் பூமுகமும் காணாமல் வெற்றாரென … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கொய்தல்

This gallery contains 1 photo.

பறவை எச்சமோ விலங்கினக் கழிவோ விதையொன்று வீழ்ந்தது கிடந்தது விதைத்துயில் கொண்டு முளைப்பதும் முளையாதிருப்பதும் அதனதன் முனைப்பு முளைத்தது வெள்ளாடு களைக்கொட்டு கவாத்து துணிந்து எறியாதிருந்தது நல்லூழ் அந்தரங்கத்தில் கனவொன்றிருந்தது கிளை கொடி வீசிப்படர்ந்து காலை அரும்பிப் பகலில் போதாகி மாலை மலர்ந்தது வனப்பு வடிவு வண்ணம் என்பன வசத்தில் இல்லை வாசம் என்பதோர் நல்வினை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அடையாளம்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அடையாளம் போன பிறப்பில் வாயிலோன் மிதித்து ஏறிய கற்படி வளர்த்த பார்ப்பு அணிந்து கழற்றிய ஆடை கொங்கை முன்றில் எழுதிய குங்குமம் அற்ற நீர்க் குளத்து அறுநீர்ப் பறவை . வரும் பிறவியில் ஒக்கலைப் பிள்ளை புறம் நின்று புல்லும் கொழுநன் உட்தொடையில் உராயும் மச்சம் உண்ணீர்க் குளத்துக் கொட்டியும் ஆம்பலும் இந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

புளிக்கும் அப்பழம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் உலக நாடுகள் காணுதல் என்றால் அருவி , புல்வெளி , கானகம் , வாகனம் , ஓவியம் , சிற்பம் , படகுச் சவாரி , பனிச்சறுக்கு , வெந்நீர் ஊற்று , உறங்கும் எரிமலை , வண்ணக் கடற்புறம் , கவினுறு தீவு , வடிவும் வனப்பும் கொண்ட கைகளின் அமுக்குதல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சாக்கோட்டை

This gallery contains 2 photos.

சுடலை நோக்கிய என் வழித்தடத்தில் செங்கொன்றையாய் நேசம் பூத்துச் சொரியும் சாக்கோட்டைக்கு இன்னும் சில அடியீடு மட்டும் வாழும் ஆசையோ வானினும் உயர்ந்தன்று எனினும் இனித் திரும்ப ஒண்ணாது அலை ஓயவும் மாட்டாது. ……………………………………………………………………நாஞ்சில்நாடன்

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

விரகம்

This gallery contains 1 photo.

(இன்னொரு முத்தொள்ளாயிரப் பாடலின் எதிரான மனநிலை எனக்கு,       ‘கூடற் பெருமானைக் கூடலாற் கோமானைக்       கூடப் பெறுவனேல் கூடென்று – கூடல்       இழைப்பாற்போல் காட்டி இழையா நிற்கும்      பிழைப்பிற் பிழைப்பாக்கு அறிந்து’      ஏனெனில் தமிழ்மொழி நேற்றுப் பிறந்த மொழியல்ல, இன்று புதிதாக வந்த நான் சின்னச் சாதனையில் கொடி நாட்டிவிட்டுப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வதை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன்   மூக்கில் பொடி தூவி சவுக்காய் வால் முறுக்கி பல்பதியக் கடித்து தேரேற்றி முகம் பொசுங்கப் புகைபோட்டு பட்டாசு வெடித்து ஆசன வாயில் எரிவன அரைத்துப் பூசி என் செய சண்டித்தனமல்ல தள்ளாமை மறியலல்ல இயலாமை சாலை நடுவில் எம் கிடப்பு. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~   தட்டச்சு : பாலா. சிங்கப்பூர் எஸ் ஐ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

இரு பெரிய கருவிழிகள்

This gallery contains 1 photo.

நாஞ்சில்நாடன் வாலடிக்கும் பல்லி ரீங்கரிக்கும் கொசு பறக்கும் கரும்பாச்சை எனவுறையும் இல்லத்து யாம் மன்ற துஞ்சாதே இருட்பூங்குளிர் காற்று அடர்மரத்துச் சில்லோதை உறக்கத்தின் மென்னூக்கி எனினும் நித்திரை களவு போனதன் காரணமென் நன்னெஞ்சே பசி கடுங்காமம் பேராசை திரண்ட தொல்வன்மம் கைவிட்டுப்போன பழங்காதற் பெருமூச்சின் கழைக்கூத்து அண்டவெளியதனின் ஞானப் பெருந்தேடல் யாதொன்னும் அல்ல   கலங்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பச்சை நாயகி

This gallery contains 1 photo.

  நாஞ்சில் நாடன்   எங்கெனத் தேடுவதுன் எழிலார்ந்த பொன்முகத்தை? காற்று வெளியதனுள் ககன விதானத்து பைந்நாகப் பாய்விரித்த பார்க்கடலில்? யாண்டு செவிப்படுமுன் தேமதுரத் தமிழோசை? மைனா , கிளி , தேன்சிட்டு , கானக் கருங்குயில் , வால் நீண்ட கரிக்குருவி , குருகு , மீன்கொத்தி யாவும் கீசுகீசெனக் கலந்த அரவத்து? எவண் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மயக்கம்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன்   மேகம் கலங்கா அடர்நீல வானின்று இழிந்த மின்கொடி நெஞ்சத்து இறங்கிற்று. அம்முகம் என்றோ கனவோ காப்பியப் பாத்திரங்களோ வனைந்து காட்டியதும் சங்கப்புலவன் குறுந்தொகையில் கரந்து வைத்ததுவும் அல்ல  காணக்கூசியது நேராய் அபாயச் சங்கொன்றும் அகாலத்தில் ஊதியது கண்ணவிந்த கால்கை முடப்பட்ட சிந்தை சிதைந்த கரிக்கட்டையாகிக் கான்சுனை மிகுந்த மொழியின் தொன்மங்களை ஊடறுத்தன … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பிலம்

நாஞ்சில் நாடன்   பிலம் ஒன்று கண்டுரைப்பீர்! வாலிதன் வால்வலி அஞ்சிக் கரந்து கார்த்தவீரியார்ச்சுனன் உறைந்த பிலம் வள்ளிக் குறம் ஒளிந்த குகை கொத்துக் குண்டு தற்காத்து பொடியன் பதுங்கு குழி போன்ற‌ பிலம் ஒன்று கண்டு சொல்வீர்! உணவுப் பங்கீடு வாக்காளர் அடையாளம் ஓட்டுநர் உரிமம் கடவுச்சீட்டு ஆகக் கனத்த ஆவணம் எரித்துக் குழைத்துப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

போம் காலம்

This gallery contains 1 photo.

 நாஞ்சில் நாடன் வலக்கை மடித்துத் தலைக்கடை வைத்து அலுத்த துயிலின் கனவுகள் போக்கிக் கிடந்தவன் புறங்கடைச் சிகையில் பூப்போல் உராய்ந்து தீப்போல் எரிவது எவர் குறுமூச்சு? குருதி கொதித்துக் கதிக்க நடக்கையில் ஏங்கியும் வாராக் காமினிப் பெண்ணா? புலன் உணராத கொல்பகையாக நிலத்தில் இறங்கிக் காலும் பரத்தி பலிபறித்தெடுக்கும் நுண்ணுயிர் நோயா? அந்தக வாகனம் ஆள்மாறாமல் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நகை

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன்   உன் பங்கைப் பெற்றாய் நண்பா! வழக்கில்லை வயிறெரிவும் இல்லை மற்று ஆயிரம் பங்கும் அள்ளிக் கொண்டாய் அநீதி பேராசை தன்னலம் குற்றம் வஞ்சம் எனப்பல‌ சொற்கள் குறித்தது பேரகாதி   அதுவல்ல எமதிழிவு ஒத்தாரையும் மிக்காரையும் உனைத் துதிக்கச் சொன்னாய் கூர்மதி போற்றல் தியாகம் தழும்பு விழுப்புண் விழாதபுண் என மாற்றுப் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கல்லும் கவியும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் மனதறிந்து குலவுகிறது காற்று   மரங்களுக்கும் மறுப்பில்லை முன்னிரவில் சிலம்பிய புட்களெல்லாம் பசியாறி சிறகோய்ந்து இறகின் கதகதப்பில் பார்ப்புகளைச் சேர்த்தணைத்து நாளைய பறப்பின் தூரங்களை காத்திருக்கும்     பாம்புகள் வீடு தோறிரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றராய் தேரையும் சுண்டெலிகளும் பறவை முட்டைகளும் தேடி ஊர்வது காண மனதிரங்கும் கையும் காலும் சிறகும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

முப்பால்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அதரப்பால் கொங்கைப்பால் யோனிப்பால் என்றனர் முப்பாலதனை மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருந்தாலும் அறம் பொருள் இன்பம் அதுவேயாமோ காதல் கரையிலாப் பரவச நிலையெனில் காமம் செப்பினால் பித்தப் பெருநிலை பேயும் நோயும் அன்றென்றான் குறுந்தொகைப் புலவன் கள்ளுங் காமமும் தனித்த பெருங்கொடை சிற்றின்பம் என்பதும் பேரின்பமாகும் மனத்தின் மெய்யின் உயிரின் சங்கமம் பறித்தும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உவமைக்கு என்ன பஞ்சம்?

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன்   காசற்ற பூசலார் கருத்தினில் சமைந்து விரிசடைக் கடவுட்கோர் பொற்றளி மொகலாய மன்னனின் கண்ணீரில் உயர்ந்தது யமுனைக் கரைதனில் அமரக்கோயில் தலையலங்காரம் புறப்பட்டதே என்ற கம்பனின் அருமை மைந்தன் தலை கொய்து வெட்டினார் துன்பியற் காதற்கேணி   செங்கோட்டு யாழினில் மீட்டியும் வேய்குழல் ஊதியும் ஓவியத்து எழுதவொண்ணா உருவத்தை தீட்டியும் திக்கெட்டும் அலைந்தார் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

காமம் செப்பாது…..முழுதும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பாசம் நேசம் பரிவு அன்பு நட்பு பிரியம் பிணைப்பு கனிவு கரிசனம் யாவற்றினுள்ளும் சுருண்டு கிடக்கும் காமம் என்னும் ராஜ வெம்பாலை நலிந்து வசமாய் வாய்த்த வட்டம் பிரிய ஊக்கம் அற்று படம் விரித்து கூசி நின்றது   காதல் எனும் சொல்லுரைக்க பிளவு பட்ட நா நீட்டித் துழாவும் சரசரவெனச் சுருள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காமம் செப்பாது

    நாஞ்சில் நாடன்   பாசம் நேசம் பரிவு அன்பு நட்பு யாவற்றினுள்ளும் சுருண்டு கிடக்கும் காமம் என்னும் ராஜ வெம்பாலை நலிந்து வசமாய் வாய்த்த வட்டம் பிரிய ஊக்கம் அற்று படம் விரித்து கூசி நின்றது    காதல் எனும் சொல்லுரைக்க பிளவு பட்ட நா நீட்டித் துழாவும் சரசரவெனச் சுருள் பிரியும் … Continue reading

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில்நாடனின் கவிதைகள், பச்சை நாயகி | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக