Tag Archives: நிலவெளி

ஓடும் செம்பொன்னும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, ஊதியூதி, நான்கு அகப்பை அதிகமாகவே குடித்த களைப்பில் இருந்தார். தோய்ந்த கலவி முடிந்த களிப்பும் சோர்வும் தெரிந்தது முகத்தில். ‘கலவியாம், முயக்கமாம், புணர்ச்சியாம், உவப்பாம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பூப்பட்டால் நோகும் பொன்னுந் திருமேனி’ என்ற சொலவம் என்  அம்மை சரசுவதியால் அடிக்கடி சொல்லப்படுவது. பூவிதழ் ஒன்று பட்டால்கூட, பொன் போன்ற திருமேனி நொந்து போகுமாம் சிலருக்கு. மலையாளத்திலும் இந்த சொலவம் உண்டு. அஃதென்ன, பொன்மேனி என்றால் பூவினும் மென்மையான மேனி  என்பது? பொன் மென்மையான உலோகமா? இங்கு பொன் என்றால் நிறத்துக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

முள்மரம் கொல்க!

This gallery contains 7 photos.

’இளையதாக முள்மரம் கொல்க’ என்றானே வள்ளுவ பேராசான்! திருவள்ளுவருக்குக் காவி உடுத்துவதா, உருத்திராக்கம் பூணுவதா, பூணூல் போடுவதா, அவர் சமணரா, கிறித்துவரா, மழிப்பதா, நீட்டுவதா என்பதில் மட்டும்தானே நம் கவலை! எமது பண்பாட்டுச் சிறப்பு என்று புல்லரித்துப் புளகப்பட்டு, இறவன் கோயில் எல்லாம் ஏறி இறங்கி, பிரசாதம் வாங்கி நக்குவது அன்றி நாம் கொன்ற முள்மரம் … Continue reading

More Galleries | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

இது நம் நாடு!

This gallery contains 1 photo.

மக்களே! குளம் தூரெடுங்கள், வீடு பெருக்குங்கள், சாலை செப்பனிடுங்கள், சாக்கடை தள்ளுங்கள், பேருந்துப் பழுது நீக்குங்கள், மருத்துவமனை கழுவுங்கள், பள்ளி இடிபாடு செப்பனிடுங்கள், மாணவருக்கு வகுப்பெடுங்கள், நெரிசலை நெரிப்படுத்துங்கள், இருட்டில் விளக்கேற்றுங்கள், இருட்டை  கண்காணியுங்கள், பழுதான பாலம் பராமரியுங்கள், கோயில் பேணுங்கள், கடவுள் சிலை காவல் செய்யுங்கள், தேங்கிக் கிடக்கும் வழக்குகளில் தீர்ப்பெழுதுங்கள்! அரசு என் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பண்டன்று பட்டினம் காப்பு!

This gallery contains 7 photos.

நான்கு தமிழ்ச் சொற்கள் கொண்டது இந்தக் கட்டுரைத் தலைப்பு. பண்டு, அன்று, பட்டினம், காப்பு என்பவை அவை.

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக