Tag Archives: நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

அம்மை பார்த்திருந்தாள் (சிறுகதை)

This gallery contains 3 photos.

நாஞ்சில் நாடன் ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில் இறங்கிப் பல் தீற்றி, வாய் கொப்பளித்து முகம் கழுவியாகிவிட்டது. கிழக்கு நோக்கித் தாழக்குடிக்குப் பிரியும் கப்பிச்சாலையின் ஓரத்தில் குத்த வைத்து வெளிக்குப் போய், நாச்சியார் புதுக்குளத்தில் இருந்து தத்திப் பாய்ந்துவரும் ஓடையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

பாவலர் தெங்கரைமுத்துப் பிள்ளை

This gallery contains 1 photo.

தெங்கிரிமுத்து என்று விளிப்பார் அவரை. வயதொத்தவர் தெங்கிரி என்றும். எமக்கவர் தெங்கிரிமுத்துப்பாட்டா.கொஞ்சம் விடம் என்றாலும் கைகால் முடக்காது, ஆளை வேக்காடும் வைக்காது. பெயர்த் திரிபின் இலக்கணக் குறிப்பு எழுதச் சொல்வோர், அவர் பெயரைத் தென்கிரி முத்து எனத் திருத்துவார்.கிரி எனில் மலை என உரையும் எழுதுவார். எடுத்துக்காட்டாகக் கைலயங்கிரி, சிவகிரி, என்று மேற்கோள் காட்டுவார். தென்கிரி … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தெரிந்த நாவல்-தெரியாத கதை | என் தாத்தாதான் கந்தையா நாஞ்சில் நாடன்

This gallery contains 3 photos.

நான் எழுதிய நாவல்கள் ஆறு. அதில் ஐந்து நாவல்கள் என்னுடைய சொந்த அனுபவம் மற்றும் அதன் நீட்சி. ‘மாமிசப் படைப்பு’ எனது சொந்த அனுபவம் அல்ல. என்னுடைய மூதாதையரின் கதையைப் படைப்பாக்கினேன். அதில் வரும் முக்கிய கதாபாத்திரமான கந்தையா, என்னுடைய அப்பா தாத்தா. அவர் பெயர் சுப்பிரமணிய பிள்ளை. அவர் என்னுடைய அப்பாவுக்குத் திருமணம் ஆவதற்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 5 பின்னூட்டங்கள்

உபநெல்லும் ஊரையும்

This gallery contains 21 photos.

நெல்லைத் தூற்றி, சண்டு சாவி நீக்கினால்தான் அதற்க்கு மரியாதை. சண்டு எனில் பதர் எனலாம். ‘மழை’ பாடலில் பாரதி, ‘வானத்துத் தேவர் செண்டு புடைத்திடுகின்றார்’ என்று பாடுவதன் சரியான பொருள் எவரும் சொல்லுங்கள் ஐயா!மிளகாய் வற்றலில் சண்டு வற்றல் எனத் தரம் குறைந்த அயிட்டம் உண்டு. அது விலை குறைவானது. சாவி என்பதோ உள்ளீடற்றது. மறுபடி … Continue reading

More Galleries | Tagged , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை – விடைமுகம்

This gallery contains 4 photos.

கவிதை, சிறுகதை, நாவலில் பேசப்படும் தகவல்கள் கூட, தகவல்கள் எனும் அடிப்படையில் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். வைகாதி மாதம் புளி பூத்திருந்தது என்றோ மாசி மாதம் புன்னை காய்த்திருக்கும் என்றோ எழுதினால் அந்தப் பருவத்தில் அது நடைமுறையாக இருக்க வேண்டும். இயற்கை என்றும் பிழைப்பதில்லை அல்லவா?           புனைவிலேயே தகவல் பிழை இருக்கலாகாது எனும்போது கட்டுரையில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் தாமும் பிறரும்

This gallery contains 13 photos.

தன்னம்பிக்கை அற்ற, நோக்கத் தெளிவற்ற அல்லது நோக்கமேயற்ற, முயற்சி அற்ற, கடும் உழைப்பு அற்ற, பழமையில் மரியாதையும் புதுமை எதுவென்ற பிரித்தறி ஆற்றலும் அற்ற இந்தச் சமூகம் நேற்றைச் சுமந்துகொண்டு நாளையை நோக்கி நகரப் பிரயத்தனப்படுகிறது. இந்தச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட சிலருக்கு அது புலப்படுகிறது. ஆனால் வெகுசனத்துக்குப் புலப்பட வேண்டும். தன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நுண்தகவல்களும் நாஞ்சிலும்- ஜெயமோகன்

This gallery contains 1 photo.

ஜெயமோகன்   நாமறியும் தகவல்களுக்கு இருமுகம் உண்டு. முக்கியமான, பெரிய தகவல்கள். சாதாரணமாக ஒருவரால் கவனிக்கப்படாத நுண்தகவல்கள். ஓர் இடத்துக்கு மூன்றுவயதுக் குழந்தையைக் கூட்டிச்சென்றால் நாம் காணாத ஒன்றை அது கண்டு சொல்லும் என்பதை கவனித்திருக்கிறேன்   ஒரு கடையில் சைதன்யாவுக்கு சாக்லேட் எடுத்துக் கொடுக்க கடைப்பெண்ணிடம் கேட்டேன். சாக்லேட் எடுத்தபோது நாலைந்து பொருட்கள் நழுவி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் உணவுப் பழக்கங்களும் பிறவும்

This gallery contains 13 photos.

நாஞ்சில் நாடன்.. “உணவு சமைப்பதில் பெண்களுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. மேலும் சுவையில் ஒத்திசைவு இருக்கும் விதத்தில் சமைத்தனர். இன்ன குழம்புக்கு இன்ன தொடுகறி என்பது போல. வாய்வு, பித்தம் கூட்டும் காய்கறிகளைச் சமனப்படுத்த தேவையான சேர்மானங்கள் செய்தனர். எடுத்துக்காட்டாக சக்கை எனப்படும் பலாக்காய் புளிக்கறிக்கு நல்ல மிளகு சேர்த்து அரைக்க வேண்டும் என்பது போல. … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் விவசாயமும் தொழிலும்

This gallery contains 14 photos.

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் அடிப்படைத் தொழில் விவசாயம். அதனினும் மரபு ரீதியாக மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனைப் பற்றிக் கட்டுரையில் நாஞ்சில் நாடன் மிகவும் விளக்கமாகக் கொடுத்திருக்கிறார். விவசாயம் சார்ந்த சொற்களாக, படம், படங்கு, தரங்கு, சுற்றுப்பூண், சைரு வேப்பந்தாங்கி என்று பட்டியலிடுகிறார். நாஞ்சில் நாடன்    ……….. …………….. ……… ……….. …………. …………… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கல்வியும் இளைஞர்களும்

This gallery contains 5 photos.

கிழக்கே ஆரல்வாய்மொழிக் கோட்டைக்கும், மேற்கே பன்றி வாய்க்காலுக்கும், தெற்கே மணக்குடிக்கும், வடக்கே மங்கலம் எனப்படும் குலசேகரத்துக்கும் இடைப்பட்ட பூமி என நாஞ்சில்  நாட்டைச் சொல்வார்கள். உத்தேசமாகச் சொன்னாலும் இன்று நாஞ்சில் நாடு என்று வழங்கப்பெறுவது கன்னியாகுமரி மாவட்டத்தின் வடகிழக்கே அமைந்த தோவாளைத் தாலுகாவும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவின் சில பகுதிகளுமே ஆகும். பிற மாவட்ட அரசியல், கலை, … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டுப் பெண்கள்

This gallery contains 11 photos.

  “பாதுகாப்பு” என்ற பெயரில் பெண்களைச் சிறை வைத்திருந்தனர் வெள்ளாளர். அவர்கள் மரபுரீதியான உணவுப் பழக்க வழக்கங்களையே மேற்கொண்டதாகப் பதிவு செய்கிறார் நாஞ்சிலார்.   “உணவு சமைப்பதில் பெண்களுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. மேலும் சுவையில் ஒத்திசைவு இருக்கும் விதத்தில் சமைத்தனர். இன்ன குழம்புக்கு இன்ன தொடுகறி என்பது போல. வாய்வு, பித்தம் கூட்டும் காய்கறிகளைச் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் கலை ஈடுபாடுகள்

This gallery contains 9 photos.

கோடைக் காலங்களில் கோவில்களிலும் வீட்டுப் படிப்புரைகளிலும் கம்ப இராமாயண வாசிப்பு இருந்திருக்கின்றது. திருவிழாக் காலங்களில் இசைக் கச்சேரிகள் நடந்தேறி இருக்கின்றன. அவர்களுக்கு இசையறிவும் இருந்திருக்கின்றது என்று கூறுகிறார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர்களின் மரபு ரீதியான மொழியறிவு, இசையறிவு எல்லாம் அறுபட்டுப் போனதற்குத் திராவிட இயக்கங்களின் தாக்கம் ஒரு முக்கிய காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கைவசமிருந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் அரசியல்

This gallery contains 10 photos.

  (“கவிமணி ஒரு ‘மான்மியம்’ படைத்தார். நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயம் ஒரு திருப்பங்கண்டது. சமுதாயத்தை மற்றொரு திருப்பத்துக்குச் சித்தப்படுத்துவது நாஞ்சில் நாடனின் இந்த ‘இரண்டாம் மான்மியம்’ சமுதாயத்தின் மூத்த தலைமுறையைச் சப்புக் கொட்ட வைத்து, அடுத்த தலைமுறையைச் சிந்திக்க வைத்து, இளைய தலைமுறையைச் சீண்டிவிட்டு, அனைவரையும் செயற்படத் தூண்டுகிறது இந்நூல்” என்று த. வேலப்பன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் மொழி

This gallery contains 5 photos.

ஒரு சமூகம் வழிவழியாகக் கொண்டிருக்கும் நெறிகளின் அடிப்படையில் அச்சமூகம் நோக்கிப் பேசுபவர்கள் ஒருவகைப் படைப்பாளிகள். இவர்களை அச்சமூகத்தின் குலக்குழு பாடகர்கள் என்று அடையாளப்படுத்தலாம். நாஞ்சில் அத்தகையவர். (ஜெயமோகன்) sisulthan            

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வழிபாடுகளும் சடங்குகளும்

This gallery contains 10 photos.

 எனது கிராமத்தை உணர ஆரம்பித்திருந்த வாழ்க்கையை,சீரழிவுகளை,சிறப்புகளைப் பற்றி எனக்கு சொல்ல நிறைய இருந்தது. நாவல் என்பது கதை சொல்வதல்ல என்ற அறிவிருந்தது. நன்றாக உணர்ந்திருந்த வாழ்க்கையை கலையாகப் படைக்க முயற்சி செய்து கொண்டிருக்கும்போது அந்த வாழ்க்கையின் சகல சாராம்சங்களையும் சொல்லிவிடுவது எனக்கு அவசியமாக இருந்தது. நாஞ்சில் நாடன் பிற பகுதிகள்: நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் ஊர் அமைப்பு

நாஞ்சில் நாடன் படம்: ஜீவா எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளக் குடிகள்

(யாழ்ப்பாண வெள்ளாளரிடையே வழங்கும், ‘இருவழியும் தூய வந்த வேளாளன்’ என்ற பிரயோகத்தையும் இங்கு நினைவு படுத்திக்கொள்ளலாம். தப்பித்தவறி மக்கள்வழி வெள்ளாளன் மருமக்கள் வழியில் பெண் எடுக்க நேர்ந்தால் அவர்களின் வழித் தோன்றல்கள் ‘இரு சாதிக்குப் பொறந்தது’ எனும் வசவுக்கு ஆளாயினர்.) நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை-2 நாஞ்சில் நாடன் ஓவியம்: ஜீவா எஸ் ஐ சுல்தான்

Posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை

நாஞ்சில் நாடன் ஒளவையார் அம்மன் கோவில் பட உதவி: பாலா, சிங்கப்பூர் ஓவியம்: ஜீவா

Posted in அனைத்தும், நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை, நாஞ்சில்நாடன் கட்டுரைகள் | Tagged , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்