Tag Archives: நாஞ்சில் நாடன்

நதியின் பிழையும் நாஞ்சில் நாடனும்

This gallery contains 1 photo.

குமரன் கிருஷ்ணன் நன்றி: பதாகை: https://padhaakai.com/2015/04/27/nadhiyin-pizhai/ நீங்கள் வசதியானவரென்றால் உங்களுக்கே உரித்தான குளுகுளு காரிலோ, அல்லது நீங்கள் நடுத்தர வர்க்கத்தின் திரிசங்கு சொர்க்கத்தில் திரிபவ‌ரென்றால் சொகுசு பேருந்திலோ ரயிலிலோ செல்லும் பொழுது, பரந்து விரிந்திருந்தாலும் வறண்டு கிடக்கும், காவிரியையோ, கொள்ளிடத்தையோ, தாமிரபரணியையோ கண் கொட்டாமல் பார்க்கும் பொழுது, கையிலிருக்கும் “cauvery” “vaigai” போன்ற லேபிள்கள் ஒட்டிய‌ … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓசை பெற்று உயர் பாற்கடல்

This gallery contains 1 photo.

கர்நாடக சங்கீதம் என்று பரவலாக அறியப்படுகிற தென்னிந்திய இசையினை முறையாகக் கற்கும் பேறு பெற்றவனில்லை. பள்ளி நேரம் அல்லாத வேளைகளில் வயிற்றுப் பாட்டுக்காகக் கூலி வேலைக்குப் போகிறவன், இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆடும் நோக்கத்துடன் இலக்கங்கள் பல ஆண்டுக்குக் கொடுத்து பயிற்சி பெற முடியாதல்லவா? ஆனை தூறுகிறது என்று ஆட்டுக்குட்டி தூறினால் அண்டம் கீறிப் போகாதா? … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்

வல் விருந்து

This gallery contains 1 photo.

வல் விருந்து வாசு பாலாஜி நாஞ்சில் நாடனை முதலில் எப்போது வாசித்தேன் என்பது நினைவில் இல்லை. வாழ்க்கைச் சுழலில் முங்காமல் முழுகாமல் ‘மிதவை ’ பற்றி நீந்தி ‘சதுரங்க குதிரையில்’ ஏறி ‘எட்டுத் திக்கும் மதயானைகளை’ வீழ்த்தி ஆசுவாசமாகி திரும்ப நாஞ்சில் நாடனை கண்டடைந்தபோது வருடங்கள் ஓடியிருந்தன.             புத்தகக் கண்காட்சியில் முதன் முறையாக வாங்கிய … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உண்டி முதற்றே உலகு!

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில சிறுகதைகள், கட்டுரைகள் வாசித்து ஷா நவாஸ் எனும் பெயரை ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது அறுபத்தெட்டாவது வயதில் முதன் முறையாக சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் அழைப்பின் பேரில் திருமதி. சித்ரா ரமேஷ் அவர்களின் விருந்தினராக 2016 மார்ச் மாதம் சென்று சில நாட்கள் தங்கியிருந்தபோதுதான் அவரை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அநேகமாகத் தினமும் சந்தித்து உரையாடினோம். அப்போது எனக்கவர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

”இடலாக்குடி ராசா” ஒலிக் கதை

கதை சொல்வது: மாலதி சிவராமகிருஷ்ணன்

Posted in அசை படங்கள், அனைத்தும், நாஞ்சில்நாடனின் கதைகள் | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

முனியும் முனியும்

This gallery contains 2 photos.

முனியும் முனியும் – நாஞ்சில் நாடன் அம்மன் நெசவு, மணல் கடிகை, மனைமாட்சி எனச்சில அற்புதமான நாவல்களை எழுதிய எம். கோபாலகிருஷ்ணனின் சிறுகதைத் தொகுப்புகள் ‘பிறிதொரு நதிக்கரையில்’ தொடங்கி சில உண்டு. அவற்றுள் ஒன்றின் தலைப்பு முனிமேடு. யாவுமே தமிழினி வெளியீடுகள். நமது தீப்பேறு யாதெனின் முதல்தரத்து நூல்கள் எவையும் விருதுகள், பரிசுகள், கௌரவங்களைத் தீர்மானிக்கிறவர் கண்களில் படவே மாட்டா! ஏனெனில் முதல்தரத்துப் படைப்பாளிகள் எவருமே ஆள்பிடிக்க … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நகுமிளகாய்

This gallery contains 1 photo.

ராஜசுந்தரராஜன் https://padhaakai.com/2015/04/27/nagumilagai/ “எழுத்தாளன் பென்ஷன் வாங்கமாட்டான். சாவது வரைக்கும் எழுதலாம். அதனாலதான் சாகப்போற காலத்திலே தீவாளிமலர் பொங்கல்மலர்னு கதை கேப்பான். … சின்னப் புள்ளையோ இப்பம் எம்புட்டு நல்லா எழுதுகு… அவாள் கதைகளை எங்கயாம் மலருல பாத்திருக்கேளா?” இது நாஞ்சில் நாடனின் ‘கதை எழுதுவதன் கதை’யில் எழுத்தாளர் கும்பமுனி பேசுவதாக வருவது. ‘நாஞ்சில் நாடன் சிறப்பிதழ்’க்காக … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தனிமைச் சேவலின் பயணம்

This gallery contains 1 photo.

சதுரங்கக் குதிரை – தனிமைச் சேவலின் பயணம் சுரேஷ் கண்ணன் நன்றி:- https://padhaakai.com/2015/04/27/chathurnga-kuthirai/ நாஞ்சில் நாடன் எழுதிய புதினங்களிலேயே மிக உன்னதமானது ‘சதுரங்க குதிரை’ என்பது என் தீர்மானமான மதிப்பீடு. 1993- ல் வெளியான இது அவருடைய ஆறாவது புதினம். சுய அனுபவங்களோ அல்லது கண்டு கேட்டறிந்தவைகளோ, அவரது ஒவ்வொரு புதினங்களும் கண்ணுக்குத் தெரியாததொரு மாயக்கயிற்றால் கட்டப்பட்டவை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தத்து

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் முத்து, வித்து, சொத்து, சத்து, பித்து, மத்து என்பல போல் ஒலிக்கும் இன்னொரு சொல் தத்து. திசைச் சொல்லோ, திரி சொல்லோ, வட சொல்லோ அல்ல. இயற்சொல்தான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்முடன் வாழும் செந்தமிழ்ச்சொல். என்றாலும் தமிழ் கற்ற கர்வத்துடன் வினவுகிறேன் ஐயா! தத்து என்றால் என்ன பொருள்? இந்த இடத்தில் கட்டுரை … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தக்காரும் தகவிலரும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் பதாகை – ஆகஸ்ட் 2020 எனக்கின்று ஓர்மையில் இருக்கும் திருக்குறளில் பாதிக்கு மேல் ஆறாம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் பயின்றவை. தமிழ்நாட்டு அரசியல் அறிவுச் சூழலுக்கு இயைந்து எனக்குமோர் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ பட்டம் தரலாம். ஆறாவது முதல் எட்டாவது வரை ஒழுகினசேரி எங்கோடிச் செட்டியார் தமிழாசிரியர். ஒன்பது முதல் பதினொன்று வரை தாழக்குடி மாதேவன் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஓடும் செம்பொன்னும்

This gallery contains 1 photo.

நாஞ்சில் நாடன் கும்பமுனி சார்வாளுக்கு மார்பிலும் முகத்திலும் வியர்வை பொடித்திருந்தது. கொதிக்கக் கொதிக்க உளுந்தங் கஞ்சியும், வறுத்தரைத்த துவையலும், கருப்பட்டித் துண்டுமாக, புதியதாய் உடைத்துத் துருவிய தேங்காய்ச் சிரட்டையில் ஊற்றி, ஊதியூதி, நான்கு அகப்பை அதிகமாகவே குடித்த களைப்பில் இருந்தார். தோய்ந்த கலவி முடிந்த களிப்பும் சோர்வும் தெரிந்தது முகத்தில். ‘கலவியாம், முயக்கமாம், புணர்ச்சியாம், உவப்பாம்… … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

பொலியோ பொலி!

This gallery contains 2 photos.

பழைய சினிமாக்களில், கதைகளில், பெற்ற தாய் அடம்பிடிக்கிற, சேட்டை செய்கிற மகனைப் பார்த்துப் “பொலி போட்டிருவேன்” எனச் சினந்து உரைப்பதைக் கேட்டிருப்போம். அந்தச் சொற்றொடர் எம்மண்ணின் பிறப்பு அல்ல. மாறாக, “வெட்டிக் கூறு போட்டிருவேன்” அல்லது “கொண்ணே போட்டுருவேன்” என்பார்கள். முரண்டு பிடிக்கும் சொந்தப் பிள்ளைகளை வெருட்டும்போது இந்தப் பொலி போடுதல், வெட்டிக் கூறு போடுதல், … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

உண்டால் அம்ம!

This gallery contains 10 photos.

உண்டால் அம்ம! நாஞ்சில் நாடன் வெறுங்காலுடன் நடப்பது கூசியது. வாழ்க்கையில் முதல் முறை செருப்புப் போட்டதே கல்லூரிக்குப் புறப்பட்ட முதல் நாளில்தான். புதுச்செருப்பு கடிக்கவும் செய்தது. அதுவரை செருப்பு இல்லாமலேதான் ஒன்றாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை வாசித்தது. ஆற்றங்கரை,  குளத்தங்கரை,  வயல் வரப்புகள்,  திரடுகள்,  பொத்தைகள்,  குன்றுகள் என அலைந்தது. நான்காண்டுகள் பம்பாய் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நாஞ்சிலின் நறும்புனல்

This gallery contains 1 photo.

சுனில் கிருஷ்ணன் நன்றி: பதாகை நாஞ்சிலின் நறும்புனல் மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு முன், முதன்முறையாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய ஊட்டி முகாமில்தான் திரு நாஞ்சில் நாடன் அவர்களைச் சந்தித்தேன். தமிழினி ‘வெளியிட்ட நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ எனும் ஒரேயொரு கட்டுரை தொகுப்பு மட்டுமே அப்போது வாசித்திருந்தேன். பள்ளியில் தமிழ் பயிலாதவன். ஆகவே மரபிலக்கியம் வாசிக்கும் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

வயாகரா

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி விடுமுறை நாளொன்றில் ஏதோ வாசித்துக் கொண்டிருந்தேன். பல காலமாக நமக்குப் படிக்காத நாளெல்லாம் பிறவா நாளென்று ஆகிவிட்டது. அண்மையில் கோவை மாநகரில் 88 வயதான மூத்த படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், பறவைகள் ஆய்வாளர் பேராசிரியர் க. ரத்தினம் அவர்களின் பாராட்டு விழாவுக்குப் போயிருந்தேன். பாரம்பரியம் மிக்க அரசு கலைக் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மைசூரில் கும்பமுனி

This gallery contains 1 photo.

சோழகக்கொண்டல் நன்றி: பதாகை:- https://padhaakai.com/2015/04/27/kumbamuni-at-mysore/ பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை முடித்துவிட்டு வேலையின்றி வேலையை எதிர்பார்த்து மைசூரில் தங்கியிருந்த காலம். வீட்டிலிருந்து பணம் வருவதும் பெறுவதும் இழிநிலை என்று நினைத்த லட்சியவாத காலம் என்றும் சொல்லலாம். அனுப்பும் அளவிற்கு வருமானம் வீட்டில் யாருக்கும் இல்லையென்று உண்மையையும் சொல்லலாம். இருந்த அரை ஏக்கர் நிலத்தையும் அடகு வைத்துதான் முதுகலை … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கம்பன் காதலன்

This gallery contains 1 photo.

செந்தில்நாதன் நன்றி:-  https://padhaakai.com/2015/04/27/kamban-kadhalan/ நாஞ்சில் நாடன் சிறுகதைகள் தான் எனக்கு முதலில் பரிச்சயம். பின் அவரது நாவல்கள். கும்ப முனியின் கம்பன் ஈடுபாடு அவர் ‘கம்பனுக்குள் வந்த கதை’ கட்டுரைக்குப் பின் தான் தெரிய வந்தது. பள்ளிப் பருவத்தில் கம்பன் கழகப் போட்டிகளில் கலந்து கொண்டு சில பரிசுகள் வென்றது தான் அதற்கு முன் கம்பனுடனான … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கையளவுக் கடல்நீர்

This gallery contains 1 photo.

– திருமூர்த்தி ரங்கநாதன் – “உப்பு கரிக்கவில்லை, இனித்தது.” திரு. நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பான ‘உப்பு’ என்ற நூல் வெளியானபோது, அவர் தன் குருவாகக் கருதும் திரு. ரா.பத்மநாபன், நாஞ்சில் நாடனுக்கு எழுதிய ஒற்றை வரி விமர்ச்சனப் பதில்தான் மேலே உள்ளது! தமிழ் எழுத்தாளர்களை, “எழுதும் கதை, கவிதை, அல்லது கட்டுரைகளை வைத்து, அல்லது … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிஞ்ஞகன்

This gallery contains 2 photos.

நாஞ்சில் நாடன் தருமமிகு சென்னையில் இருந்து எமது நாற்பதாண்டு குடும்ப நண்பர் வைத்தியநாதன் காலையில் கூப்பிட்டார். அவரைச் சிறிதாக அறிமுகம் செய்வதானால், அவர் மதுரை மகா வைத்தியநாதய்யரின் தம்பியின் கொள்ளுப் பேரன். அவர் பெயரைத்தான் இவருக்கு வைத்திருக்கிறார், இவரது தந்தை சென்னையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சிவசாமி ஐயர். நன்னூல் மனப்பாடமாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். பழந்தமிழ் நூல்களில் நல்ல பயிற்சி உண்டு. சென்னை மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

கற்பனவும் இனி அமையும் 3

This gallery contains 2 photos.

கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல் நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில் முன்பகுதிகள்:  கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1 கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2 சுரேஷ்: நண்பர்கள் சில கேள்விகளை அனுப்பியிருக்காங்க. அதையும் பார்க்கறீங்களா? நாஞ்சில் நாடன்: அப்படியே கேட்டுருங்கேன். பேசிடுவோம். (ஸ்ரீதர் நாராயணன்): உங்கள் எழுத்து … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குருமுனி- தமிழ்மகன்

This gallery contains 2 photos.

‘குரு’ முனி! தமிழ்மகன் நன்றி- பதாகை: https://padhaakai.com/2015/04/27/guru-muni/ “தீதும் நன்றும்” , நதியின் பிழையன்று நறும்புலன் இன்மை, எட்டுத் திக்கும் மதயானை,சூடிய பூ சூடற்க… இந்தத் தலைப்புகளில் கிடைக்கிற காவியச் சுவையை இலக்கியம் அறிந்தோர் நன்கு உணர்வர். தமிழ் இலக்கணமும் இலக்கியமும் நன்கு அறிந்தவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருடைய ஒவ்வொரு தலைப்புகளிலும் எனக்கு அந்த … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2

This gallery contains 2 photos.

கற்பனவும் இனி அமையும் – நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல் நேர்காணல்: த கண்ணன்,  வெ.சுரேஷ், அன்பழகன், செந்தில் முன்பகுதி :  கற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1 சுரேஷ்: பெனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துல நடந்ததப் பற்றி எழுதியிருந்தீங்க. அதையும் படிச்சேன். நாஞ்சில் நாடன்: நான் காஸ்மோப்பாலிட்டனாகத்தான் யோசிக்கிறேன். ஒரு இந்தியனாத்தான் யோசிக்கிறேன். ஆனா என்னைத் தமிழனா யோசிக்கிறதுக்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்